ரூ.2.6 கோடிக்கு குஜராத் அதிரடி வீரரை ட்ரேட் செய்த மும்பை; கூடுதலாக LSG-யிலிருந்த...
BB Tamil 9: "கண்ணு முன்னாடி நடக்கும்போது குமட்டிட்டு வரும்" - மனம் திறக்கும் பிக் பாஸ் பிரவீன்
கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரவீன் ராஜ் எலிமினேட் ஆனது பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்திருந்தது.
வெளியேறும்போது அவர் கண்ணீர் விட்டு கதறியது பிக்பாஸ் வீட்டாரையும் கண்கலங்க வைத்திருந்தது. பெரிதாக சர்ச்சைகளில் சிக்காமல், வீண் கூச்சல் இல்லாமல் விளையாண்ட பிரவீன் வெளியேற்றப்பட்டிருப்பது, 'பிக்பாஸில் என்ன செய்தால்தான் சர்வைவ் ஆக முடியும்' என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்பு சென்ற இடங்களில் எல்லாம் பிரவீனுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும், அன்பும் கிடைத்து அடையாளம் பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் 'டெலி விகடன்' சேனலுக்கு பிரவீன் அளித்திருக்கும் நேர்காணலில் 'பிக்பாஸில் என்ன செய்தால்தான் சர்வைவ் ஆக முடியும்' என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த பிரவீன், "எனக்கும் அந்தக் கேள்விதான் மண்டையில ஓடிக்கிட்டே இருக்கு. பிக்பாஸ், 'திறமையும் டாஸ்க்கும் இந்த வீட்டின் ஒரு அங்கம்தான். அதைவிடவும் உங்கள் கருத்துகளைச் சுதந்திரமாக முன்வைக்க வேண்டியது முக்கியம்' என்பார்.
ஆனால், என்ன பண்ணாதான் பிக்பாஸில் வீட்டில் இருக்க முடியும் என்பது தெரியவில்லை. சண்டை, சர்ச்சை, திறமை என எல்லாம் கலந்த கலவையாகத்தான் இருக்க வேண்டும். பாரு, விக்கல்ஸ் விக்ரம், சுபிக்ஷா என இந்த மூன்று பேரின் கலவையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
பிக்பாஸில் நிறைய குரூப்பிஸம் இருக்கும். நானும் ஒரு குரூப்பில் சிக்கிக் கொண்டேன். ஆனால், சீக்கிரமே அதை உணர்ந்து தனியாக விளையாட ஆரம்பித்துவிட்டேன்.
நான் வெளியேறியதற்குக் காரணம் யாருமில்லை. என்னுடைய தன்னம்பிக்கை குறைவாக இருந்ததுதான் காரணம்" என்று பேசியிருக்கிறார்.
அடல்ட் டாபிக் குறித்து கேட்டதற்கு, "எங்க முன்னாடியே அது நடந்திருக்கு. அதெல்லாம் நேர்ல பார்க்கும்போது குமட்டிட்டு வரும். நாங்களே கூப்டு இதெல்லாம் பண்ணாதீங்கனு சொல்லிருக்கோம். சொன்ன பிறகு எங்க முன்னாடி அப்படி நடந்தது இல்ல. ஆனா அதெல்லாம் சிலர் கண்டெண்ட்டுக்காகத்தான் பண்ணாங்க" என்றவர் இன்னும் பல விஷயங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்.
வீடியோவைக் காண:
Prankல தான் எல்லாருடைய உண்மை முகம் தெரிஞ்சது..! - Biggboss Praveen Raj Dev Shares | Serial | Cinema




















