செய்திகள் :

BB Tamil 9 Day 66: கம்முவின் பெஸ்டி பாரு ; ஆதிரை - FJ ரொமான்ஸ் 2.O - 66-வது நாளில் நிகழ்ந்தது என்ன ?

post image

கோர்ட் டாஸ்க்கில் அனைத்துமே காதல் சேட்டைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளாகவே வருகின்றன. விதிவிலக்காக சுபிக்ஷாவின் ‘பாட்டு இம்சை’ பற்றிய வழக்கு ஆறுதலான காமெடியாக இருந்தது.

தான் செய்த தவறுக்காக வீடு முழுக்க தண்டனை அனுபவிப்பது பற்றி பாருவிற்கு எந்தவொரு கவலையும் குற்றவுணர்ச்சியும் இல்லை என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.

Bigg Boss Tamil 9 - Day 66 Review
Bigg Boss Tamil 9 - Day 66 Review

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 66

தான் சார்ந்திருக்கும் சமூகம் பற்றிய பிரச்சினைகளை பாடல் வழியாக சுபிக்ஷா வெளிப்படுத்துவது நல்ல விஷயம்தான். பிக் பாஸ் போன்ற பெரிய பிளாட்பார்மை பயன்படுத்துவது சிறந்த வழிதான்.

ஆனால் பொழுது பூராவும் ‘கடலோடி நான்’ என்று அந்தப் பிரச்சாரத்தையே மேற்கொள்வது சலிப்பூட்டி விடும். “சுபிக்ஷான்ற பொண்ணு யாருன்னு மக்களுக்கு தெரியாமப் போயிடும். உன் சமூகத்தை முன்னாடி வெச்சி நீ பின்னாடி ஒளிஞ்சுக்கற” என்று விக்ரம் எச்சரித்ததும் இதைத்தான்.

இருந்தாலும் சுபிக்ஷா அடங்கவில்லை. காலையிலேயே ‘ஏல ஏல வாள.. வந்தேன் கடலை ஆள’ என்று பாடத்துவங்க ‘இரும்மா. உன்னை கடல்லயே தூக்கிப் போடறோம்’ என்று விக்ரமும் வினோத்தும் சுபிக்ஷாவை தூக்கி நீச்சல் குளத்தில் தள்ளுவது போல் ஜாலியாக கலாட்டா செய்தார்கள்.

பின்னர் இதே விஷயத்தையே வழக்காடு மன்றத்திற்கும் கொண்டு வந்தார்கள். அடிப்படையில் இது செல்லத்தகாத வழக்கு என்று பிக் பாஸே தடுத்திருக்க வேண்டும். ஆனால் பிற வழக்குகள் சண்டையும் சச்சரவுமாக செல்வதால் இது மட்டும் காமெடியாக இருக்கட்டும் என்று விட்டு வைத்திருக்கலாம்.

பாட்டுப் பாடி இம்சை செய்யும் ‘கடலோடி’ சுபிக்ஷா - ஜாலியான வழக்கு

சுபிக்ஷா பாட்டுப்பாடி இம்சை செய்கிறார் என்று வழக்கு தொடர்ந்திருந்த விக்ரம், காதில் கட்டு போட்டபடி வந்திருந்தார். விக்ரமின் வக்கீலான சபரி, சுபிக்ஷாவின் பாடலால் தனது கட்சிக்காரர் எப்படியெல்லாம் வேதனையை அனுபவித்தார் என்பதை நகைச்சுவையாக விவரித்தது சுவாரசியமான காட்சி.

நீதிபதியாக அமர்ந்திருந்த வினோத் டைமிங்காக அடித்த கமெண்ட்டுகள் சிரிப்பலையை உண்டாக்கின. “கலையை என்கரேஜ் செய்ய விரும்பறோம்.. ஆனா..” என்று விக்ரம் ஆரம்பிக்க “அது பண்ண முடியாது கலை வெளியே போயிட்டாரு” என்று ஜாலியாக குறுக்கிட்டார் வினோத்.

