BB Tamil 9: ``உனக்கு மேனஸ் இல்லையா?'' - துஷாரிடம் மோதும் திவ்யா
2-வது திருமணத்தை பதிவுசெய்ய முதல் மனைவி சம்மதம் வேண்டும்; கேரள ஐகோர்ட் கூறிய தீர்ப்பு
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முஹம்மது ஷெரீப் (44). 2017-ம் ஆண்டு காசர்கோட்டைச் சேர்ந்த ஆபிதா (38) என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். முதல் மனைவியை விவாகரத்து செய்யாத நிலையில் அவர் தனது இரண்டாவது திருமணத்தைப் பதிவு செய்ய பதிவு அலுவலகத்தை நாடினார். ஆனால், அவரது இரண்டாவது திருமணத்தை அதிகாரிகள் பதிவு செய்ய மறுத்தனர். இதை எதிர்த்து ஷெரீப்பும் அவரது இரண்டாவது மனைவி ஆபிதாவும் கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். ஷெரீப்புக்கு முதல் திருமணத்தின் மூலம் 2 குழந்தைகள் உள்ளனர். இரண்டாவதாகத் திருமணம் செய்த பெண்ணுக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். இரண்டு மனைவியரின் குழந்தைகளுக்கும் தனது சொத்தில் சமபங்கு செல்ல வேண்டும் என்பதற்காக இரண்டாவது திருமணத்தையும் பதிவுசெய்ய முயன்றதாகவும், இரண்டாவது திருமண பதிவிற்கு பதிவாளர் சம்மதிக்கவில்லை என்பதால் ஐகோர்ட்டை நாடியதாகவும் தெரிவித்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஷெரீப்பின் முதல் மனைவியைக் கட்சி சேர்க்கவில்லை எனவும். மனுதாரர்கள் திருமண பதிவாளரிடம் விண்ணப்பிக்கலாம். பதிவாளர் முதல் மனைவிக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இரண்டாவது திருமணம் சட்டத்துக்கு புறமானது என முதல் மனைவி எதிர்ப்பு தெரிவித்தால் பதிவாளர் பதிவு செய்யக்கூடாது. கணவர் இரண்டாவது திருமணம் செய்யும்போது கருத்துகூற முஸ்லிம் பெண்களுக்கும் வாய்ப்பு கிடைக்கட்டும். இரண்டாவது திருமணத்துக்கு 99.99 பெண்கள் சம்மதிக்கமாட்டார்கள்.
முஸ்லிம் தனிநபர் சட்டம் ஒரு முஸ்லிம் ஆணுக்குத் திருமணம் செய்து கொள்ளும் உரிமையை வழங்குகிறது. நாட்டின் அரசியலமைப்பு உரிமைகளைக் கருத்தில் கொள்ளும்போது மதம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை மதிக்க வேண்டும். ஆணுக்கும், பெண்ணுக்கும் அரசியலமைப்பு சம உரிமை வழங்குகிறது. திருமணம் பதிவு செய்ய வேண்டும் என்றால் முதல் மனைவியின் கருத்தை கேட்கவேண்டும். முதல் மனைவி இரண்டாவது திருமணத்தை எதிர்த்தால் அதை கோர்ட்டுக்கு கொண்டுவரலாம் என ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.



















