செய்திகள் :

BB Tamil 9 Day 63: ரம்யாவை வறுத்தெடுத்த விசே; சான்ட்ராவின் ஹைவோல்டேஜ் அழுகை டிராமா; என்ன நடந்தது?

post image

ரெட்ரோ சினிமா அணியை ஜெயிக்க வைத்து, தனது அணியில் உள்ள அனைவரையும் காப்பாற்றிய பிரஜின், இந்த வாரத்தில் வெளியேற்றப்பட்டது சுவாரசியமான முரண். 

எதிர்பார்த்தபடியே சான்ட்ரா கதறித் தீர்த்தார். பிரிவின் துக்கம் தாங்காமல் வெளியே ஓடினார். இந்த கேமிற்குள் வரும்போது இதெல்லாம் நடக்கும் என்பது அவருக்குத் தெரியாதா?

கணவரின்மீது பாசம் காட்டுவதாகட்டும்,  மற்றவர்களின்மீது வன்மம் காட்டுவதாகட்டும், எல்லாவற்றிலும் எக்ஸ்ட்ரீம் லெவலில் செயல்படும் சான்ட்ரா ஒரு புதிரான காரெக்டர். 

BB Tamil 9 Day 63
BB Tamil 9 Day 63

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 63

“எதையாவது கேட்டு ஷோவை ஆரம்பிப்போம். எதைக் கேட்டாலும் கரகாட்டக்காரன் படத்தின் செந்தில் மாதிரிதான் இவங்க மூஞ்சை வெச்சிக்கப் போறாங்க” என்று விரக்தியுடன் உள்ளே வந்தார் விசே. வினோத்திற்கு தரப்பட்ட டிஆர் விக்கை, சற்று பட்டி டிங்கரிங் பார்த்து விசேவிற்கு போட்டு விட்டது போல ‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் லுக்கில் இருந்தார் விசே. 

“மத்தவங்க உழைப்பை எடுத்துக்கிட்டு, அவங்களை மிதிச்சி மேல வர்றவங்க யாரு. ரெண்டு பேரைச் சொல்லுங்க?” என்று முதல் கேள்வியை ஆரம்பித்தார் விசே. 

ஆளாளுக்கு அவர்களின் பரம எதிரிகளின் பெயரைச் சொன்னார்கள். “இதுல சில பேர் மட்டும்தான் நேர்மையா பதில் சொன்னீங்க. மத்தவங்க சொன்னதுல அவங்க தனிப்பட்ட வன்மம் மட்டும்தான் தெரிஞ்சது. இந்த ஆட்டத்தை ஆட்டமா பார்க்கறீங்களா.. எப்படிப் பார்க்கறீங்கன்னு தெரிஞ்சுக்கத்தான் இந்த டாஸ்க். அதை நீங்க புரிஞ்சிக்கிட்டா எனக்கு சந்தோஷம். ஆனா அந்த சந்தோஷத்தை நீங்க எப்போ தருவீங்கன்னு தெரியல” என்று விரக்தியுடன் பிரேக்கில் சென்றார் விசே. 

இதை கேமாக மட்டுமே அணுகுகிறவராக விக்ரமை சொல்ல முடியும். அவர்தான் தனிப்பட்ட கசப்புகளைத் தாண்டி ‘இந்த கேம் இப்படித்தான் இருக்கும்’ என்கிற புரிதலுடன் காய்களை நகர்த்துகிறார். அதனால்தான் அவரால் பரம எதிரியான பாருவுடன் ஒரு லவ் & ஹேட் ரிலேஷன்ஷிப்பை மெயின்டெயின் செய்ய முடிகிறது. 

‘டெட்பாடியை சுத்தி உக்காந்த மாதிரி இருந்தாங்க’  - வினோத் காமெடி

‘நெக்லஸ் டாஸ்க்கை’ நேற்றே விசாரித்து முடித்து விட்டார் என்று பார்த்தால், தூசு தட்டி மீண்டும் ஆரம்பித்தார் விசே. நெக்லஸை திறமையாக ஒளித்து வைத்த பிரஜினையும் வெற்றி பெற்ற ரெட்ரோ சினிமா அணியையும் பாராட்டி “எதிர் டீம்.. என்னதான் ஸ்ட்ராட்டஜி பண்ணீங்க?” என்று விசாரித்தார். 

BB Tamil 9 Day 63
BB Tamil 9 Day 63

“எங்களால என்ன பண்ண முடியும் சார். ஃப்ரீசர் பாக்ஸ்ல வெச்ச டெட்பாடி பக்கத்துல உக்காந்த மாதிரி சுத்தி உக்காந்திட்டே இருந்தாங்க. எழுந்திருக்கவேயில்ல” என்று வினோத் சொல்ல சபை சிரித்தது. 