Bigg Boss Tamil 9 - Day 66 Review
Bigg Boss Tamil 9 - Day 66 Review

விக்ரமின் காதில் ரத்தமே வந்து விட்டது என்பதற்கு சாட்சியாக பஞ்சை எவிடென்ஸ்-ஆக தர, ‘இதை போஸ்ட்மார்ட்டத்திற்கு அனுப்புங்க’ என்று வினோத் சொன்னது காமெடி. சுபிக்ஷாவின் வக்கீலாக வந்த பாரு ‘ஏல ஏல வாள.. வந்தேன் கடல ஆள’ என்று பாடிக் காண்பிக்க “கட்டிப் போடுங்கம்மா அவங்க கால’ என்று டைமிங்கில் அடித்தார் வினோத்.

சுபிக்ஷா பாடுவதைக் கேட்டு கம்ருதீன் வலிப்பு வருவது போல் பாவனை செய்ய “அவரை ஆண்கள் பக்கம் உக்கார வைங்க. சரியாயிடும்” என்று பங்கம் செய்தார் வினோத். இறுதியில் சுபிக்ஷா பக்கம்தான் தீர்ப்பு வந்தது. என்னதான் இந்த வழக்கை ஜாலியாக கொண்டு சென்றாலும் ‘ஒரு சமூகத்தின் பிரச்சினை’ என்று வரும் போது சீரியஸாகத்தான் முடித்தாக வேண்டும். சுபிக்ஷா போன்ற பெண்கள் அடித்தட்டு சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருப்பார்கள் என்று தீர்ப்பு கூறி நல்லபடியாக முடித்தார்கள்.

ஆதிரை, FJ ரொமான்ஸ் - VERSION 2.O

FJ -ஆதிரை ரொமன்ஸ் - பார்ட் 2 ஆரம்பித்து விட்டது. ‘என் இமேஜையே நாசம் பண்ணிட்டான்.. படு பாவிப்பய’ என்று கோர்ட்டில் ஆவேசப்பட்ட ஆதிரை, இப்போது மீண்டும் அவருடன் ரொமான்ஸை தொடர்கிறார். ‘நல்லா வாழைப்பழம் மாதிரி பேசுவான் மேடம். இவனை நம்பாதீங்க’ என்று கிண்டலடித்தாலும் அது செல்லமான கோபம் என்பதாகத் தெரிகிறது. ஆதிரையின் முன்பு அரோவிடம் ரொமான்ஸ் செய்வது போல விளையாடிக் கொண்டிருந்தார் FJ. “எனக்கு ஒரு காதல் மட்டும்தான் வேண்டும். ரெண்டு மூணு காதல் எல்லாம் வேண்டாம்” என்று காமெடி செய்தார் அரோரா.

Bigg Boss Tamil 9 - Day 66 Review
Bigg Boss Tamil 9 - Day 66 Review

பொழுது பூராவும் சான்ட்ராவிற்கு மூக்கைச் சிந்துவதே டைம்பாஸாக இருக்கிறது. பிரஜன் போய் விட்டார் என்று ஒப்பாரி வைத்த சான்ட்ரா, இப்போது திவ்யாவை தனது கற்பனை எதிரியாக வரித்துக் கொண்டு பிலாக்கணம் பாடிக் கொண்டே இருக்கிறார். இந்தச் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி பின்பாட்டு பாடி ஏற்றி விடுகிறார் பாரு. (அவருக்கு இதுதான் வேலை!).

“பிரஜினும் நானும் அவளுக்காக நின்னோம். என்னை விடவும் பிரஜின் அவ கிட்ட க்ளோஸா இருந்தாரு. சிஸ்டர்.. சிஸ்டர்ன்னு எல்லா விஷயமும் பண்ணாரு. இப்ப என்னடான்னா.. அண்ணன் எப்படா சாவான்.. திண்ணை எப்ப காலியாவும்ன்ற மாதிரி பெட்டில துணி வைக்க அவசரப்படறா.. அவளுக்காக நின்ன நாங்க என்ன முட்டாள்களா?” என்று கண்ணீருடன் சான்ட்ரா ஒப்பாரி வைக்க “அப்படிச் சொல்லுக்கா” என்று ஒத்து ஊதினார் பாரு. இதற்குப் பதிலாக திவ்யாவிடமே சான்ட்ரா நேரடியாக பேசலாம்.

