``சாலைகள் மோசமாக இருந்தால் விபத்துகள் குறைவாக நடக்கின்றன" - பாஜக எம்.பி சர்ச்சைக...
மும்பை: மேளதாளம், கரகோஷம், ரோஜா மழை; பயிற்சியாளருக்கு உள்ளூர்வாசிகள் உற்சாக வரவேற்பு!
மும்பை புறநகரில் உள்ள வில்லே பார்லேவில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அமோல் மஜும்தார் பயிற்சியாளராக இந்திய பெண்கள் அணியை உலகக் கோப்பை வெல்லச் செய்து திரும்பியதை கோலாகலமாகக் கொண்டாடியுள்ளனர்.
அமோல் மஜும்தாரை தங்கள் பெருமையாகக் கொண்டாடிய மக்கள், அவருக்கு ரோஜா இதழ் தூவி, மேள தாளங்கள் முழங்கி, வீடுகளிலிருந்து வாழ்த்தி கைதட்டி அவரை வரவேற்றுள்ளனர்.
Amol Muzumdar gets a hero's welcome that he deserves!!
— Pushkar Joshi (@Pushkar_Jo) November 3, 2025
Thank you so very much for your contribution to Indian Cricket!! pic.twitter.com/2JIZPwXkK9
கூடுதல் சிறப்பாக பெண்கள் சிலர் கையில் கிரிக்கெட் மட்டையை ஏந்தி, அவரை வரவேற்கும் கேடயம் போல மரியாதை செலுத்தி நெகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
இந்திய மகளிர் அணி உலக அரங்கில் சாதனைப் படைக்க தங்கள் வீதியிலிருந்த ஒருவர் உதவியிருப்பதைப் பெருமிதமாக வெளிப்படுத்தியதுடன் அமோல் மஜும்தாரும் தனது செயலுக்கு மனநிறைவுடன் மகிழ்ச்சிகொள்ளச் செய்துள்ளனர்.
அத்தனை வரவேற்ப்பையும் சிறிய புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட மஜும்தார், "விளையாட்டு நாம் முன்னேறுவதற்கான வழி. நாம் வெறும் கிரிக்கெட் தேசமாக மட்டுமிருக்காமல், விளையாட்டை விரும்பும் தேசமாகவும் மாறுவோம்." எனக் கூட்டத்தினரிடம் பேசினார்.
Amol Muzumdar gets a hero's welcome that he deserves!!
— Pushkar Joshi (@Pushkar_Jo) November 3, 2025
Thank you so very much for your contribution to Indian Cricket!! pic.twitter.com/2JIZPwXkK9
முஜும்தார் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த பதிவைக் கொண்டுள்ள வீரராக இருந்தார்.
ஆனாலும் அவருக்கு இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மனம் தளராமல் தொடர்ந்து விளையாட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் அவர்.
அவருக்கு இந்திய மகளிர் அணியின் இந்த வெற்றி மிகவும் நெருக்கமான ஒன்று. அதேப்போல அவரின் இந்த வெற்றி அவரது பகுதி மக்களுக்கு மிகவும் நெருக்கமானதாக இருந்துள்ளது என்பதற்கு இந்த கொண்டாட்டங்களே சாட்சி.
இந்தியர்களின் மனதுக்கு கிரிக்கெட் எத்தனை நெருக்கமானது என்பதை பயிற்சியாளருக்கு கிடைத்துள்ள இந்த உற்சாக வரவேற்பு எடுத்துரைக்கிறது.


