“சண்டை போடற நேரத்துல நீங்க உக்காந்து யோசிச்சிருந்தா ஐடியா கிடைச்சிருக்குமே.. கத்தறது மட்டும்தான் உங்களுக்கு தெரியுது.. என்னாச்சு வினோத்.. உங்களுக்கு அப்படி கோவம் வருது.. உங்க மேல வைக்கிற விமர்சனத்தை உங்களால ஏத்துக்க முடியல. எதிர்ல இருக்கறவங்க பேச ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே பாயறீங்க..” என்று விசே காட்டமாக குற்றம் சாட்ட, அப்போதும் பதட்டமானார் வினோத். “பார்த்தீங்களா. இப்பக் கூட அதையேதான் பண்றீங்க” என்று விசே சலித்துக் கொள்ள ‘ஸாரி சார்’ என்றார் வினோத். 

“எனக்கு சபரி மேலதான் சந்தேகம். எதிர் டீம் ஆளுங்க மேல இருக்கற பாசத்தால டாஸ்க்கை விட்டுட்டாரு” என்று வினோத்தும் கம்ருதீனும் குற்றம் சாட்ட, சபரி அப்செட் ஆனார். “அடப்பாவிங்களா.. நைட்டு ஃபுல்லா தூங்காம காவல் காத்தேன்.. என்னைப் போய்..” என்று நொந்து போனார். 

‘தப்புன்னா பிக் பாஸ் சொல்ல மாட்டாரா?’ - பாருவை மடக்கிய விசே

பிரேக் முடிந்து திரும்பிய விசேவிடம் “ஆர் யூ ஓகே பேபி..? என்று பார்வையாளர்களில் ஒருவர் கேட்க “நாட் ஓகே பேபி” என்று குறும்பாக பதிலளித்தார் விசே. முதலில் பாருவை கேள்வி கேட்ட விசே “நான் எதையெல்லாம் கேட்கணும்ன்னு நீங்க லிஸ்ட் போடறீங்க.. இல்லையா?” என்று கேட்க “அது வந்து சும்மா வழிநடத்துதல்..” என்று பாரு அசடு வழிய, “பெண்டிங் லிஸ்ட் ஏதாச்சும் இருக்கா. சொல்லுங்க” என்றார் விசே சர்காஸமாக. 

ஆக்டிவிட்டி ஏரியா கதவை விக்ரம் மூடியது தொடர்பான புகாரை மறுபடியும் தூசுதட்டி பாரு சொல்ல “அது தப்புன்னா பிக் பாஸ் சொல்லியிருக்க மாட்டாரா.. நேத்து உங்களுக்கு ஆதரவா பேசினப்ப நல்லா இருந்துதுல்ல.” என்று பாருவை உட்காரவைத்தார் விசே.

BB Tamil 9 Day 63
BB Tamil 9 Day 63

கம்ருதீனின் ‘ரெமோ’ குரலிலேயே அவரை விசே பாராட்டியது சுவாரசியமான குறும்பு. வீட்டு ‘தல’ ரம்யா பேசிக் கொண்டிருக்கும் போது குறுக்கிட்டு கத்திக் கொண்டிருந்த பாருவை விமர்சித்த விசே ‘ஒரு அதிகாரத்தை எதுக்காக தரோம். அவர் பேச்சை கேட்பாங்கன்னுதானே..” என்று கேட்க, வழக்கம்போல் பல் கடித்தபடி சிரித்து சமாளித்தார் பாரு. 

கம்ருதீனை அவமரியாதையாக பேசிய ரம்யாவிற்கு ஒரு குட்டு. ரம்யாவிடம் முரட்டுத்தனமாக பேசிய கம்முவிற்கும் ஒரு குட்டு. சண்டைபோட்ட திவ்யாவிற்கு ஒரு குட்டு. “உங்களுக்கு கோபமா சண்டை போடத் தெரியுது. பழிவாங்கத் தெரியுது. ஆனா ஆட்டத்துல ஒண்ணுமே காணோம்” என்று சலித்துக்கொண்டார் விசே. 

‘பேமெண்ட் வாங்கறதுக்கு ஏத்த வேலையை செய்யணும் - ரம்யாவை வறுத்தெடுத்த விசே

அடுத்ததாக கேப்டன்ஸி பற்றிய விசாரணை. இதைப் பற்றி விசாரிக்க என்ன இருக்கிறது? ரம்யாவால் இத்தனை கொந்தளிப்பான வீட்டை கையாள முடியாது என்று ஆரம்பத்திலேயே சொல்லிருந்தேன். “அட்வைஸர்ன்ற பேர்ல என்னையே வேலை வாங்கினாங்க” என்று விக்ரம் சொல்ல “தலன்றது எத்தனை பெரிய பொறுப்பு? அதை இன்னொருத்தர் கிட்ட கொடுத்துட்டு நீங்க பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டீங்களே?” என்று ரம்யாவை வறுத்தெடுத்தார் விசே. 

