ஜொலிக்கும் மெட்ராஸ் சட்டக் கல்லூரி : புதுப்பொலிவுடன் 126 ஆண்டுகள் பழமையான பாரம்ப...
BB Tamil 9 Day 45: புதிதாக உருவாகும் ‘லவ் டிராக்’; கணவரின் வெற்றிக்காக காய் நகர்த்தும் சாண்ட்ரா
டாஸ்குகளை ஸ்பைஸியாக சமைத்துத் தருவார்கள் என்று பார்த்தால் கத்தரிக்காய் பொறியலில் காரம் என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சாண்ட்ரா தலைமையில் சாம்பார் அணியின் வன்மம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேயிருக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 45
“ஒவ்வொரு டாஸ்க் முடியும் போதுதான் ஒவ்வொருத்தர் முகத்திரை கிழியுது” என்று திவ்யாவுடன் புறணி பேசிக்கொண்டிருந்தார் சாண்ட்ரா. அவரது முகத்திரையும் சேர்ந்தே கிழிகிறது என்பதை உணர்கிறாரா?
‘சாப்பாடு காரமா இருந்துச்சு.. எனக்கு பிடிச்சிருந்தது’ என்று நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டே வந்து சொன்னார் வினோத். ஆனால் இந்தக் காரம் கெமிக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக கம்ருதீனுக்கும் மெகிக்கும் இடையே ஈகோ மோதல் எழுந்தது. வழக்கம் போல் திமிராக பேசினார் கம்மு. அடுத்த நாள் நடக்கப் போகும் சண்டையை டிரைய்லர் காட்டி இப்போதே உணர்த்தினார் பிக் பாஸ்.

நாள் 45. ஆதிரை விலகிய பிறகு வியானாவுடன் நெருக்கமாக எஃப்ஜே முயல்கிறார் போலிருக்கிறது. என்னதான் ‘அண்ணா’ என்று அழைத்து இந்த உறவை பாவனையாக துண்டிக்க முயன்றாலும் வியானாவிற்குள்ளும் ஒரு ஈர்ப்பு இருப்பதை க்ளோசப் காட்சிகள் மூலம் காமிராக்கள் தெரிவிக்கின்றன. (புது லவ் கன்டென்ட் ஆக இது மாறுமா?!)
ஆளாளுக்கு ஜோடியாக சுற்றுவதால் காண்டாகியிருக்கும் பாருவிற்கு கம்மு -அம்முவின் நெருக்கம் வேறு கூடுதல் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. “அவங்க என்ன டிரை பண்றாங்க.. ‘உனக்கு எத்தனை புருஷன்னு’ கம்மு கேட்டு எரிச்சல் பண்றான். வேற யாராவது கேட்டிருந்தா கூட ஹர்ட் ஆகியிருக்க மாட்டேன்” என்று ரம்யாவிடம் பாரு உருகிக் கொண்டிருக்க, “நீ காண்டாகிறேன்னு தெரிஞ்சா ஓவரா பண்ணுவான். அடக்கி வாசி.. அவாய்ட் பண்ணு” என்று அட்வைஸ் தந்து கொண்டிருந்தார் ரம்யா.
கணவர் பிரஜின் வெற்றி பெறுவதற்காக காய் நகர்த்தும் சாண்ட்ரா
டாஸ்க்கில் பெஸ்ட் மற்றும் வொர்ஸ்ட் ஃபர்பார்மரை தேர்ந்தெடுக்க வேண்டும். அணித்தலைவர்கள் கூடிப் பேசி இதை முடிவு செய்ய வேண்டும். விக்ரமும் சாண்ட்ராவும் கூடிப் பேசி பெஸ்ட் ஆக அமித்தையும் வொர்ஸ்ட் ஆக ரம்யாவையும் தேர்ந்தெடுத்தார்கள்.
இதைப் போலவே ரம்யாவும் சாண்ட்ராவும் கூடிப் பேசி பெஸ்ட் ஆக பிரஜினையும் வொர்ஸ்ட் ஆக விக்ரமையும் தேர்ந்தெடுத்தார்கள். தன் கணவர் பிரஜினை இத்தனை வெளிப்படையாக சப்போர்ட் செய்கிறோம் என்கிற கூச்சம் சாண்ட்ராவிடம் துளி கூட இல்லை. பிரஜினை பெஸ்ட் ஆக தேர்வு செய்தது சாண்ட்ராவின் சுயநலம் என்றால், விக்ரமை வொர்ஸ்ட் என்று சொன்னதற்கு ரம்யாவின் பழிவாங்கல்தான் காரணமாக இருக்கவேண்டும். நாம் பார்த்தவரை விக்ரம் சிறப்பாகவே செயல்பட்டார்.