கம்முவும் பாருவும் பெஸ்டிக்கு மேலேயாம்..

யார் யாருக்கு அண்ணன்.. தங்கச்சி.. அல்லது பெஸ்டி என்கிற விளையாட்டு ஓடிக் கொண்டிருந்தது. கம்முவிற்கு எல்லோரும் சிஸ்டர்களாம். வியானா, அரோ, ரம்யாவெல்லாம் நண்பர்களாம். பாரு பெஸ்டியாம். (வௌங்கிடும்!). தன்னுடைய டர்ன் வரும் போது அமித், வினோத் போன்றவர்களை அண்ணா என்ற பாரு, கம்முவைப் பற்றி சொல்லும் பொது வெட்கம் தாங்காமல் இளித்த காட்சி கொடுமையாக இருந்தது. கம்மு பெஸ்டியாம். கூடவே சபரியும் லிஸ்டில் இருக்கிறார் என்பதை ஜாலியாக சொல்லி சிரித்தார் பாரு. (கம்முவிற்கு செக் பாயிண்ட் போல. எங்க கிட்டயும் சீப்பு இருக்கு. நாங்களும் சீவுவோம்!)

அடுத்த வழக்கு அரோரா போடுகிறார் என்றதுமே பாருவிற்கு பதட்டமும் ஆவலும் துவங்கி விட்டது. தன் மீதுதான் என்று நிச்சயமாகத் தெரியும். (குற்றமுள்ள நெஞ்சு!). ‘நாம சேட்டைக்கார குழந்தைகளா இருந்திருக்கோம்’ என்று கம்முவுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தார் பாரு. (இவன் இன்னும் திருந்தல மாமா மொமெண்ட்!)

Bigg Boss Tamil 9 - Day 66 Review
Bigg Boss Tamil 9 - Day 66 Review

“அரோ கம்மு கூட உன்னதமான பிரெண்ட்ஷிப்ல இருக்காங்களாம். ஆனா அதைப் பார்த்து நீங்க பொசசிவ் ஆகி காழ்ப்புணர்ச்சில சில விஷயங்களை அவங்களுக்கு எதிரா செய்யறீங்களாம். அரோ வெளியே போகணும்னு துடியா துடிக்கறீங்களாம். இதுக்காக மத்தவங்களையும் பிரெயின் வாஷ் பண்ணி அரோவை நாமினேட் பண்ணச் சொல்றீங்களாம்” என்று வழக்கின் சாராம்சத்தை விக்ரம் படித்துக் காட்ட ‘அய்யோ நம்ம மைண்ட்ல இருக்கறதையெல்லாம் அப்படியே சொல்லியிருக்காங்களே’? என்று பாரு வாயை விட்டு விட்டார். (இந்த வாக்குமூலத்தை கோர்ட் வாதத்தின் போது சாட்சியாக பயன்படுத்தினார் விக்ரம்).

பாரு மீது அரோ தொடர்ந்த வழக்கு - மழுப்ப முயன்ற பாரு

அரோவின் தரப்பில் வக்கீலாக விக்ரம் ஆஜர் ஆனார். ஆனால் பாருவின் தரப்பில் கம்மு வக்கீலாக வந்தது காமெடி. வழக்கில் சம்பந்தப்பட்டவரே எப்படி வக்கீலாக முடியும்? (‘நீ கம்முவை சாட்சியா சேர்த்திருக்கணும்’ என்று பிறகு சான்ட்ரா சொன்னது சரியான கோணம்!).

சாட்சியாக வந்த கம்மு “ரெண்டு பேர் கிட்டயும் அன்பு இருந்தது. ஆனா ஒரு பக்கம் ஓவர்ப்ளோ ஆயிடுச்சு. அது பாரு பக்கம்” என்று டாங்க்கில் தண்ணீர் நிரம்பி வழிந்தது போலவே சொன்னார்.

