செய்திகள் :

நிலநடுக்கத்தின்போது உயிரை காப்பாற்றிய ராணுவ வீரரையே திருமணம் செய்துகொள்ளும் பெண் - அடடே லவ் ஸ்டோரி

post image

சீனாவில் ஏற்பட்ட கோர நிலநடுக்கத்திலிருந்து மீட்கப்பட்ட ஒரு பெண் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உயிரை காப்பாற்றிய ராணுவ வீரரை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

2008ஆம் ஆண்டு சீனாவின் வென்சுவான் மாகாணத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அப்போது 22 வயதான லியோங் என்பவர் அவசர மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

சம்பவம் நடந்த இடத்தில் பத்து வயதான லியூ என்ற பெண் இடிந்து விழுந்த கட்டடத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார். லியோங் மற்றும் அவரது மீட்பு குழுவினர்கள் அங்கு பலரையும் காப்பாற்றிய நிலையில் இடிபாடுக்குள் சிக்கியிருந்த லியூவையும் அவர் மீட்டுள்ளார்.

marriage

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி, 2020 ஆண்டு தனது பெற்றோருடன் லியூ உணவருந்திக் கொண்டிருக்கும்போது ஒருவரை அவர் பார்த்திருக்கிறார்.

அவர் தன்னை காப்பாற்றிய மீட்பு வீரர் போன்று இருப்பதாக தனது தாயிடம் கூறியிருக்கிறார். அதன் பின்னர் அவரிடமே அவரது பெயரை கூறி நீங்களா? என்று கேட்டிருக்கிறார். அவர் ”ஆம் லியோங் தான்” என்று கூறியிருக்கிறார்.

அதன் பிறகு நடந்த சம்பவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். அன்று இரவே இருவரும் சமூக ஊடகங்களில் பேசத் தொடங்கி இருக்கின்றனர். அதன் பின்னர் தங்களது உணர்வுகளை பகிர தொடங்கி இருக்கின்றனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நபரையே லியூ திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறியுள்ளார்.

இது குறித்து லியூ கூறுகையில்"அவரை நன்றி உணர்வுக்காக நேசிக்கவில்லை, ஒன்றாக நேரம் செலவழித்த பின்னர் மட்டுமே என் வாழ்க்கையை ஒப்படைக்க கூடிய நபர் இவர் தான் என்பதை உணர்ந்தேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

பழைய கர்சீஃப்களை வைத்து இப்படியொரு சட்டையா? - இணையத்தை கலக்கும் ‘விண்டேஜ்’ டிசைன்!

ஃபேஷன் என்ற பெயரில் பல்வேறு விஷயங்களை செய்துவருகின்றனர். பழைய காலத்து ஆடைகளை நவீனமாக மாற்றுவதும், வித்தியாசமான பொருட்களை வைத்து ஆடைகளை வடிவமைப்பதும் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில், கைக்குட்... மேலும் பார்க்க

``வழுக்கை தலையில் முடி வளர மருந்து, சோதனையில் நல்ல பலன்'' - அயர்லாந்து மருந்துக் கம்பெனி சொல்வதென்ன?

ஆண்களுக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கையாக மாறுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. சிலருக்கு 70 வயதான பிறகும் முடி உதிர்ந்திராதிருக்கலாம். ஆனால் சிலருக்கு 20 வயதிலேயே முடி உதிர்ந்து வழுக்கையாகி இருப்பார... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்துக்குள் பறந்த புறா; விரட்டி பிடித்த பணிப்பெண்கள் - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளால் இண்டிகோ விமான சேவை ஏற்கனவே நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் முன்பதிவு செய்திருந்த ரூ.600 கோடிக்கும் அதிகமான பணத்தை இண... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: சட்டமன்றம் செல்ல ரயில், காரில் பயணம்; இண்டிகோ விமானம் ரத்தால் அமைச்சர்கள் திண்டாட்டம்

நாட்டில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், எம்.பி.க்களும் தப்பவில்லை. மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் குளிர்கால கூ... மேலும் பார்க்க

களம்காவல்: `மொழி கடந்து பார்த்த ரசிகர்களுக்கு.!" - வைரலாகும் நடிகர் மம்மூட்டி வீடியோ

74 வயதிலும் அதே வேகத்துடனும், விவேகத்துடனும் திரையுலகில் பயணித்து வருபவர் நடிகர் மம்மூட்டி. கடந்த சில வருடங்களில் இவர் நடித்தப் படங்கள் காதல் தி கோர், பிரமயுகம், பீஷ்ம பர்வம் போன்ற படங்களும், கதைத் தே... மேலும் பார்க்க