ஆந்திரா: மாவோயிஸ்ட் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை - யார் இந்த மத்வி ஹித்மா?
``பசியில் 50 எலிகளை சாப்பிட்டேன்'' - 35 நாள்கள் காட்டில் வாழ்ந்த சீன பெண்; எதற்காக இப்படி செய்தார்?
சீனாவில் நடைபெற்ற சாகசப் போட்டி ஒன்றில் 35 நாட்கள் காட்டில் தங்கியிருந்த பெண் ஒருவர் 50 எலிகளை சாப்பிட்டு உயிர் வாழ்ந்ததாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஒரு தீவில், 'காட்டுயிர் பிழைப்பு' என்ற போட்டி அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கியது.
இதில் கலந்துகொண்ட 25 வயதான ஜாவோ டைஜு என்ற பெண், நவம்பர் 5 ஆம் தேதி வரை மொத்தம் 35 நாட்கள் அந்தத் தீவில் தங்கியிருந்தார்.
காட்டின் கடுமையான சூழலை எதிர்கொண்டு நீண்ட நாட்கள் தாங்கியதற்காக, அவருக்கு மூன்றாம் பரிசு மற்றும் 7,500 யுவான் (சுமார் ₹88,608) வழங்கப்பட்டது.

இந்த 35 நாட்களில், கடுமையான காலநிலை, பூச்சி கடிகள் போன்ற பல சவால்களை இவர் எதிர்கொண்டார். இந்த சவால்களுக்கு இடையில் அவரது உடல் எடை 85 கிலோவிலிருந்து 71 கிலோவாக, கிட்டத்தட்ட 14 கிலோ குறைந்துள்ளது. காட்டில் கிடைத்த புரதச்சத்து நிறைந்த உணவுகள் தான் எடை குறைப்பிற்கு முக்கிய காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
தனது உணவுக்காக நண்டுகள், கடல் முள்ளெலிகள் மற்றும் நத்தைகள் போன்றவற்றை வேட்டையாடி உண்டு, 35 நாட்களில் சுமார் 50 எலிகளை வேட்டையாடி, சுத்தம் செய்து, வறுத்து சாப்பிட்டதாக அவர் கூறியுள்ளார்.
நவம்பர் 4 ஆம் தேதி தீவை சூறாவளி தாக்கிய பிறகு, போட்டியில் இருந்து வெளியேற ஜாவோ முடிவு செய்து, தனது இலக்கை அடைந்துவிட்டதாகவும், தற்போது ஓய்வெடுக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.