“தல பேச்சை இவிய்ங்க கேட்கவே மாட்டாங்க சார். நான் அனுபவிச்சிருக்கேன்” என்று சைடு கேப்பில் திவ்யா வண்டியை ஓட்ட “நீங்க அதே இடத்துலயே நின்னுட்டிருக்கீங்க.. அதுல இருந்து வெளியே வாங்க” என்று சலித்துக்கொண்டார் விசே. “நான் பாவம்ன்ற மாதிரியே காட்டிக்காதீங்க. அது பலவீனம். இந்த ஷோவிற்கு நீங்களும் பேமெண்ட் வாங்கறீங்க. நானும் வாங்கறேன். அதுக்கேத்த உழைப்பைத் தர வேண்டாமா?” என்று ரம்யாவை கடிந்து கொள்வது போல் அனைவருக்கும் ஊமைக்குத்தை பரிசாகத் தந்தார் விசே. 

எவிக்ஷன் நேரம். ஒவ்வொருவரையும் காப்பாற்றி அவர்களுக்கான அட்வைஸ்களை சொல்ல எஞ்சியவர்கள் பிரஜின், எஃப்ஜே மற்றும் சான்ட்ரா. 

BB Tamil 9 Day 63
BB Tamil 9 Day 63

பிரஜின் எவிக்ஷன் - சான்ட்ராவின் ஹைவோல்டேஜ் அழுகை டிராமா

“ஓகே.. பார்த்துடலாமா?” என்ற விசே ‘பிரஜின்’ என்று எழுதப்பட்டிருந்த கார்டை காட்ட, எதிர்பார்த்தது போலவே சான்ட்ராவின் அலப்பறை ஆரம்பித்தது. “இங்க என்னால தனியா இருக்க முடியாது. என்னையும் கூட்டிட்டு போ” என்று முதல் நாள் எல்கேஜி குழந்தையைப் போல கதற ஆரம்பித்தார் சான்ட்ரா. 

“நான் நல்லா ஆடி நல்ல பெயரோடதான் வெளியே போறேன். உன்னைப் பார்த்துக்க நிறைய பேர் இருக்காங்க. நீ தைரியமா ஆடி ஃபைனல் வரணும். வெளியே போய் நான் குழந்தைகளைப் பார்த்துக்கறேன்” என்று பிரஜின் எத்தனை ஆறுதல் சொன்னாலும் சான்ட்ராவின் அழுகை ஓயவில்லை. ‘யம்மா.. தாயி.. போன முறை மாதிரி மயக்கம் போட்றாத. தண்ணிய குடி’ என்று எச்சரிக்கையாகச் சொன்னார் திவ்யா. 

‘எல்லோரையும் வெளியே இழுத்து தள்ளி வீட்டை பினாயில் ஊத்திக் கழுவணும்’ என்று வீறாப்பாக சொல்லி விட்டு உள்ளே சென்ற சான்ட்ரா, ஒரு கேமில் கணவர் வெளியேறுவதைத் தாங்க முடியாமல் அழுதுத் தீர்ப்பது ஆச்சரியம். 

மற்றவர்களை வெறுப்பேற்றுவதிலும் இறுக்கமான முகத்தை வைத்துக்கொண்டு வன்மத்தைக் கொட்டுவதிலும் கணவர் செய்த தவறுக்காக தனிமையில் உட்கார்ந்து பழிவாங்குவதிலும் சான்ட்ராவின் இன்னொரு முகம் தெரிகிறது. இத்தனை சிக்கலான ஆளுமையைக் கொண்டவருடன் குப்பை கொட்டுவது மிகச்சிரமமான விஷயம். இந்த விஷயத்தில் பிரஜினைப் பார்க்க பாவமாக இருக்கிறது. 

BB Tamil 9 Day 63
BB Tamil 9 Day 63

‘டபுள் எவிக்ஷனின் மூலம் சான்ட்ராவையும் அனுப்பியிருக்கலாமோ?’


பிரஜின் வெளியேற்றத்திற்காக மெயின் கேட் திறக்க, அவருக்கு முன்னால் பாய்ந்து இந்த டிராமாவின் கிளைமாக்ஸை நிகழ்த்தினார் சான்ட்ரா. இந்த டிராமாவை எதிர்பார்த்துதான் பிரஜினும் வெளியேற்றப்பட்டாரோ என்னமோ. பிக் பாஸின் திருவிளையாடலே தனி ரகம்தான். “நாங்க ஒண்ணா ஆடலை” என்று அடம்பிடித்து அப்படிச் சொன்னவர்களைத் திட்டித் தீர்த்த சான்ட்ரா, இந்தச் செய்கையின் மூலம் ‘நாங்க ஒண்ணாதான் ஆடினோம்’ என்பதை நிரூபிக்கிறார். 

