செய்திகள் :

" 'வா வாத்தியார்' கதை எனக்கு முதல்ல புடிக்கல; கத்தி மேல் நடக்கிற மாதிரி இருந்துச்சு, ஆனா!"- கார்த்தி

post image

'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வா வாத்தியார்’.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

கார்த்தி- கீர்த்தி ஷெட்டி
கார்த்தி- கீர்த்தி ஷெட்டி

இப்படம் நாளை (டிச.12) தேதி வெளியாகயிருக்கிறது. இந்நிலையில் ‘வா வாத்தியார்’ படக்குழுவினரின் நேர்காணல் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் வெளியாகியிருக்கிறது.

அதில் பேசியிருக்கும் கார்த்தி,

``இந்த படத்தோட கதையை கேட்டிட்டு முதல்ல எனக்கு புரியலன்னு சொல்லிட்டேன். நலன் குமாரசாமி ஷாக் ஆகிட்டாரு.

திரும்ப வந்து கதையை சொன்னபோது அதே கதை எனக்கு எமோஷனலாக கனெக்ட்டாச்சு.

என்ன பண்ணீங்கன்னு கேட்டடேன். ஒரு 4 சீன் உள்ளே வச்சேன். அவ்வளவுதான்னு சொன்னாரு. கதை எனக்கு ரொம்ப பிடிச்சுருச்சு.

கொரோனா காலக்கட்டத்தில வாய்ஸ் ரெக்கார்டிங் செய்து கதையை எனக்கு அனுப்பியிருந்தாரு. எனக்கு ஆர்வம் அதிகமா இருந்துச்சு.

கார்த்தி- கீர்த்தி ஷெட்டி
கார்த்தி- கீர்த்தி ஷெட்டி

நலனுடன் ஒரு படம் பண்ணியே ஆகணும்னு நினைச்சேன். கதையை அவர் ரொம்ப ஈஸியா சொல்லிவிட்டாரு.

நான் எத்தனை நாள் தூக்கம் இல்லாம இருந்தேன்னு எனக்கு தான் தெரியும். இந்த கதையைக் கேட்டு எல்லாரும் ஏன் பயப்படுகிறாங்க என நினைத்தேன். உட்கார்ந்து பேசும்போது தான் உண்மை தெரிஞ்சது.

இந்த படத்தில நடிக்கும்போது ரொம்ப பயமா இருந்துச்சு. கத்தி மேல் நடக்கிற மாதிரி தான். கீழே விழுந்தா காலி செஞ்சிடுவாங்க.

நான் ஒரு டாக்குமென்ட்ரி பார்த்தேன். அதில, உனக்கு ஒரு விஷயம் பயமாக இருந்தா அதில் இறங்கிடுன்னு சொல்லியிருந்தாங்க. அதை வச்சுதான் இந்த படத்தில நடிக்க களமிறங்கிட்டேன்" என கார்த்தி பேசியிருக்கிறார்.

சூப்பர் ஸ்டாரின் Mass + Motivational பாடல்கள்! | Photo Album

பொதுவாக எம்மனசு தங்கம் - முரட்டு காளை (1980)ராமன் ஆண்டாளும் - முள்ளும் மலரும் (1981)வேலை இல்லாதவன்தான் - வேலைக்காரன் (1987)ஒருவன் ஒருவன் முதலாளி - முத்து (1995)வெற்றி நிச்சயம் - அண்ணாமலை (1992)ரா ரா ர... மேலும் பார்க்க

What To Watch: படையப்பா, காந்தா, ஆரோமலே - இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி-யில் வந்திருக்கும் படங்கள்!

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகி இருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ் இவைதான்!மகாசேனா (தமிழ்):இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கி விமல், ஸ்ருஷ்டி டாங்கே, யோகி பாபு நடித்துள்ள 'மகாசேனா' தி... மேலும் பார்க்க

Rajinikanth: ``படையப்பா 2 - நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்'' - லதா ரஜினிகாந்த் அப்டேட்

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று, அவரது சூப்பர் ஹிட் படமான படையப்பா வெளியாகியிருக்கிறது. ரசிகர்கள் கொண்டாடிவரும் சூழலில் திரைத்துறையினரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.Latha Raji... மேலும் பார்க்க