சாம்பார் அணிக்காக விக்ரமும் ரம்யாவும் கலந்தாலோசித்து பெஸ்ட் ஆக கனியையும் வொர்ஸ்ட் ஆக சாண்ட்ராவையும் தேர்ந்தெடுத்தார்கள். “ஆக.. வொர்ஸ்ட் ஆக வந்திருப்பது மூணு டீம் கேப்டனுமா?” என்று பிக் பாஸ் கேட்க “அட.. ஆமால்ல..’ என்று மக்கள் வியந்தார்கள்.
சாம்பார் அணியில் நெகட்டிவிட்டிதான் இருக்கிறது, கிரியேட்டிவிட்டி இல்லை என்கிற புகார் தொடர்ந்து வருகிறது. (பாருவும் சாண்ட்ராவும் அங்கு இருக்கும் வரை வேறு என்ன வரும்?!). எனவே ‘சரக்கு வெச்சிருக்கேன்.. இறக்கி வெச்சிருக்கேன்’ என்பது மாதிரி பாடல் பாடி டீம் ஃபொ்பார்மன்ஸ் செய்தார்கள். “எல்லாம் வாயிலதான் வடை சுடுவாங்க. கண்ல காட்ட மாட்டாங்க” என்று கிண்டலடித்தார் வினோத்.
பிக் பாஸ் வீட்டில் புதிதாக உருவாகும் ‘லவ் டிராக்’
வியானாவிற்கு ஆப்பிள் ஊட்டி சகல திசைகளிலும் கோல் போட முயல்கிறார் கம்மு. இதனால் பாருவின் வயிற்றெரிச்சல் கூடி “ஏன் புள்ள.. இப்படி இருக்கச் சொல்லியா உங்க வீட்ல கத்துக் குடுத்தாங்க.. தாடிக்காரப் பயல நம்பாத” என்று ஜாலியான பாவனையில் கடுப்பாகிக் கொண்டிருந்தார்.
டாஸ்க்கில் தன்னை வொர்ஸ்ட் என்று விக்ரம் சொல்லிவிட்டதால் ‘கோ’வென்று அழுது கொண்டிருந்தார் ரம்யா. “நான் ரொம்ப உடைஞ்சுட்டேன். வார்த்தையால குத்தறாங்க. காரணம் சொல்றாங்க பார்த்தியா.. அதுதான் தாங்கலை. நான் எவ்வளவு வேலை பண்ணேன் தெரியுமா..” என்று சாண்ட்ராவிடம் அவர் புலம்ப “விக்ரமும் நிறைய வேலை செஞ்சான்” என்று அங்கு வந்த கம்மு சொல்ல “நான் பண்ணத அவர் பார்க்கலைல்ல.. அது போலத்தான். அவர் பண்ணத நான் பார்க்கல..” என்று விதாண்டாவாதம் செய்தார் ரம்யா.

சாம்பார் டீம் விதியை மீறி அவர்கள் இஷ்டத்திற்கு சமைத்து வைப்பதால், மற்றவர்களைக் கேட்டு என்ன மெனு என்பதை போர்டில் எழுதி வைக்க வேண்டும் என்று பிக் பாஸ் உத்தரவிட்டார். மற்ற அணிகளுக்கு மகிழ்ச்சி. ஆனால் சாம்பார்களான பாருவும் சாண்ட்ராவும் ‘இவங்களுக்கு வடிச்சுக் கொட்டியே’ என்று அலுத்துக் கொண்டார்கள்.
