செய்திகள் :

மியான்மரை அதிர வைத்த வெடிவிபத்து: கட்டடம் தரைமட்டமாகி குழந்தைகள் உட்பட 45 பேர் பரிதாப பலி!

post image

மியான்மர் நாட்டின் எல்லையோரக் கிராமம் ஒன்றில் உள்ள ஒரு பெரிய கட்டடத்தில், திடீரென ஏற்பட்ட வெடிவிபத்து ஒட்டுமொத்த உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுரங்க வேலைகளுக்காக அந்தப் பெரிய கட்டடத்திற்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் அனைத்தும் ஒரே நொடியில் மொத்தமாக வெடித்துச் சிதறியதில், குழந்தைகள் உள்பட 45-க்கும் மேற்பட்டோர் தங்களின் உயிரை இழந்துள்ளனர்.

இந்தக் கொடூர விபத்து நடந்த சில நொடிகளிலேயே அந்த இடமே கருகிய இடிபாடுகளுடனும் புகை மண்டலத்துடனும் ஒரு போர்க்களம் போலக் காட்சியளித்தது.

வெடிவிபத்தின் வீரியம் எவ்வளவு அதிகமாக இருந்தது என்றால், அந்தப் பெரிய கட்டடமே அடியோடு சரிந்து தரைமட்டமானது. இந்தத் திடீர் விபத்தில் சிக்கி அங்கிருந்தவர்கள் தப்பித்து ஓடக்கூட நேரமில்லாமல் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதில் பலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தக் கோரச் சம்பவத்தில் குழந்தைகள், பெரியவர்கள் எனச் சுமார் 70 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சிலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி விபத்து நடந்த இடத்தில் மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றி, உள்ளே யாரும் சிக்கியிருக்கிறார்களா என்று தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

சுரங்க வெடிபொருட்களைப் பாதுகாப்பற்ற முறையில் கட்டிடத்திற்குள் வைத்திருந்ததே இந்த இத்தனை உயிர்கள் பலியாவதற்குக் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சி தரும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகிப் பார்ப்போரின் நெஞ்சைப் பதற வைக்கிறது. ஒரு சின்ன அலட்சியத்தால் ஒரு கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ள இந்தத் துயரச் சம்பவம், மியான்மர் மக்களிடையே பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளம்: பொழுதுபோக்கு பூங்கா ராட்டின விபத்து; காயம் அடைந்தவர்கள் குப்பை எடுக்கும் வாகனத்தில் மீட்பு?

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெம்பாயம் பகுதியில் ஹேப்பிலேண்ட் கேளிக்கை பூங்கா உள்ளது. அங்கு விடுமுறையில் ராட்டினங்கள் உள்ளிட்டவற்றில் பொழுதுபோக்கவும் கேரளம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்... மேலும் பார்க்க

புனே: லிப்ட் கதவில் 1.5 மணி நேரம் சிக்கி 7 வயது சிறுவன் உயிரிழப்பு; என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சின்காட் ரோடு பகுதியில் உள்ள ரித்தி சித்தி குடியிருப்பு கட்டிடத்தில் சைலேஷ்(7) என்ற சிறுவன் தனது பெற்றோடு வசித்து வந்தான். அவன் கட்டிடத்திற்குக் கீழே வந்து தனது நண்பர... மேலும் பார்க்க

மும்பை: ஒரு கி.மீ. தூரத்தைக் குறைக்க குறுக்கு வழி; லாரி மீது கண்டெய்னர் மோதி 13 பேர் பலி

மும்பை அருகில் உள்ள தகானு தனிவாரி என்ற இடத்தில் லாரி ஒன்று திருமணத்திற்காக ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்த லாரியில் 50 பேர் இருந்தனர். மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்... மேலும் பார்க்க

ஈரோடு: குடும்பத்துடன் குளிக்கச் சென்ற இடத்தில் சோகம் - பரிதாபமாக பறிபோன 3 உயிர்கள்

நாமக்கல் மாவட்டம் அவிநாசி பட்டியைச் சேர்ந்த தறிப்பட்டைறை தொழிலாளியான பெருமாள், மனைவி, குழந்தைகளுடன் பரமத்தி வேலூர் சித்தம்பூண்டிக்குச் சென்றுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குடும்பமாகச... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து: பயணிகள் வெளியேற்றம்; என்ன நடந்தது?

முற்றிலும் ஏ.சி.பெட்டிகளைக் கொண்ட ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் நாட்டின் தலைநகரில் இருந்து மாநிலத் தலைநகரங்களுக்கு இயக்கப்படுகிறது. நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் நிஜாமுதினுக்கு... மேலும் பார்க்க

பிரபல ரெளடி பிறந்தநாளுக்காக நண்பர்களுக்கு வைத்த மது விருந்து பார்ட்டி - விபத்தில் 2 பேர் பலி!

தஞ்சாவூர் அருகே உள்ள அம்மன்பேட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தளபதி(36). திருவையாறு, நடுக்காவேரி காவல் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது டாஸ்மாக் கடைகளில் மதுப்பாட்டில்கள் திருடி வந்த... மேலும் பார்க்க