"விருதுகள் என்பது போட்டியை ஏற்படுத்த அல்ல" - 'சிறந்த நடிகர்' விருதைப் பெற்ற மம்ம...
தெலங்கானா கோர விபத்து: ஜல்லிகளில் புதைந்த பேருந்து; 20 பயணிகள் பலி - முதல்வர் இரங்கல்
தெலுங்கானா மாநிலம் தந்தூரிலிருந்து ஹைதராபாத் நோக்கி நேற்று இரவு தெலங்கானா அரசு பேருந்து புறப்பட்டது. அந்தப் பேருந்தில் 70 பயணிகள் பயணித்தனர்.
பேருந்து செவெல்லா மண்டலத்தில் உள்ள மிர்சாகுடா கிராமத்திற்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே ஜல்லி கற்களை ஏற்றி வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது.
பயணிகளில் அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவலளித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக் குழுவினர் பொது மக்களின் உதவியுடன் பயணிகளை மீட்டனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை, ``மோதலின் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருந்ததால், லாரியின் ஜல்லிக்கற்கள் பேருந்து மீது விழுந்து, பல பயணிகள் கீழே சிக்கிக்கொண்டனர்.
இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இறந்தவர்களில் RTC பேருந்து, லாரி ஓட்டுநர்கள், தாயுடன் 10 மாத குழந்தை உட்பட பலர் உயிரிழந்திருக்கின்றனர்.
அவசரகாலக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று JCB இயந்திரங்களைப் பயன்படுத்தி உள்ளே சிக்கியவர்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் செவெல்லா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை இன்னும் மோசமாக இருப்பதால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.
வார இறுதி நாள் என்பதால் மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் என சுமார் 70 பயணிகள் அந்தப் பேருந்தில் சென்றதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்திருக்கிறது.
இந்த துயரச் சம்பவம் குறித்து தெலுங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி, `` இந்த துயர சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. உடனடி நிவாரண நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறு தலைமைச் செயலாளர் கே. ராமகிருஷ்ணா ராவ் மற்றும் காவல்துறை இயக்குநர் ஜெனரல் பி. சிவதர் ரெட்டி ஆகியோருக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.
காயமடைந்த அனைவரையும் தாமதமின்றி சிறந்த மருத்துவ சிகிச்சைக்காக ஹைதராபாத்திற்கு மாற்றுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டிருக்கிறேன்.
அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளிடம் பேசி, மீட்புப் பணிகளில் உதவ அனைத்து அரசுத் துறைகளும் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினேன்.
முடிந்தவரை பல உயிர்களைக் காப்பாற்ற போதுமான ஆம்புலன்ஸ்கள், அவசர மருத்துவக் குழுக்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைய வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறேன். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.


