ஒருவழியாக சான்ட்ராவிடமிருந்து தப்பித்து மேடைக்கு வந்த பிரஜினிடம் “இப்பத்தான் மாறி கொஞ்சம் ஒழுங்கா ஆட ஆரம்பிச்சீங்க” என்று வருத்தம் தெரிவித்தார் விசே. பிரஜினின் எவிக்ஷன் முடிந்து விட்டதால், மீண்டும் ‘மச்சான்.. டேய்..’ என்று இருவரும் தங்களின் நட்பை புதுப்பித்துக் கொண்ட காட்சி க்யூட்டாக இருந்தது. “உனக்கு நான் ஃபேவரிஸம் காட்டினேன்னு வெளிய திட்றாங்க. போய் பாரு” என்றார் விசே குறும்பாக. 

வீட்டிற்குள் வந்து அனைவருக்கும் வாழத்து சொல்ல வந்த பிரஜினுக்கு சான்ட்ராவை சமாதானப்படுத்துவதே வேலையாக இருந்தது. ‘அழறா.. சார்.. மறுபடியும் உள்ள போயிடட்டுமா’ என்று ஜாலியாக விசே வை கேட்டுக் கொண்டிருந்தார். ‘இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு’ என்று விசேவே கதறும்படியாக சான்ட்ராவின் அழுகை ஓயாமல் இருந்தது.

BB Tamil 9 Day 63
BB Tamil 9 Day 63

 ‘இந்தக் காதல் கதையுடன் நானும் விடைபெறுகிறேன்’ என்று கிளம்பி விட்டார் விசே. அழுது கொண்டிருந்த சான்ட்ராவிடம் ரம்யாவும் எஃப்ஜேவும் ஆறுதல் சொல்ல “இது என்னடா இது ஓவரா இருக்கு” என்கிற மாதிரி மற்றவர்கள் வெளியே அமர்ந்திருந்தார்கள். 

பிக் பாஸ் வரலாற்றில் முதன் முறை தம்பதியாக உள்ளே சான்ட்ரா - பிரஜின் ஜோடியை ‘டபுள் எவிக்ஷன்’ என்கிற பெயரில் தம்பதியாகவே வெளியே அனுப்பியிருந்தால் அதுவும் ஒரு சுவாரசியமான வரலாறாக இருந்திருக்கும். சான்ட்ராவின் இத்தகைய அழுகாச்சி டிராமாவை பார்க்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. 

நீண்ட நாள் நண்பருடன் நிச்சயதார்த்தம்; பிக் பாஸ் ஜூலி கரம் பிடிக்கப்போவது இவரைத்தான்!

சென்னையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த நர்ஸ் மரியானா ஜூலியை, தமிழக அளவில் பிரபலமாக்கியது, கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம். தன்னெழுச்சியாக சென்னை மெரினாவில் திரண்ட அந்தக் கூட்டத்த... மேலும் பார்க்க

BB Tamil 9: "இவங்க என்ன கேம் விளையாடுறாங்கன்னு கூட்டிட்டு வந்தீங்க"- ஆதிரையுடன் மோதும் கம்ருதீன்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 63 நாள்களைக் கடந்திருக்கிறது. நேற்று(டிச.7) பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியிருக்கிறார்.BB Tamil 9இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரொமோவில் கம்ருதீனுக்கு... மேலும் பார்க்க

Top Cooku Dupe Cooku 2: டைட்டில் வென்ற வில்லன் நடிகர்; இரண்டாவது இடம் யாருக்கு தெரியுமா?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'டாப் குக்கு டூப் குக்கு' இரண்டாவது சீசனில் டைட்டில் வென்றிருக்கிறார் நடிகர் பெசன்ட் ரவி.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'குக்கு வித் கோமாளி'யைத் தயாரித்து வந்த மீடியா ம... மேலும் பார்க்க

BB Tamil 9: "துஷார் போனதை வச்சு எத்தனை நாள் என்னை காயப்படுத்துவீங்க"- அரோரா, கம்ருதீன் மோதல்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 63 நாள்களைக் கடந்திருக்கிறது. நேற்று(டிச.7) பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன... மேலும் பார்க்க

BB Tamil 9: "கோழைத்தனமா பதில் சொல்றாங்க" - நாமினேஷனில் ரம்யா, கம்ருதீன், சபரி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 63 நாள்களைக் கடந்திருக்கிறது. நேற்று(டிச.7) பிரஜின் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார். இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் முதல் புரொமோவில் இந்த வாரத்திற்க... மேலும் பார்க்க