செய்திகள் :

ப்ரீ டயாபட்டீஸ் யாருக்கெல்லாம் வரலாம்? வந்துவிட்டால் என்ன செய்வது?

post image

ப்ரீ டயாபட்டீஸ் என்று சொல்லப்படும் 'சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை’யில் இருப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே இருக்கிற நிலையில், ப்ரீ டயாபடீஸ் பற்றிய பல்வேறு சந்தேகங்களை சர்க்கரை நோய் நிபுணர் கருணாநிதியிடம் கேட்டோம்.

டயாபட்டீஸ்
சர்க்கரை நோய்

'பொதுவாக, ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சாப்பிடுவதற்கு முன் 100 முதல் 125 mg/dl என்ற அளவிலும், உணவு உட்கொண்ட பிறகு 140 முதல் 199 mg/dl என்ற அளவிலும் இருந்தால், அவர் ப்ரீ டயாபடீஸ் நிலையில் உள்ளார். அதாவது, எதிர்காலத்தில் சர்க் கரை நோய் வருவதற்கான சாத்தியங்கள் அவருக்கு அதிகம் என்று அர்த்தம்.'

'அதிக உடல் எடை இருப்பவர்கள், குறிப்பாக பி.எம்.ஐ மதிப்பில் 25க்கு மேல் இருப்பவர்கள், கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் (Gestational Diabetes) வந்தவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள், உடல் உழைப்பின்றி, அதிக கலோரி உணவு உண்ணுபவர்கள் (Sedentary type) ஆகியோருக்கு ப்ரீ டயாபடீஸ் வரலாம்.

இவர்கள் தாங்களாகவே முன்வந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சர்க்கரைப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.'

டயாபட்டீஸ்
டயாபட்டீஸ்

'சர்க்கரை நோய்க்கான சோதனை மூலம் அறியலாம். காலையில் உணவு சாப்பிடுவதற்கு முன்பும், உணவு உட்கொண்ட பின்னர் 2 மணி நேரம் கழித்தும் செய்யப்படும் ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

சிலர் ரத்தப் பரிசோதனை செய்வதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பிருந்தே, சர்க்கரை, எண்ணெய் சேர்த்த உணவுகளைத் தவிர்த்து விட்டு, பரிசோதனையின்போது, சர்க்கரையின் அளவு குறைவு எனக் காண்பிக்க விரும்புகிறார்கள். இது தவறு. இவர்களுக்காகவே, தற்போது ஹெச்.பி.ஏ.1சி (HbA1c) என்ற பரிசோதனை இருக்கிறது.

கடந்த மூன்று மாதங்களில் நம் சராசரியான சர்க்கரையின் அளவு என்ன என்பதை அது தெளிவாக விளக்கிவிடும். ப்ரீ டயாபடீஸ் வந்தவர்கள் இந்தப் பரிசோதனையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக செய்து கொள்ளவேண்டும்.

இதன் மூலம் நமது உடலில் சர்க்கரையின் அளவைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படலாம்.'

''ப்ரீ டயாபடீஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு மாத்திரைகள் தரப்படுகின்றன. ஆனால். அவற்றை எடுத்துக் கொள்ளாமல், 'உணவுக் கட்டுப்பாடு, உடல் எடைக் கட்டுப்பாடு’ போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைத் தவிர்க்கலாம்.

மருத்துவர் மற்றும், ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனை பெற்று உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். சீரான இடைவெளியில் குறைந்த கலோரி கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் செய்யப்பட்ட சிப்ஸ் முதலான கொழுப்புச் சத்துள்ள பொருட்கள், சர்க்கரை மட்டுமின்றி இனிப்புப் பதார்த்தம் உண்ணுவதையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.

நார்ச் சத்து மிகுந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். மாவுச்சத்துள்ள உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். தாமதமாக உணவு உட்கொள்வது, உணவைத் தவிர்ப்பது கட்டாயம் கூடாது.

