செய்திகள் :

ஜம்மு காஷ்மீர் : கடந்து வந்த பாதை; பிரிவு 370 நீக்கம்... எதிர்காலம்?

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

ஜம்மு காஷ்மீர் உலகளவில் இணையற்ற இயற்கை அழகுக்காகப் புகழ்பெற்றது, இது "பூமியின் சொர்க்கம்"  என அழைக்கப்படுகிறது. இமயமலை சிகரம் முதல் பசுமையான நதி பள்ளத்தாக்குகள் வரை பரந்து விரிந்திருக்கும் இதன் மாறுபட்ட புவியியல், வியக்கும்  வண்ணம் உள்ளது.

இயற்கை அழகுடன் இருக்கும் ஜம்மு காஷ்மீர், இயற்கையான அமைதியுடன் இருக்கிறதா? கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஜம்மு காஷ்மீரில் பதட்டமான சூழலுக்கு காரணம் என்ன? இதற்கான விடையை அறிய முனைவோம்.

ஜம்மு காஷ்மீர்:  1947 முதல் 1949 வரை

​1947-இல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றபோது, பல்வேறு சமஸ்தான ஆட்சியாளர்கள் எந்த நாட்டுடன் இணைவது என்பதைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.

காஷ்மீர் மகாராஜா ஹரி சிங் ஒரு இந்து ஆட்சியாளர்.  முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாநிலத்திற்குத் தலைவராக இருந்தார், அதனால் அவரால் முடிவெடுக்க முடியவில்லை. போக்குவரத்து மற்றும் பிற சேவைகளைப் பாகிஸ்தானுடன் பராமரிக்க அவர் "இயல்புநிலை ஒப்பந்தத்தில்" கையெழுத்திட்டார்.

​அக்டோபர் 1947-இல், ஜம்மு காஷ்மீரில் முஸ்லிம்கள் மீதான  தாக்குதல் மற்றும் ஹரி சிங் தனது முடிவை எடுக்காமல்  தாமதப்படுத்தியதாலும் பாகிஸ்தானைச் சேர்ந்த பழங்குடி மக்கள் காஷ்மீர் மீது படையெடுத்தனர். இதையடுத்து, ஹரிசிங் இந்திய ராணுவ உதவியை நாடினார். 

Bakkarwal or Bakrawala, are a nomadic ethnic group who along with Gaddis and Gujjars, have been listed as Scheduled Tribes in the Indian Union Territory of Jammu and Kashmir

காஷ்மீரை தற்காலிகமாக இந்தியாவுடன் இணைத்து , காஷ்மீர் மக்களின் வாக்கெடுப்பு நடத்தி அந்த முடிவை அமல்படுத்துவது அமைதிக்குச்  உதவும் என்று இந்தியாவின் அப்போதைய ஆளுநர் ஜெனரல், மவுண்ட்பேட்டன் நம்பினார்.

ஹரி சிங் அக்டோபர் 26, 1947 அன்று இந்தியாவுடன் இணைப்புக் கடிதத்தில் (Instrument of Accession) கையெழுத்திட்டார். இதன் மூலம் வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு கொள்கைகள் மீதான கட்டுப்பாட்டை இந்தியாவிடம் ஒப்படைத்தார்.

                இணைப்புக் கடிதத்தில் கையெழுத்திட்டது முதலில் நடந்ததா அல்லது இந்தியப் படைகள் நுழைந்தது முதலில் நடந்ததா என்பது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான ஒரு முக்கிய விவாதப் பொருளாக உள்ளது.

ஹரி சிங் முதலில் கையெழுத்திட்டதாக இந்தியா சொல்கிறது. அதன் பிறகு இந்திய படைகள் காஷ்மீரில் நுழைந்தது என்பது இந்தியாவின் வாதமாக  உள்ளது. பாகிஸ்தான், படைகள் வருவதற்கு முன் ஹரிசிங் கையெழுத்திட்டிருக்க முடியாது என்றும், எனவே ஹரி சிங் மற்றும் இந்தியா பாகிஸ்தானுடனான "இயல்புநிலை ஒப்பந்தத்தை” புறக்கணித்துவிட்டனர் என்பது பாகிஸ்தானின் வாதமாக உள்ளது.

Srinagar

காஷ்மீரின் நிலையைத் தீர்மானிக்க ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கோருகிறது. அதே நேரத்தில் அடுத்தடுத்து நடந்த இந்திய மாநில மற்றும் தேசியத் தேர்தல்களில் வாக்களித்ததன் மூலம் காஷ்மீரிகள் இந்தியாவுடன் இணைந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர் என்று இந்தியா வாதிடுகிறது. ஐ.நா.வின் கீழ் வாக்கெடுப்புக்குச் சாதகமான பல தீர்மானங்களைப் பாகிஸ்தான் மேற்கோள் காட்டுகிறது.