வினோத் தனக்கான உணவாக ‘கத்தரிக்காய் பொறியல்’ காரமாக செய்யச் சொல்லியிருந்தார். அது அவருக்கு ஓகே. ஆனால் மற்றவர்களுக்கு மிகவும் காரமாக இருந்ததால் கிச்சன் டீம் அதை எடுத்து கீழே ஒளித்துவிட்டது. “காரமா இருந்தாலும் பரவாயில்ல. கொஞ்சம் வைங்க” என்று அரோரா வந்து நிற்க, வேறு சிலரும் அதைப் பின்பற்றினார்கள். “ரொம்ப காரமா இருக்கு. அப்புறம் புகார் பண்ணாதீங்க” என்கிற எச்சரிக்கையுடன் எடுத்துத் தந்தார் திவ்யா.
கத்தரிக்காய் பொறியலை வைத்து நிகழ்ந்த காரமான சண்டை
தயிர் சாதத்துடன் வந்த கெமி “எனக்கும் வைங்க” என்று சொல்ல “ஏம்மா.. நீ நேத்தே சாப்பாடு காரமா இருக்குன்னு சொல்லிட்டு இருந்தே.. இது ரொம்ப காரமா இருக்கு. வினோத்திற்காக செஞ்சது’ என்று திவ்யா எச்சரித்தும் ‘பரவாயில்ல. வையி.. காரக்குழம்பிலேயே நீச்சல் அடிக்கறவ நானு’ என்கிற மாதிரி வாங்கிச் சென்ற கெமி “அய்யோ.. பயங்கர காரம்.. ஏன்.. இதை பொதுவா சாப்பிடற சமைக்கக்கூடாதா?” என்று கேட்க அதைத் தொடர்ந்து மோதல் உருவானது.

“யப்பா.. சாமி.. தெரியாம கேட்டுட்டேன்” என்று எரிச்சலுடன் சாப்பாட்டுத் தட்டை தூக்கிச் சென்றார் கெமி. எங்கே குப்பையில் போட்டு வீக்கெண்டில் வாங்கிக் கட்டிக் கொள்வாரோ என்று பார்த்தால்.. இல்லை. கார்டன் ஏரியாவிற்கு தூக்கிச் சென்று வைத்து விட்டு தனிமையில் ‘கோ’வென்று அழுது தீர்த்தார். அங்கு வந்த ரம்யா சமாதானம் செய்தார். இந்த விஷயத்தில் கெமி செய்வது அநாவசியமான சீன் என்றுதான் தோன்றுகிறது.
‘வீக்லி டாஸ்க்லதான் சொதப்பறீங்க.. டெய்லி டாஸ்க்கையாவது சுவாரசியமா செய்ங்க’ என்பது மாதிரி பாடலை வைத்து பிராப்பர்டியை கண்டுபிடிக்கும் ஆட்டத்தை ஆரம்பித்தார் பிக் பாஸ். இது ஒரு வகையில் சுவாரசியமாக சென்றது.
‘வந்தேண்டா பால்காரன்’ பாடலின் prelude ஒலிக்க, வினோத் சரியாக ஓடிச் சென்று பால் கேனை எடுத்துக் கொண்டார். ஆனால் கம்ருதீனோ சைக்கிளை நோக்கி ஓடியது தவறு. இன்னொரு பிராப்பர்ட்டியை சரியாக கண்டுபிடித்த அரோரா மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட “யம்மாடி.. இத்தனை நாள் வாங்கின பேமெண்ட்டுக்கு இன்னிக்குத்தான் வேலை செஞ்சே. குட்.. கீப் இட் அப்” என்று பாராட்டினார் பிக் பாஸ்.
கம்முவின் காட்டில் ரொமான்ஸ் மழை
‘கண்கள் இரண்டால்’ பாடல் ஒலிக்க, சரியாக சைக்கிளை தேடிச் சென்று எடுத்து ஓட்டிய கம்ருதீனைப் பார்த்து அரோரா புன்னகை பூக்க “உங்களுக்குன்னு வந்து பாட்டு அமையுது பாருங்க கம்ரு’ என்று பிக் பாஸ் கிண்டலடித்தார். பாருவின் வயிற்றெரிச்சல் கூடியது. போலவே செல்ஃபி புள்ள பாடலுக்கும் கம்முவும் அம்முவும் இணைந்து பாட காண்டாகி பார்த்துக் கொண்டிருந்தார் பாரு.