Bigg Boss Tamil 9 - Day 66 Review
Bigg Boss Tamil 9 - Day 66 Review

சாட்சியாக வந்த அரோ, “பொசசிவ் இருந்தா கூடவே வெறுப்பு வரும். பாரு என்னை வெறுக்கறாங்க. இதை ஹோஸ்ட் முன்னாடியே ஒத்துக்கிட்டாங்க. ‘நீ வெளில போகணும்’ன்னு என் கிட்டயே சொல்லியிருக்காங்க’ என்று பாரு மீது பகிரங்கமாக குற்றம் சாட்ட இதை வன்மையாக மறுத்தார் பாரு.

“இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். இது வன்மத்தின் வெளிப்பாடு. கம்மு கூட எனக்கு இருக்கிறது பிரெண்ட்ஷிப்பிற்கும் மேல. அரோ பிரெண்டா இருந்தா என்ன பண்ணனும்.. அவன் எதிர்க்கயே கட்டிப்பிடிச்சு என்னை வெறுப்பேத்தினாங்க. டிரையாங்கிள் லவ்வை ஸ்டாப் பண்ணலாம்ன்னு முதல்ல சொன்னதே நான்தான். இது பத்தி அரோ கிட்ட பேசினேன்” என்று டிபென்சிவ் மோடில் பேசினார் பாரு.

“அரோவும் கம்முவும் ஆரம்பத்துல இருந்தே பிரெண்ட்ஸ். ஆனா நீங்க அப்புறமாத்தான் வந்தீங்க. எப்ப இந்த நட்பு அதுக்கும் மேல மாறுச்சு.. அவர் வெயிட்லிஃப்ட்டிங் பண்ணத ‘ஒரு மாதிரி’ பார்த்த போதா?” என்று சர்காஸமாக விக்ரம் கேட்டு விட “அது என்ன ஒரு மாதிரி.. என்னை என்ன மாதிரி இவர் பிரேம் பண்ண விரும்பறாரு.. ஒரு பெண் மீது அவதூறு செய்யறாங்க” என்றெல்லாம் விக்டிம் கார்டை தூக்கினார் பாரு.

Bigg Boss Tamil 9 - Day 66 Review
Bigg Boss Tamil 9 - Day 66 Review

விக்ரமின் கேள்விக்கு விக்டிம் கார்டை கையில் எடுத்த பாரு

அரோ கட்டிப் பிடித்தால் தனக்கு பொசசிவ் ஆகி கோபம் வருகிறது என்று சொல்கிற பாரு, அதே விஷயத்தைத்தான் தானும் செய்கிறார். அரோவை வெறுப்பேற்ற முன்பே செய்தார். சமீபத்தில் விக்ரமை வெறுப்பேற்றவும் செய்தார்.

“கம்முவை ஆசையா பார்த்தீங்களான்னுதான் கேட்டேன்?” என்று விக்ரம் கேட்டதற்கு விக்டிம் கார்டை தூக்குகிற இதே பாரு, கம்முவுடன் தொடர்ந்து செய்து வரும் ‘எல்லையில்லா ரொமான்ஸ் காட்சிகளை’ எப்படி நியாயப்படுத்துவார்?

தனக்கு எதிராக வழக்கு நகரும் போது பதட்டமான எக்ஸ்பிரஷன்களை தந்து கொண்டிருந்த பாரு, கம்முவிற்கு சில சைகைகளை காட்டி சொல்ல முயன்றார். ‘பாருவிற்கு நேரம் கொடுத்தால் நிறைய கன்டென்ட் கிடைக்கும்’ என்று பிக் பாஸ் யோசித்தாரோ, என்னமோ பத்து நிமிட இடைவேளை கொடுத்தார்.

