செய்திகள் :

"'வாழை' படத்தின் ஒரு பகுதியாக 'மஞ்சணத்தி' இருக்கும்; ஆனால்..."- மாரி செல்வராஜ் கொடுத்த அப்டேட் என்ன?

post image

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'பைசன் காளமாடன்'.

தீபாவளிக்கு வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. 'பைசன் காளமாடன்' திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ் படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

'பைசன் காளமாடன்' படத்தின் ப்ரோமோஷன் வேளையிலும், அடுத்ததாக தனுஷ் படத்தை இயக்குவதாக மாரி செல்வராஜும் உறுதிப்படுத்தியிருந்தார்.

Manjanathi - Mari Selvaraj- ilayaraja
Manjanathi - Mari Selvaraj- ilayaraja

இந்நிலையில், மாரி செல்வராஜின் 6-வது திரைப்படம் பற்றிய அறிவிப்பு நேற்று (மே.1) வெளியானது. படத்திற்கு 'மஞ்சணத்தி' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவிருக்கிறார். இந்நிலையில் இன்று 83-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இளையராஜாவுக்கு மாரிசெல்வராஜ் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மாரி செல்வராஜ், "இளையராஜாவின் 83-வது வயதில் அவருடன் இணைந்து என்னுடைய 6-வது படத்தை இயக்குகிறேன். வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான தருணம் என்று நினைக்கிறேன்.

ராஜா சாருடன் பணியாற்ற வேண்டும் என்பது ஒரு ஏக்கமாகவே இருந்தது. அவர் என்னுடைய சினிமா வேலைகள் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறார். என்னுடன் அவர் பழகும் விதமும், பிள்ளையாக நினைக்கின்ற விதமும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

Manjanathi - Mari Selvaraj
Manjanathi - Mari Selvaraj- ilayaraja

நிச்சயமாக நான் அவருக்குக் கொடுக்கும் அன்பாக இந்த 'மஞ்சணத்தி' இருக்கும். மஞ்சணத்தி படத்தை எழுதும்போதே இளையராஜாவை மனதில் வைத்துக் கொண்டுதான் எழுதினேன்.

மனதிலும், புத்தியிலும் இசையை வைத்துக் கொண்டே எழுதிய படம்தான் 'மஞ்சணத்தி'. இளையராஜா மீது எனக்கு தீராக் காதல், அதை வெளிப்படுத்தும் விதமாகவே அவரைப் பார்க்கும்போதெல்லாம் முத்தம் கொடுக்கிறேன். 'வாழை' படத்தின் ஒரு பகுதியாக 'மஞ்சணத்தி' இருக்கும். ஆனால் அதன் இரண்டாம் பாகமாக 'மஞ்சணத்தி' இருக்காது'' என்று கூறியிருக்கிறார்.

Jayaram: "அப்போ நான் அவர்கிட்ட போய் மன்னிப்புக் கேட்டேன்'' - தன் காதல் கதையைப் பகிர்ந்த ஜெயராம்

நடிகர் ஜெயராம் நடிப்பில் கடந்த வாரம் 'பரிமளா & கோ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அப்படத்திற்காக நம் சினிமா விகடன் சேனல் நடத்திய பிரத்யேக 'விகடன் பிரஸ் மீட்' நிகழ்வில் ஜெயராம் கலந்துகொண்டு ... மேலும் பார்க்க

Nooru Saami: "பசியோட இருக்காத, பண உதவி பண்றேன்னு..." - ஏ.ஆர். முருகதாஸ்

இயக்குநர் சசி இயக்கியிருக்கும் 'நூறு சாமி' திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நி... மேலும் பார்க்க

Nooru Saami: "'உன்னை பார்க்கும்போது ரவுடி மாதிரி தெரிஞ்ச'னு சசி சார் சொன்னார்!" - பா. ரஞ்சித்

இயக்குநர் சசி இயக்கியிருக்கும் 'நூறு சாமி' திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நி... மேலும் பார்க்க

Double Occupancy Review: 6-6 ஆண்; 6-6 பெண் சுவாரஸ்யமான ஒன்லைன் - படமாக பாஸாகிறதா?

பல வருடங்களாகக் குழந்தையில்லாமல் தவிக்கிறது ஒரு தம்பதி (போஸ் வெங்கட் - வினோதினி). கடவுளை நம்பாத போஸ் வெங்கட், கைகூப்பி கடவுளை வணங்கி வேண்டுகிறார். கடவுளின் அருளால் ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால், பிறந்... மேலும் பார்க்க

Habeebi Review: தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் பின்னணியில் ஓர் அழகான காதல் கதை; ஆனால், படமாகக் கவர்கிறதா?

தென் தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாக நெசவுத் தொழிலை யூசுஃப் கானின் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கவனித்து வருகிறார்கள். கைத்தறித் தொழில் நலிவடைந்து வருவதால், யூசுஃப் கானின் தம்பி வளைகுடா நாட்டிற்குப் பணிக்க... மேலும் பார்க்க

Bharathiraja: "துயரத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி" - பாரதிராஜா மனைவி சந்திர லீலா

இயக்குநர் இமயம் பாரதிராஜா நேற்று முன்தினம் (ஜீன்.10) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் நேற்று சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள காட் ரோட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலைய... மேலும் பார்க்க