1947 இந்தியப்  பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் காஷ்மீர் நிலப்பரப்புக்காக இரண்டு போர்களை நடந்துள்ளன. காஷ்மீரை இரண்டு நாடுகளும் முழுவதுமாக உரிமை கோருகின்றனர்.1947 இல் நடந்த போருக்கு பிறகு காஷ்மீரை இரண்டு பகுதியாக பிரித்து ஒரு பகுதியை இந்தியாவும் மற்றொரு பகுதியை பாகிஸ்தானும் தான் எல்லைக்குள் வைத்துள்ளன.

காஷ்மீரின் மக்கள் தொகையில் இந்திய நிர்வாகத்தின் கீழ்  சுமார் ஒரு கோடி மக்களும், பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் 45 லட்சம் மக்களாகவும் பிரித்துள்ளனர். மேலும், வடக்கு காஷ்மீர் மற்றும் ஹன் என்ற இரண்டு சிறிய பகுதி பாகிஸ்தானால் உருவாக்சப்பட்ட  தன்னாட்சிப் பிரதேசத்தில் மேலும் 18 லட்சம் மக்கள் உள்ளன.

இந்தியப் படைகள் இந்த நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கை எடுத்துக் கொண்டன, மீதமுள்ள வடக்குப் பகுதியைப் பாகிஸ்தான் கைப்பற்றியது. 1950-களில் சீனா, காஷ்மீர் மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளை எடுத்துக்கொண்டது.

ஜம்மு காஷ்மீரில் 1949 முதல் 2018 வரை நடந்த முக்கிய அரசியல் நிகழ்வுகள்:

  • 1949: போர்நிறுத்தக் கோடு (Ceasefire Line) மூலம் காஷ்மீர் இந்தியா - பாகிஸ்தானுக்குள் பிரிக்கப்பட்டது.

  •  பிரிவு 370:  ஜனவரி 26 1950 முதல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 370 அமலுக்கு வந்தது, பிரிவு 370 ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அதிகாரத்தை வழங்கியது.

  • 1962: அக்சாய் சின் போரில் சீனா, இந்தியா இடையே நடைபெற்றது.

  • 1965: காஷ்மீர் தொடர்பாக இரண்டாவது இந்திய-பாகிஸ்தான் போர் ஒரு போர்நிறுத்தத்துடன் முடிவடைந்தது.

  • 1972:சிம்லா ஒப்பந்தம் மூலம் போர்நிறுத்தக் கோடு, அதிகாரபூர்வ "கட்டுப்பாட்டுக் கோடாக" (LoC) மாறியது.

  • 1980–90கள்: இந்திய ஆட்சிக்கு எதிரான காஷ்மீர் கிளர்ச்சி மற்றும் பாகிஸ்தான் ஆதரவுப் போராளிகளின் எழுச்சி ஏற்பட்டது.

  • 1999: கட்டுப்பாட்டுக் கோட்டைப் போராளிகள் கடந்ததால் கார்கில் மோதல் வெடித்தது.

  • 2008: 60 ஆண்டுகளுக்குப் பிறகு, கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் வர்த்தகப் பயன்பாட்டுக்கு  திறக்கப்பட்டது.

  • 2010: இந்திய நிர்வாகப் பகுதிக் காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

  • ஆகஸ்ட் 2019:  பிரிவு 370 நீக்கம்

ஆகஸ்ட் மாதம் 2019 இந்தியா முழுவதும் அதன் சுதந்திர தினத்தை கொண்டாடும் ஏற்பாடுகளில் இருந்தது. ஆனால் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அதிக பெரும்பான்மையோடு ஆட்சியில் இருந்த ஒன்றிய அரசு, சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு முன்பு ஜம்மு காஷ்மீர் பற்றிய முக்கிய முடிவை அறிவிக்கும் ஏற்பாட்டில் இருந்தது. அந்த அறிவிப்பு ஜம்மு காஷ்மீரில் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும்  என்பதை அறிந்திருந்த ஒன்றிய அரசு ராணுவ படைகளை அதிகமாக குவித்தது.

ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றம்

ஆகஸ்ட் 5, 2019 அன்று, இந்திய அரசாங்கம் அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 370-ஐ நீக்குவதாகவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்) பிரிப்பதாகவும் அறிவித்தது.   2019 இல் நாடு முழுவதும்   73 வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடியது. ஆனால் ஜம்மு காஷ்மீரில்  370 பிரிவை நீக்கிய பிறகு நடக்கும் முதல் சுதந்திர தினமாக  அமைந்தது.