“கேஸ் நல்லாத்தான் போயிட்டிருக்கு. நீ சிரிச்சு கெடுத்துடாத. சீரியஸா பேசு. . வியானா கூட துஷார் பேசும் போது அரோவிற்கு பொசசிவ் வந்தது. இந்தப் பாயிண்ட்டை சொல்லு. என்ன பேபி.. புரியுதா?” என்று கம்முவிற்கு கட்டிப்பிடித்து அட்வைஸ் செய்தார் பாரு. ஆனால் காதை நோண்டிக் கொண்டே சீரியஸ்னஸ் இல்லாமல் தலையாட்டினார் கம்மு.

குறுக்கு விசாரணையின் போது “கம்மு என் கிட்ட லிமிட்ல எல்லாம் பழக மாட்டார். பாரு பத்தி தப்பா பேசுவார். பாரு இல்லாதப்ப விளையாடுவார். பாரு பார்க்கறப்ப ஒதுங்கிடுவார்” என்று கம்முவைப் பற்றி சரியாக போட்டுக் கொடுத்தார் அரோ.

Bigg Boss Tamil 9 - Day 66 Review
Bigg Boss Tamil 9 - Day 66 Review

‘எனக்கும் கம்முவிற்கும் இடையில் எந்தக் காதலும் இல்லை. பிளாட்டோனிக் உறவு மட்டுமே’ என்று அரோ தெள்ளத் தெளிவாக கூறிய பிறகும் அதை திரிக்க முயன்றார் பாரு. Platonic என்றால் Non-romantic relationship என்பதை அறிந்திருக்கும் பாரு, அதை வெவ்வேறு வார்த்தைகளில் மழுப்ப முயன்றார். (காமமோ, காதலோ அற்ற, நட்பிற்கும் மேலான உறவிற்கு Platonic என்று பொருள்).

சாட்சியாக வந்த ரம்யா, பாருவை சரியாக அம்பலப்படுத்தினார். “கம்மு கூட அரோ பழகறது எனக்குப் பிடிக்கலை. பொசசிவ் ஆகுது. அவ வெளியே போகணும். அதனால நாமினேட் பண்ணியிருக்கேன்” என்று தன்னிடம் பாரு சொன்னதை சாட்சியாக சொன்னார் ரம்யா.

அரோரா பக்கம் வந்த தீர்ப்பு - நியாயம் வென்றது

தீர்ப்பு நேரம். அரோரா பக்கம்தான் நியாயம் இருக்கிறது என்பதை சரியான தீர்ப்பாக சொன்னார் கனி. ஆனால் இன்னொரு நீதிபதியான சான்ட்ராவோ, இப்போது பாருவுடன் நட்புக்காலத்தில் இருப்பதால் பாரு பக்கம் தீர்ப்பு சொன்னது தவறானது.

முரண்பட்ட தீர்ப்புகள் வந்ததால் மக்கள் மன்றத்தை நாடினார் பிக் பாஸ். இறுதியில் அரோரா பக்கம் நியாயம் வென்றது. அரோவிற்கு எதிராக பாரு என்னவெல்லாம் செய்தார் என்பதை வீட்டார் நன்கு அறிவார்கள். எனவே இந்த வழக்கில் அரோரா வென்றதும் பாரு தோற்றதும் சரியானது.

Bigg Boss Tamil 9 - Day 66 Review
Bigg Boss Tamil 9 - Day 66 Review

வெளியே வந்த அரோராவிடம் “நான் உன் பக்கமும் பாயிண்ட்ஸ் எடுத்துக் கொடுத்தேன் பாத்தியா?’ என்று இரண்டு பக்கமும் கோல் போட முயன்றார் கம்மு. “நீ ஒரு நலல லாயரா இருந்தே’ என்று சர்காஸமாக பாராட்டினார் அரோரா.

சான்ட்ராவும் ரம்யாவும் கம்முவின் டபுள் ஸ்டாண்டர்ட் பற்றி பாருவிடம் போட்டுக் கொடுத்தார்கள். “கம்ருதீன் உன்னைப் பத்தி நிறைய தப்பா பேசியிருக்கான்’ என்று சான்ட்ரா சொல்ல, பாருவின் முகம் இறுகியது. ஆனால் டிராமா என்று வந்து விட்டால் முழுமையாகத்தானே ஆடியாக வேண்டும்? அடுத்த கணமே கம்முவுடன் ரொமான்ஸில் ஈடுபட பாரு தயங்கவில்லை.