இரவில் உறங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே மிதமான உணவைச் சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு டீ/காபி 2 கப் அளவுக்கு மேல் அருந்தக் கூடாது. தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

வாரத்துக்கு 5 நாட்களாவது முறையான நடைப்பயிற்சி அவசியம். பயிற்சியாளர், மருத்துவர் பரிந்துரை இன்றி கடினமான பளு தூக்கும் உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும்.

பொதுவாக ப்ரீ டயாபடீஸ் வந்தவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, மனக்கவலையைத் தவிர்த்து உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, தூக்கம் ஆகியவற்றை முறையாகக் கடைப்பிடித்தால், ப்ரீ டயாபடீஸிலிருந்து நார்மல் நிலைக்கு வரலாம். இதய நோய்கள் வராமலும் தடுக்கலாம்.'

Doctor Vikatan: ஜலதோஷம், உடல் வெப்பம் இரண்டையும் சமநிலைப்படுத்த சித்த மருத்துவம் உதவுமா?

Doctor Vikatan:என் மகனுக்கு 25 வயதாகிறது. அவனுக்கு அடிக்கடி சளி பிடித்துக்கொள்கிறது. அதனால் எப்போதும் வெந்நீர், சிக்கன் சூப் என சூடான உணவுகளையே கொடுக்கிறேன். இன்னொரு பக்கம் உடலில் சூடு அதிகமாகி, கட்டி... மேலும் பார்க்க

Beauty Tips: சமந்தா, ராஷ்மிகா சொன்ன ரகசியம்! சரும பளபளப்புக்கு உதவும் Apple Cider Vinegar தெரியுமா?

ஆப்பிள் சிடர் வினிகர் (Apple Cider Vinegar, ACV) என்பது நொதித்த ஆப்பிள் சாற்றை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வினிகர். எடைக்குறைப்பு, சரும பளபளப்பிற்காக பலரும் இதை உணவில் சேர்த்துக்கொள்வதை வழக்கமாக வைத்தி... மேலும் பார்க்க

Doctor Vikatan: திடீரென பறிபோன தூக்கம்; சரியாகுமா, தொடர்கதையாக மாறுமா?

Doctor Vikatan: நான் ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். எனக்கு கடந்த 2 மாதங்களாக இரவில் தூக்கமே இல்லை. ஆழ்ந்த உறக்கம் என்பதே கனவாகிவிட்டது. தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டாலும், மீண்டும் ... மேலும் பார்க்க

பிரண்டைக்கீரை முதல் பசலைக்கீரை வரை - மருத்துவர் கு.சிவராமன் சொல்லும் தகவல்கள்!

''கீரை, பசிக்கான சாப்பாடு மட்டும் இல்லை. இது வைட்டமின் சத்துக்களைத் தருகிற டானிக்'' என்கிற சித்த மருத்துவர் கு. சிவராமன், இங்கே சில கீரைகள் நமக்கு தருகிற ஆரோக்கியத்தைப் பற்றி சொல்கிறார். கீரைகளின் மரு... மேலும் பார்க்க

Doctor Vikatan: கால்களில் ஏற்படும் திடீர் வீக்கம்; கவலைக்குரியதா, தானாகச் சரியாகுமா?

Doctor Vikatan: வயதான என் அம்மாவுக்கு திடீரென கால்களில் வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. ரத்த அழுத்தம் நார்மலாகவேஇருக்கிறது. இந்த வீக்கத்துக்கு வேறு என்ன காரணமாகஇருக்கும். தானாகச் சரியாகிவிடும் என விடலாமா, ... மேலும் பார்க்க

சிகரெட்: புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

எய்ட்ஸ் நோய், காசநோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட புகையிலையினால் ஏற்படும் சைலென்ட் மரணம் அதிகமாக இருக்கிறது. புகையிலையில் சுமார் 4,000 ரசாயனப் பொருட்கள் இருப... மேலும் பார்க்க