‘எங்க கிட்டயும் சீப்பு இருக்கு.. நாங்களும் சீவுவோம்’ என்கிற மாதிரி எஃப்ஜேவும் களத்தில் குதித்தார். ‘கூட மேல கூட வெச்சு’ பாடலுக்கு சரியான பிராப்பர்ட்டியை கண்டுபிடித்து ஆட, அவரைப் பார்த்து வெட்கப்பட்ட வியானாவிற்கு க்ளோசப் காட்சிகள் பறந்தன. ‘சொட்டச் சொட்ட நனையுது’ பாடலுக்கு தாஜ்மஹால் பொம்மையை எடுத்து கம்மு ஆட இந்த முறை முந்திக் கொண்டு வம்படியாக அவருடன் இணைந்து ஆடினார் பாரு.

அடுத்த பாடல் ஒலிக்க ஆரம்பிக்க, வேகமாகச் சென்ற கனியை முந்திக் கொண்டு ஓடினார் வினோத். இதன் விளைவாக கனி கீழே விழ, பிராப்பர்டியை எடுத்துக் கொண்டார் வினோத். கனிக்கு ஆதரவாக பாரு களத்தில் இறங்கி ‘தள்ளி விட்டுட்டாங்க.. தள்ளி விட்டுட்டாங்க” என்று கூப்பாடு போட “நான் தள்ளி விடலை. வேணுமின்னு செஞ்சா மாதிரி டிவிஸ்ட் பண்ற” என்று பாருவை நோக்கி சத்தம் போட்டார் வினோத். “குறும்படம் போடுவாங்க.. அப்ப தெரியும் சேதி” என்று பாருவும் மல்லுக்கட்டினார். கனிக்கு பாரு ஆதரவா என்று ஆச்சரியப்படத் தேவையில்லை. சாம்பார் டீமிற்கு பாயிண்ட் போச்சே என்பதுதான் பாருவின் கவலை.
இறுதியில் மாப் மாயாவிஸ் இந்த டாஸ்க்கில் வென்றது. ‘வாயை மூடு’ என்கிற மாதிரி பாரு தன்னை நோக்கி கையை காட்டியதால் கோபம் அடங்காத வினோத் பஞ்சாயத்தில் அதை சுட்டிக் காட்ட “அப்படித்தான் பண்ணுவோம். நான் எந்த டோன்ல சொல்லணும்னு நீ முடிவு பண்ணக்கூடாது” என்று அலட்டலாக பதில் சொன்னார் பாரு. “அவ இப்படித்தான் டிரிக்கர் பண்ணுவா. நீ ஃப்ரீயா விடு” என்று வினோத்திற்கு சமாதானம் சொன்னார் கம்மு.
பாயிண்ட்ஸ்களை அள்ளிக் கொடுத்த சாண்ட்ரா
பாயிண்ட் தரும் நேரம். மாப் மாயாவிஸ் அணிக்கு நான்கு காயின்களை லம்ப்பாக தூக்கிக் கொடுத்தார் சாண்ட்ரா. அந்த டீமில் பிரஜின் இருப்பதுதான் காரணம். வெல்கிற அணியில் உள்ள அனைவரும் வீட்டு தல டாஸ்க்கில் பங்கேற்க முடியும் என்பதால் தன் கணவரை தலைவராக்கிப் பார்க்க மற்றவர்களின் உழைப்பை விரயமாக்குகிறார் சாண்ட்ரா. “இத்தனை காயின் கொடுக்கத் தேவையில்ல’ என்று கனி ஆட்சேபித்தும் உபயோகமில்லை. வீக்கெண்ட் பஞ்சாயத்தில் இது விசாரணைக்கு வரலாம்.

வென்ற அணிக்கு ரிவார்டாக பிரியாணி வந்தது. “எல்லோரும் ஷேர் பண்ணி சாப்பிடலாம்” என்று விக்ரம் சொல்ல “நாம அதை வாங்கவே கூடாது” என்று பாருவும் சாண்ட்ராவும் முடிவு செய்தார்கள். ‘வாங்க. சாப்பிடலாம்’ என்று கெஞ்சியும் வரவில்லை.
பாருவின் அலப்பறையை கண்டித்தபடியே வீட்டுக்குள் வைல்ட் கார்டாக வந்த சாண்ட்ரா, இப்போது பாருவையே மிஞ்சி விடுவார் போலிருக்கிறது.

















