Jana Nayagan release ஆவதில் சிக்கல், நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன? | PMK | ...
BB Tamil 9: ரெட் கார்டு மூலம் வெளியேறுபவருக்கு சம்பளம் இல்லையா? அக்ரிமென்ட் சொல்வது இதுதான்!
எதிர்பாராததை எதிர்பாருங்கள்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ஒரு பிக்பாஸ் சீசனில் இந்த வாசகம் ரொம்பவே பிரலமானது.
இப்போது உண்மையிலேயே எதிர்பாராததுதான் நடந்திருக்கிறது.
சுமார் 90 நாட்கள் வரை அந்த வீட்டுக்குள் கன்டென்ட் தருபவர்களாக இருந்து, வலுவான போட்டியாளர்களாகத் திகழ்ந்ததால், டாப் 5 பேர்களில் இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரெட் கார்டு கொடுத்து அதிரடியாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் விஜே பார்வதி, கமருதீன் இருவரும்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் எவிக்ட் ஆகி வெளியேறும்போது, நினைவுப் பரிசு கொடுத்து, சக போட்டியாளர்கள் கண்ணீருடன் விடை தர, தொகுப்பாளர் கூப்பிட்டுப் பேசி பயண வீடியோவெல்லாம் போட்டு அனுப்புவார்கள்.
ஆனால் யாராவது ரெட் கார்டு வாங்கி வெளியேறினால், இந்த நடைமுறைகள் கிடையாது.
பார்வதியும் கமருதீனும் வெளியேறிய போது இதுதான் நடந்தது.
சரி, இப்படி வெளியேறுபவர்களுக்கு நிகழ்ச்சியில் இருந்த நாட்கள் வரைக்கும் சம்பளமாவது கிடைக்குமா?
பெயர் குறிப்பிட விரும்பாத அந்தப் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர் இப்படிக் கூறினார்..
''சம்பளம்னு ஒரு பைசா கிடையாது. ஏன்னா நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தொடர்பா முதல்ல ஒரு அக்ரிமென்ட் போடுறாங்களே, அதுலயே இது பத்தி தெளிவாகக் குறிப்பிட்டுடுறாங்க.
'ரெட் கார்டு'ங்கிறது நிகழ்ச்சிக்கான விதிகளை மீறினாத தரப்படுகிற தண்டனை. அதனால அந்தக் கார்டு வாங்கி வெளியில் வர்றவங்களுக்குச் சம்பளம்னு எதுவும் கிடையாது. அதுமட்டுமில்ல, வெளியேறுன பின்னாடி, அந்த நிகழ்ச்சி தொடர்பா நடக்கிற எந்த ஈவென்ட்லயும் அவங்க கலந்துக்கவும் முடியாதுனு தெளிவாகச் சொல்லிடுறாங்க.

இவ்வளவு ஏன், அந்த வீட்டுக்குள் இருந்த சமயத்துல, அங்க ஏதாவது விளையாட்டுகள்ல கலந்து ஜெயிச்சிருந்தா ஸ்பான்சர்ஸ் தரர்றதா அறிவிச்சிருந்த பரிசுப் பொருட்களைக் கூட தர மாட்டாங்க.
தமிழ் பிக்பாஸில் இப்படி வெளியேறிய எல்லாருக்குமே இதுதான் நடந்தது" என்றார்.
தமிழ் பிக்பாஸில் இதுவரையிலான சீசன்களில் சக போட்டியாளர்களிடம் தாறுமாறாக நடந்து கொண்டார் என நடிகர் மகத், பெண் போட்டியாளர்கள் தங்களுக்குப் பாதுகாப்பில்லை எனப் புகார் தந்தனர் எனச் சொல்லி நடிகர் பிரதீப் ஆண்டனி போன்றோர் ரெட் கார்டு தந்து அனுப்பப்பட்டனர். தன் கடந்த காலத்தில் செய்த ஒரு செயலை விவரித்தார் என நடிகர் சரவணனும் வெளியேற்றப்பட்டார்.
இவர்கள் தவிர, வேறு சில காரணங்களுக்காக திருநங்கை நமீதா மாரிமுத்து, நடிகை மதுமிதா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது நினைவிருக்கலாம்.


















