"திமுக தொழில்த்துறை முதலீடுகளில் ஊழல் பொய்" - பாமக அன்புமணி அடுக்கும் குற்றச்சாட...
``AI என் பதவியைக் கூட பறித்துவிடும்" - AI குறித்து வெளிப்படையாக பேசிய சுந்தர் பிச்சை
செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் CEO (தலைமை நிர்வாக அதிகாரி) பதவியைக் கூட எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அளித்திருக்கும் பேட்டியில், ``AI-ன் வேகமான முன்னேற்றத்தால், உயர் நிறுவன பதவிகள் கூட ஆட்டோமேஷனுக்கு மாறிவிடக்கூடும்.

அனைத்து மட்டங்களிலும் வேலைவாய்ப்பில் AI-ன் தாக்கம் குறித்த கேள்விகள் எழுந்தாலும், அடுத்த ஓர் ஆண்டில் AI மிகவும் சிக்கலான பணிகளைச் செய்து முடிக்கும் வளர்ச்சியைக் காண்பீர்கள். இந்த AI பயனர்களின் சார்பாக சுயாதீனமாக வேலை செய்யும்.
AI அசாதாரண நன்மைகள், புதிய வாய்ப்புகளை உருவாக்கும் அதே வேளையில், சமூக இடையூறுகளையும் கொண்டு வரும். சில வேலைகள் மாறும், பல வேலைகள் மறைந்துவிடும். எனவே, இந்த மாற்றத்தை நிர்வகிப்பது குறித்து சமூகத்திற்கு நேர்மையான உரையாடல் தேவை.
இந்த கவலைகளுக்கு குரல் கொடுப்பதும் அவற்றை விவாதிப்பதும் முக்கியம். எனவே, இளைஞர்களே மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். AI கற்றுக்கொள்பவர்களும், அதை மாற்றியமைப்பவர்களும் சிறப்பாக செயல்படுவார்கள். AI கருவிகள் கற்பித்தல் மற்றும் மருத்துவம் போன்ற தொழில்களை மேம்படுத்தும் என நம்புகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
















