கோவை: ஆர்டர் போட்டது சோப்பு.. கிடைச்சது ஐபோன், லேப்டாப்.. ஃபிளிப்கார்ட் நிறுவனத...
``புகழொடு தோன்றும் பண்பு... அன்பு இளவல்" - சீமானுக்கு எம்.பி கமல்ஹாசன் வாழ்த்து!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 59-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
சீமானின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கட்சியினர் இன்று காலையில் இருந்தே சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில், ``நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், அன்புச் சகோதரர் திரு. சீமான் அவர்களுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

நீண்ட ஆயுள் மற்றும் உடல் நலத்துடன், தொடர்ந்து பொது சேவையாற்றிட இறைவனை வேண்டுகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன், ``எப்போதும் அண்மையில் இருக்கும் இளைய சகோதரர் சீமான்.
பிறந்த பிரதேசமானாலும் சரி, தேர்ந்துகொண்ட திரைத்துறையானாலும் சரி பக்கத்திலேயே பயணம் செய்பவர்.
பின்பற்றும் கொள்கையில் இவர் காட்டும் பிடிமானமும் பிடிவாதமும் வியத்தலுக்குரியவை.
தான் தோன்றுவது எந்த அரங்காக இருந்தாலும் அதில் புகழொடு தோன்றும் பண்பும் திறனும் மிக்க அன்புத் தம்பி, நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர், செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இந்நாளில் அவரை அணைத்து வாழ்த்துவது எனக்கு மகிழ்ச்சி. நீடு வாழ்க இளவல்.