வேலை செய்யாமல் டபாய்க்கும் பாரு - கம்மு

கிச்சன் மேடை சுத்தப்படுத்தாமல் இருந்ததை பாருவிடம் சுட்டிக் காட்டினார் அமித். ‘தண்டனையை ஏற்றுக் கொள்கிறோம்’ என்று முன்னர் ஒப்புக் கொண்ட பாருவும் கம்முவும் இப்போதோ பல்டி அடித்து ‘எல்லாத்தையும் செய்ய முடியாது’ என்று முரண்டு பிடிக்க அமித்திற்கு கோபம் வந்தது. “அப்படின்னா உங்களுக்கு குற்றவுணர்ச்சி கிடையாதுன்னு அர்த்தம்’ என்று விக்ரம் சொல்ல கம்முவிற்கு கோபம் வந்தது. “எங்களைக் கஷ்டப்படுத்தி குளிர்காயலாம்ன்னு நெனக்கறீ்ங்களா?” என்று சீன் போட ஆரம்பித்தார்.

Bigg Boss Tamil 9 - Day 66 Review
Bigg Boss Tamil 9 - Day 66 Review

‘கம்ருதீனாவது சொன்னா வேலை செய்வான். ஆனா இந்த பாரு கிட்ட வேலை வாங்கறதுக்குள்ள.. நாமளே அதைச் செஞ்சிடலாம்’ என்று தலையில் அடித்துக் கொண்டார் அமித்.

தன்னுடைய உண்மையான நண்பன் அரோராதான் என்று கம்ருதீனின் மனச்சாட்சிக்கு நன்றாக தெரியும். என்றாலும் பாருவின் பக்கம் சாய்ந்ததற்கு உடல் கவர்ச்சிதான் காரணமாக இருக்க முடியும். இந்த சீசன் 9 ஷோ முடிந்தவுடன், கம்மு - பாரு ரொமான்ஸ் ஷோவும் தன்னிச்சையாக முடிந்து விடும் என்று தோன்றுகிறது.

எடப்பாடி, கனிமொழி முதல் அன்புமணி வரை; ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்துகள் பகிரும் பிரபலங்கள்!

தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். திரையுலகில் 50 ஆண்டுகளாக தன் ரசிகர்களை அதே உற்சாகத்துடன் வைத்திருக்கும் ரஜினி, தன் வயதையும் கடந்து தொடர்ந்து நடித்தும் வர... மேலும் பார்க்க

HBD Rajini: `ரஜினி பாதுகாக்கும் அந்த கடிதம் டு '16 வயதினிலே' சம்பளம்.!’ - 75 சுவாரஸ்ய தகவல்கள்!

இந்திய திரையுலகில் 50-வது ஆண்டை கொண்டாடுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பவர்ஃபுல்லான கண்கள்.. அறிமுகமான 'அபூர்வ ராகங்கள்' படத்திலிருந்து தனித்துவமான உடல்மொழி, விதவிதமான ஸ்டைல்கள், கவர்ந்திழுக்கும் ... மேலும் பார்க்க

Simran: ``இந்தக் கேள்வி கேட்டதற்கே நன்றி... ரஜினி சாருக்கு வாழ்த்துகள்" - நடிகை சிம்ரன்

சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் நடைபெறும். அதன் அடிப்படையில், 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 11 முதல் 18-ம் தேதி வரை சென்னை பிவிஆர் சினிமாஸிஸ் நடைபெற உள்ளது. ... மேலும் பார்க்க

Rajini 75: ``பல தலைமுறைகளைக் கவர்ந்தவர் ரஜினிகாந்த்" - பிரதமர் மோடியின் பிறந்த நாள் வாழ்த்து

தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். திரையுலகில் 50 ஆண்டுகளாக தன் ரசிகர்களை அதே உற்சாகத்துடன் வைத்திருக்கும் ரஜினி, தன் வயதையும் கடந்து தொடர்ந்து நடித்தும் வர... மேலும் பார்க்க