போதை: பள்ளிப் பேருந்தின்மீது கல்வீச்சு;`ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில்'- எடப்பாட...
Bigg Boss Tamil 9: முதல் டபுள் எவிக்ஷன்! வெளியேறிய இருவர் யார்?
விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ல் முதல் டபுள் எவிக்ஷன் நிகழ்ந்திருக்கிறது.
வி.ஜே. பார்வதி, வாட்டர்மெலன் திவாகர், துஷார், பிரவீன், பிரவீன் காந்தி, உள்ளிட்ட இருபது பேருடன் தொடங்கிய நிகழ்ச்சியில் இதுவரை பிரவீன் காந்தி, அப்சரா, நந்தினி, கலையரசன், ஆதிரை ஆகியோர் வெளியேறினர்.
பிக்பாஸ் வீடு செட் ஆகாததால் முதல் வாரத்திலேயே நந்தினி வெளியேறினார்.
பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன் ஆகியோர் அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் வெளியேறினர்.

முன்னதாக இந்த சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால் நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்தது.
அதைச் சரி செய்யும் விதமாக டிவி பக்கமிருந்து பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அமித் பார்கவ் ஆகிய நான்கு பேரை வைல்டு கார்டு எண்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் அனுப்பி வைத்தனர்.
இவர்கள் நிகழ்ச்சிக்குள் சென்றது முதல் பிக்பாஸ் வீடு கலவரமும் களேபரமுமாகக் காணப்படுகிறது.
இந்த நிலையில் வார இறுதியில் விஜய் சேதுபதி கலந்து கொள்ளும் எவிக்ஷனுக்கான ஷூட்டிங் இன்று காலை பிக்பாஸ் செட்டில் தொடங்கியது.

வழக்கமான டிஸ்கஷனுக்குப் பிறகு எவிக்ஷனுக்கான நேரம் வந்தது.
கெமி, ரம்யா, சபரி, பிரவீன், துஷார், எஃப்.ஜே ஆகியோர் எவிக்ஷனுக்கான நாமினேஷன் பட்டியலிலிருந்த நிலையில் ரசிகர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் இரண்டு பேர் வெளியேறி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வந்திருக்கிறது. இந்த சீசனின் முதல் டபுள் எவிக்ஷன் இது.
அதாவது துஷார் மற்றும் பிரவீன் இருவரும்தான் இந்த வாரம் வெளியேறுகின்றனர்.

துஷார் முதல் வாரம் கேப்டனாக வந்த நிலையில் பாதியிலேயே அவரது கேப்டன்ஷிப்பை பிக்பாஸ் பறித்தது நினைவிருக்கலாம்.
பிரவீன் கொஞ்சம் சிறப்பாக ஆடுவது போல் தெரிந்தது. கண்டெண்ட் தருவார் என எதிர்பார்த்த நிலையில் அவரும் வெளியேறி இருக்கிறார்.
பிரவீன், துஷார் வெளியேறிய எபிசோடு நாளை ஒளிபரப்பாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இவர்களில் ஒருவர் வெளியேறியது இன்றே ஒளிபரப்பானாலும் ஆகலாம்.



















