`புது ருசி, புது அனுபவம்' - சீனாவில் பிரபலமாகும் ` கரப்பான் பூச்சி காஃபி' - என்ன...
திண்டுக்கல்: அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் வீட்டில் ரெய்டு!
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி, திண்டுக்கல் வள்ளலார் நகரில் வசித்து வருகிறார். இன்று மதியம் அவரது வீட்டிற்கு வந்த ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ( Directorate General of GST Intelligence (DGGI) அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் நான்கு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு என்பது வரி ஏய்ப்பு, வரி விலக்கு மோசடி போன்றவற்றை விசாரிக்கும் ஒரு துறையாகும்.
ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடு, அவர் மகன் ஐ.பி.செந்தில்குமார், மகள் இந்திராணி வீடுகள் மற்றும் இவர்களுக்கு சொந்தமான இரண்டு மில்களில் அமலாக்கதுறையினர் சோதனை செய்தனர்.

இதில் இந்திராணியின் வீட்டில் மட்டும் சுமார் 15 மணி நேரம் ரெய்டு நடந்தது குறிப்பிடத்தக்கது.
















