செய்திகள் :

நண்பர்களுடன் இருப்பது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குமாம் - ஆய்வு சொல்வதென்ன?

post image

எந்தவொரு செயலையும் தனியாக செய்வதை விட, நண்பர்களுடன் சேர்ந்து செய்யும்போது அதிக மகிழ்ச்சியை உணர்வதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சாதாரணமாக செய்யும் செயல் கூட பிறருடன் சேர்ந்து செய்யும்போது மகிழ்ச்சி அதிகரிப்பதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்கன் டைம் யூஸ் சர்வே (American Time Use Survey) இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்விற்காக 40,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

உணவு உண்பது, விளையாடுவது, பயணம் செய்வது, படிப்பது, நிதி மேலாண்மை செய்வது போன்ற 80-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான செயல்களை மக்கள் தனியாகவும், நண்பர்களுடனும் செய்யும்போது அவர்களின் மகிழ்ச்சி அளவு எவ்வாறு மாறுபடுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Friends

இந்த ஆய்வில் மேலும் ஒரு சுவாரஸ்யமான விஷயம் கண்டறியப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, சமையலறை மற்றும் உணவு தொடர்பான தூய்மைப் பணிகளை தனியாக செய்வதை விட மற்றவர்களுடன் சேர்ந்து செய்யும்போது மகிழ்ச்சி குறைவாக இருந்தது தெரியவந்துள்ளது.

இது தவிர மற்ற அனைத்து செயல்களிலும் மற்றவர்களின் துணை மகிழ்ச்சியை அதிகரித்துள்ளது. இந்த ஆய்வு நமது அன்றாட வாழ்வில் சிறிய சமூகத் தொடர்புகளை அதிகரிப்பதன் மூலம், நமது மகிழ்ச்சியை மேம்படுத்த முடியும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம் | Photo Album

அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை.அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை.அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை.அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப... மேலும் பார்க்க

பிரிந்து 24 ஆண்டுகள்! தொழில் தொடங்க பணம் கொடுத்த முன்னாள் காதலியை தேடும் சீன காதலர்

சீனாவில் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு கடன் கொடுத்த முன்னாள் காதலியைத் தேட, ஊடக உதவியை நாடியுள்ள சம்பவம் கவனம் பெற்று வருகிறது. லீ என்ற அந்த நபர், 24 ஆண்டுகளுக்கு முன்பு மா என்ற தனது முன்னாள் க... மேலும் பார்க்க

ஒரு சேஃப்டி பின் விலை ரூ.69,000 - பிராடாவின் புதிய தயாரிப்பால் வெடித்த விவாதம்!

பிரபல ஃபேஷன் பிராண்டான பிராடா (Prada) சமீபத்தில் ஒரு சேஃப்டி பின்னை ஃபின்னை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விலை சுமார் ரூ.69,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை... மேலும் பார்க்க

ஆந்திரா: மாணவிகளை மசாஜ் செய்யச் சொன்ன பள்ளி ஆசிரியை; சர்ச்சை வீடியோவின் பின்னணி என்ன?

ஆந்திராவில் ஆசிரியை ஒருவர் மாணவிகளைக் கொண்டு தனது கால்களை பிடித்துவிட செய்த சம்பவம் வைரலாகி இருக்கிறது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பந்தபல்லி என்ற கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசி... மேலும் பார்க்க

பஞ்சாப்: நண்பரிடம் ரூ.500 கடன் வாங்கி லாட்டரி; காய்கறி வியாபாரிக்குக் கிடைத்த ரூ. 11 கோடி பரிசு

ராஜஸ்தான் மாநில வியாபாரி ஒருவருக்கு லாட்டரியில் ரூ.11 கோடி கிடைத்து இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் அமித் செஹ்ரா. காய்கறி வியாபாரியான அமித், பஞ்சாப் மாநில லாட்டரி வாங்க அமித்திடம... மேலும் பார்க்க

Check-Olate: சாக்லேட்டை சுகாதார நினைவூட்டியாக மாற்றிய அப்போலோ குழுமம்!

"இது வெறும் சாக்லேட் மட்டுமல்ல; ஒவ்வொரு பெண்ணையும் தனக்காக ஒரு கணம் ஒதுக்கிக்கொள்ளத் தூண்டும் ஓர் அக்கறையான நினைவூட்டல்."அக்டோபர்2025:மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு மாதம் அனுசரிக்கப்படும் நிலையி... மேலும் பார்க்க