செய்திகள் :

`வாட்ஸ்அப், டெலிகிராம், அரட்டை பயன்பாட்டுக்கு சிம் கார்டு கட்டாயம்' - புதிய விதிகள் என்ன சொல்கிறது?

post image

வாட்ஸ்அப், டெலிகிராம், அரட்டை மொபைல் போன்ற செயலிகளை ஒரு முறை சிம் கார்டை கொண்டு பதிவிறக்கம் செய்து கொண்ட பிறகு அந்த சிம் கார்டை எடுத்துவிட்டாலும், வேறு சிம் கார்டு அல்லது இன்டர்நெட் மூலம் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியும். ஆனால் இது போன்ற ஒரு வசதியால் அடையாளம் தெரியாத நபர்கள் மோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து மத்திய அரசு புதிய விதிகளை கொண்டு வந்திருக்கிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டே டெலிகாம் சைபர் பாதுகாப்பு விதிகள் வெளியிடப்பட்டன. அந்த விதிகள் இப்போது மீண்டும் கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த விதிகள் வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து அமலுக்கு வர இருக்கிறது. இதன்படி இனி வாட்ஸ்அப் போன்ற செயலிகள் இனி சிம் கார்டு இல்லாமல் செயல்படாது என்று மத்திய அரசு அதில் குறிப்பிட்டுள்ளது.

WhatsApp | வாட்ஸ்அப்
WhatsApp | வாட்ஸ்அப்

நவம்பர் 28ஆம் தேதி இது தொடர்பாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வெளியானதிலிருந்து அடுத்த 90 நாட்களுக்குள் சிம் கார்டு இல்லாமல் வாட்ஸ்அப் போன்ற செயலிகள் செயல்படுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று மொபைல் செயலி நிறுவனங்களுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோன்று, 6 மணி நேரத்திற்கு ஒரு முறை வாட்ஸ்அப் தானாகவே லாக் ஆவுட் ஆகிவிடும். அதன் பிறகு க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து மீண்டும் பயன்படுத்த முடியும். எனவே வாட்ஸ்ஆப், ஷேர்-ஷாட், ஸ்னாப்-ஷாட், அரட்டை, ஜியோசாட், சிக்னல் போன்ற செயலிகளைப் பயன்படுத்த மொபைல் போனில் சிம் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சிம் கார்டை ஒரு முறை எடுத்துவிட்டால் அதன் பிறகு அந்த மொபைல் போனில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது.

சைபர் க்ரைம்
சைபர் க்ரைம்

சைபர் குற்றங்களில் ஈடுபடும் கும்பல்கள் சிம் கார்டுகளை பயன்படுத்தாமல் இண்டர்நெட்டை மட்டும் பயன்படுத்தி வாட்ஸ்ஆப் கால்களில் பேசி மக்களை ஏமாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அத்தகைய மோசடிகளைத் தடுக்கும் நோக்கில் இத்திட்டம் அமலுக்கு வர இருக்கிறது.

சமீப காலமாக டிஜிட்டல் கைது மூலம் அதிக அளவில் பணமோசடி நடைபெற்று வருகிறது. இம்மோசடிக்கு வாட்ஸ்அப் வீடியோ கால்கள்தான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

புதிய சேவையைப் பயன்படுத்தும் பயனாளிகள் தொடர்பான தகவல்களை செயலி நிறுவனங்கள் நான்கு மாதத்திற்குள் தொலைத்தொடர்பு துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

``எங்கள் காதல் சாகவில்லை'' - இறந்த காதலனை திருமணம் செய்வதாக அறிவித்த பெண்

மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட் அருகில் உள்ள ஜுனா கஞ்ச் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அச்சல் (20). இந்தப் பெண்ணின் வீட்டிற்கு அவரது சகோதரனின் நண்பன் சக்‌ஷாம் அடிக்கடி வந்து செல்வதுண்டு. இவ்வாறு வந்து சென்றபோத... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியா: 62 வயதில் காதலியை மணந்த அந்தோணி; பதவிக்காலத்தில் திருமணம் செய்த முதல் பிரதமராகிறார்!

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ், தனது நீண்ட நாள் காதலியான ஹெய்டனை நவம்பர் 29, 2025 அன்று கரம்பிடித்தார்.62 வயதில் திருமணம் செய்துகொண்ட அல்பானீஸ், ஆஸ்திரேலிய வரலாற்றில் பதவியில் இருக்கும் காலத்த... மேலும் பார்க்க

``கணவன் கோபமாக இருந்தால் எதுவும் சொல்லாதீர்கள்''- வைரலாகும் தோனியின் அறிவுரை

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தனது மனைவி சாக்ஷியுடன் சமீபத்தில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டார். இத்திருமணத்தில் மகேந்திர சிங் தோனி பேசுகையில் நகைச்சுவையாக பேசினார். அவர் மணமக்களுக்கு வழங்கிய அ... மேலும் பார்க்க

NMMK: மங்களதேவி கண்ணகி கோயில் புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை

நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ( NMMK) சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மங்களதேவி கண்ணகி கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்... மேலும் பார்க்க

சிறுத்தையை பிடிக்க வைத்திருந்த கூண்டு; குடிபோதையில் நுழைந்த வாலிபர் - கதவு மூடிக்கொண்டதால் அதிர்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள உம்ரி தெஹாலோ என்ற கிராமத்தில் சிறுத்தைகள் அடிக்கடி பொதுமக்கள் குடியிருப்புக்குள் புகுந்து மக்களை தாக்க ஆரம்பித்தது. ஒரு பெண்ணை சிறுத்தை அடித்து கொன்று இ... மேலும் பார்க்க

`உங்கள் தந்தையின் உழைப்பு எனக்கு வேண்டாம்’ - பெண் வீட்டார் கொடுத்த ரூ.31 லட்சத்தை நிராகரித்த மணமகன்

திருமணம் என்றாலே வரதட்சணைதான் பெரும்பாலும் முதலில் பேசப்படும். அந்த வரதட்சணையால் எத்தனையோ திருமணங்கள் நின்று இருக்கிறது. எத்தனையோ பெண்கள் வாழ முடியாமல் பெற்றோர் வீட்டில் வந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற... மேலும் பார்க்க