செய்திகள் :

`நான் செய்ததை மத்தவங்க செய்யணும்னு இல்லையே!' - 'ஆடுகளம்','இலக்கியா' தொடர்களில் இருந்து விலகிய சதீஷ்

post image

சன் டிவியில் 'ஆடுகளம்', 'இலக்கியா' கலைஞர் டிவியில் 'கௌரி' என ஒரே சமயத்தில் முன்று சீரியல்களில் நடித்து வந்த நடிகர் சதீஷ் சன் டிவி சீரியல்களில் இருந்து விலகியிருக்கிறார். 'ஆடுகள'த்தில் சதீஷுக்குப் பதில் 'சூப்பர் குட்' கண்ணன் கமிட் ஆகியிருக்கிறார்.

'என்ன நடந்ததாம்? சதீஷிடமே பேசினோம்.

சுந்தரி சீரியல்

''சீரியல்கள்ல 'இவருக்குப் பதில் இவர்'னு வருமே, அந்த ஒரு சூழலை நான் விரும்பறதில்லை. ரொம்ப கஷ்டமா இருக்கும். எங்காவது ஒரு சில இடங்கள்லதான் ரெண்டு தரப்பும் விரும்பி அது நடக்கும். அதேபோல வம்படியா ஒருத்தருடைய நடவடிக்கையால அப்படியொரு சூழல் நிகழ்ந்தா அதை சப்போர்ட் செய்ய முடியாது. அது விதிவிலக்கு.

என்னைப் பொறுத்தவரை எனக்கு அப்படியொரு வாய்ப்பு வந்தா, முதல்ல வெளியில போற ஆர்ட்டிஸ்ட் கிட்டப் பேசுவேன். ஏதாவது சிக்கல்னா என்னால் முடிஞ்சளவு அந்தச் சிக்கலைச் சரி செய்து அதே ஆர்ட்டிஸ்ட் தொடர்வதற்கான முயற்சி செய்வேன். அதன் பிறகும் வேற நடிகர்தான் நடிச்சாகணும்னாதான் நான் அந்த கேரக்டரைப் பண்ண சம்மதிப்பேன்.

ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கு உடல் நலனில் பிரச்னை வந்து அதனால சீரியல்ல தொடர முடியலனு எனக்கு அந்த வாய்ப்பு வர்ற போது தயாரிப்பாளர்கிட்ட நானே பேசுவேன்.

கொரோனோ சமயத்தில் 'சுந்தரி' சீரியல்ல மனோகருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து அவரால நடிக்க முடியலன்னு என்னை கூப்பிட்டாங்க. சாதாரண நாள்லயே சீரியல்ல போதுமான வேலை வாய்ப்பு நடிகர்களுக்கு கிடைக்கறதில்ல. கோவிட் வேறயா? அந்த சீரியலின் தயாரிப்பாளர்கிட்ட, 'நான் பண்ணுறேன், ஆனா அவர் உடல்நிலை சரியாகி வந்துட்டா, திரும்பவும் அவரை நீங்க ஏத்துக்கணும், நான் வெளியேறிடுவேன்' என்றேன்.

தயாரிப்பாளர் சம்மதிச்சார். நான் சொன்னதுபோலவே கொஞ்ச நாள்ல மனோகர் குணமாகி வந்துட்டார். நான் வெளியில வந்துட்டேன். என் பாலிசி இது.

சீரியல் ஷூட்டிங்

ஆனா இப்ப நான் ரெண்டு சீரியல்களில் இருந்தும் வெளியேறினதுக்குக் காரணம் என் உடல்நிலை. பெருசா நீங்க பயப்படத் தேவையில்லை. ஒரு சின்ன ஆபரேஷன். சுமார் 20 நாள்கள் தேவைப்பட்டுச்சு. 'கௌரி' தொடரில் ட்ராக் மாத்தி சமாளிச்சிடலாம், பண்ணிட்டு வாங்க'னு சொன்னாங்க.

அதேநேரம், 'ஆடுகளம்', 'இலக்கியா' ரெண்டுலயும் அந்த மாதிரி பண்றது சிரமம்னு சொன்னாங்க. 'அப்படின்னா நீங்க வேற ஆர்ட்டிஸ்ட் கமிட் செய்திடுங்க'னு சொல்லிட்டேன். இதுதான் காரணம். நமக்குன்னு ஒரு பாலிசி வச்சிருப்போம். அதை மத்தவங்களும் ஃபாலோ செய்யணும்னு எப்படிச் சொல்ல முடியும்? எனக்கு இதுல வருத்தம் எதுவுமில்லை'' என்றவர், ஆபரேஷன் முடித்து தேவையான ஓய்வையும் எடுத்த பிறகு இப்போது கௌரி சீரியலின் ஷூட்டிங்கிற்கும் வந்து விட்டாராம்.

சீரியல் நடிகை ராஜேஸ்வரி மறைவு; குடும்ப பிரச்னையில் விபரீத முடிவு? - ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `சிறகடிக்க ஆசை'. இந்தத் தொடரில் போலீஸ் அருணின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் ராஜேஸ்வரி. இவர்`பாக்கியலட்சுமி', `பனிவிழும் மலர்வனம்' உ... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 66: ``என் மேல தப்பான இமேஜ் கிரியேட் பண்றாரு" - முறையிட்ட ஆதிரை

ஆதிரை தொடுத்த வழக்கில் ‘குத்தத்தை ஒப்புக்கறேங்கய்யா’ என்று எஃப்ஜே சொன்னது ஒரு சாமர்த்தியமான டிஃபென்ஸிவ் ஆக்ட். இதன் மூலம் அதிக குப்பைகள் கிளறப்படாது. பெயர் டேமேஜ் ஆகாது. பாரு தொடர்ந்த வழக்கில், தன் பெ... மேலும் பார்க்க

``'ஓசி சேலை’னு என்னை எப்படி அவங்க பேசலாம்; புகார் தரலாம்னு இருக்கேன்!” – நடிகை கம்பம் மீனா

’பாக்கியலட்சுமி முதலான பல சீரியல்களில் நடித்தவர் நடிகை மீனா. கம்பத்தைச் சேர்ந்த இவர் சினிமாவிலும் நடித்து வருகிறார்.இவர் குறித்து சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ கடந்த இரு தினங்களாக சுற்றி வருகிறது.அதாவது ... மேலும் பார்க்க

BB Tamil 9: "அரோராவைப் பார்த்து பயம்'னு ஒத்துக்கோங்க"- பார்வதியை சாடிய விக்ரம்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 66 நாள்களைக் கடந்திருக்கிறது. கடந்த வார எவிக்ஷனில் பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.இந்த வார டாஸ்க்கில் வென்ற அமித் 'வீட்டு தலை'-யாக இருக்கிறார்.மே... மேலும் பார்க்க