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீரின் எதிர்காலம்:

ஜம்மு காஷ்மீரில் இருக்கும் போராட்டக் குழுக்கள், தனி நாடு கேட்கும் அமைப்புகள், ஜம்மு காஷ்மீரை பிரித்து தங்கள் எல்லைக்குள் வைத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான், இவர்களே ஜம்மு காஷ்மீரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் இடத்தில் உள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் இருக்கும் போராட்டக் குழுக்களும் தனிநாடு கேட்கும் அமைப்புகளும் ஆயுதங்களை விடுத்து ஜனநாயக முறையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தும் முறைக்கு மாற வேண்டும்.

அரசியல் சூழ்நிலையை புரிந்துகொண்டு தனிநாடு கேட்கும் பயங்கரவாத அமைப்புகள் அக்கோரிக்கையை கைவிட்டு மாநில சுயாட்சி என்ற கோரிக்கையை கையில் எடுப்பதே ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அவர்கள் செய்யும் நன்மை.

அறிஞர் அண்ணாவின் வழி..

தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா அவர்களின் நடைமுறையை பின்பற்றுவது ஜம்மு காஷ்மீர் மக்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய உதவும்.

1963 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 16-வது அரசியல் சாசனத் திருத்தம், இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிராகச் செயல்படும் அல்லது பேசும் கட்சிகளைத் தடை செய்ய வழிவகுத்தது. இச்சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, தி.மு.க. தனிநாடு கோரிக்கையைத் தொடர்ந்தால், அந்தக் கட்சி ஜனநாயக முறையில் தேர்தலில் போட்டியிடும் உரிமையையே இழக்க நேரிடும் என்ற நிலை ஏற்பட்டது. எனவே, ஜனநாயக வழியில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே தமது கொள்கைகளை நிறைவேற்ற ஒரே வழி என்று நம்பிய அண்ணா, சட்ட நெருக்கடியைத் தவிர்க்கவும், அரசியல் பாதையில் தொடர்ந்து பயணிக்கவும் தனிநாடுக் கோரிக்கையை முழுமையாகக் கைவிட்டார்.

அறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணா

எனவே, தனிநாடு என்பதற்குப் பதிலாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்புக்கு உட்பட்டு, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கோரும் "மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி" என்ற புதிய முழக்கத்தை அண்ணா முன்வைத்து, தி.மு.க.வின் இலக்கைத் திருத்தியமைத்தார்.

1967இல் நடந்த மாநில தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக அதிகாரத்தை கைப்பற்றியது.

1967 முதல் இன்று வரை தமிழ்நாட்டில் திராவிடக் கொள்கை கொண்ட கட்சிகளே ஆட்சியில் இருக்கின்றன. திமுக  தலைவர் அண்ணாதுரை அன்று தனிநாடு  கோரிக்கையை கைவிடுவது என்று எடுத்த விவேகமான முடிவே, அதிகாரத்திற்கு வந்து தங்கள் கொள்கையை நிறைவேற்றிக் கொள்ளும் பாதையாக அமைந்தது.

என்னை பொறுத்தமட்டில், அறிஞர் அண்ணாவை பின்பற்றி ஜம்மு காஷ்மீரில் உள்ள போராட்டக் அமைப்புகள் இந்திய இறையாண்மைக்கும்  ஒற்றுமைக்கும் எதிராக இருக்கும் கொள்கையை கைவிட்டு “மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி" என்ற கொள்கையுடன் பயணிக்க வேண்டும்.

தேர்தல் அரசியலில் ஈடுபட்டு ஜனநாயக முறைப்படி அதிகாரத்திற்கு வந்து இந்திய இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு உட்பட்டு  மக்கள் நலனுக்கான கோரிக்கையை  நிறைவேற்றிக் கொள்வதே சிறந்ததாக அமையும். அதே வேளையில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் ஆட்சியாளர்கள், ஜம்மு காஷ்மீர் எல்லை பிரச்சினையை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். 

                இயற்கை அழகுடன் இருக்கும் ஜம்மு காஷ்மீர் இயற்கையான அமைதியும் அடைய வேண்டும். கல்வி பொருளாதாரம் மற்றும்   சுகாதாரத்தில் மேம்பாடு அடைகிறது என்ற உணர்வை என் வாழ்நாளுக்குள் உணர்வேன் என்ற நம்பிக்கையுடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

நித்தமும் நினைவில் சுமந்து கொண்டே இருந்த நிகழ்வு! - மனதிற்கு அரிய மருந்தான மன்னிப்பு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ஜெய்சங்கர் படம் பார்க்க 10 கி.மீ., சைக்கிள் பயணம்! - நள்ளிரவு காட்சி தந்த த்ரில் அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கர்மாவும் நாயின் வாலும்! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அவர்கள் நம்மை விட 30 ஆண்டுகள் முன்னேறி இருக்கிறார்கள்! : ஒரு தமிழனின் வியப்பூட்டும் சீன அனுபவம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

புயல்களின் பெயர்களுக்குப் பின்னால் உள்ள ரகசியம்! - சுவாரஸ்ய தகவல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க