செய்திகள் :

`பேய் நடமாட்டம்' - மாநகராட்சி அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் - சிவசேனா அமைச்சர்

post image

மகாராஷ்டிரா மாநிலம் சிவசேனா சார்பாக அமைச்சராக இருப்பவர் சஞ்சய் சிர்சாத். இவர் சத்ரபதி சாம்பாஜிநகர் மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் இருக்கிறார். சாம்பாஜி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் அமைச்சர் சஞ்சய் தெரிவித்து இருக்கும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் அந்த நிகழ்ச்சியில் பேசுகையில்,''சத்ரபதி சம்பாஜிநகர் மாநகராட்சி தலைமையகம் ஒரு காலத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்த நிலமாக இருந்தது. இப்போது அங்குள்ள ஆவிகள் அமைதியின்மையை ஏற்படுத்துகின்றன. எனவே மாநகராட்சி அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

மாநகராட்சி அலுவலக கட்டடம் ஒரு நிழலின் கீழ் இருக்கிறது. கட்டடம் நிற்கும் இடம் முன்பு அடக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டது. இது ஒரு புதைகுழியின் ஒரு பகுதியாக இருப்பதால், பேய் நடமாட்டம் இங்கு காணப்படுகின்றன.

மாநகராட்சி அலுவலகம்

மேலும் அவை மக்களை அமைதியின்மைக்கு ஆளாக்குகின்றன. இதிலிருந்து நீங்கள் விடுதலை பெற விரும்பினால், சரியான இடத்தில் கட்டடத்தைக் கட்டுங்கள். நகரம் மேம்பட வேண்டும். இந்த ஆன்மாக்கள்கூட சாந்தி அடையும், நீங்களும் நிம்மதி அடைவீர்கள்" என்று அவர் மேலும் கூறினார்.

அவரது கருத்து பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. அவரது கருத்துகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவியது. இது குறித்து நெட்டிசன்கள், அமைச்சரை விஞ்ஞானமற்ற மற்றும் உணர்ச்சியற்றவர்" என்று குறிப்பிட்டனர். இத்தகைய அறிக்கைகள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர். இவ்விவகாரம் சர்ச்சையானதை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பான திட்டம் இல்லை என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமைச்சர் சஞ்சய் தனது கருத்து குறித்து விளக்கம் கொடுக்கவில்லை.

`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது' - அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடந்த போர் ஒன்றரை மாதத்திற்கு பிறகு தற்காலிகமாக முடிவுக்கு வந்து இருக்கிறது. ஆனால் இந்த தற்காலிக போர் நிறுத்தமும் விரைவில் முடிய இருக்கிறது. ஈரானுடன் மீண்டும் எப்போது அமெ... மேலும் பார்க்க

தீபிகா படுகோனேவுக்கு இரண்டாவது குழந்தை; மகள் மூலம் கர்ப்பத்தை அறிவித்த தம்பதி

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மற்றும் நடிகர் ரன்வீர் சிங் தம்பதிக்கு கடந்த 2024ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை பிறந்த பிறகு தீபிகா படுகோனே படங்களில் நடிக்க பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். அ... மேலும் பார்க்க

மேற்கு Vs மத்திய குழு; சிம்பன்சிகளிடையே வெடித்த `சிவில் வார்!' - உகாண்டாவில் அதிர்ச்சி!

சுமார் 25 ஆண்டுகளாக உகாண்டாவின் ங்கோகோ (Ngogo) காடுகளில் உலகின் மிகப்பெரிய சிம்பன்சி சமூகம் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தது.சுமார் 200 சிம்பன்சிகளைக் கொண்ட இந்த மாபெரும் கூட்டம், ஒரு முன்மாதிரி சமூ... மேலும் பார்க்க

விராட் கோலி போட்ட லைக்; இணையத்தில் வைரலாகும் LizLaz - யார் இவர்?

இன்ஸ்டாகிராமில் தென்னாப்பிரிக்கா இன்ப்ளூயன்சர் ஒருவரின் புகைப்படத்திற்கு விராட் கோலி லைக் போட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்ப... மேலும் பார்க்க

ஹரியானா: `குடிபோதையில் ரகளை' காரை நடுரோட்டில் நிறுத்தி வாக்குவாதம் செய்த பெண் செவிலியர்

ஹரியானா மாநிலம் ஹிசார் என்ற இடத்தில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன நெருக்கடி மிகுந்த ரோட்டில் பெண் ஒருவர் தனது காரை கொண்டு வந்து நிறுத்தினார். காரை ஓட்டி வந்த அப்பெண் குடிபோதையில் இருந்திருக்கிறார். அ... மேலும் பார்க்க

`மராத்தி தெரியாவிட்டால் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் லைசென்ஸ் ரத்து'- புது கெடுவால் டிரைவர்கள் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் மும்பை, நாசிக், புனே போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் இயக்கப்படுகின்றன. இந்த டாக்ஸி மற்றும் ஆட்டோக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தாலும், பொதுமக்கள் பயணம் செய... மேலும் பார்க்க