செய்திகள் :

Gatta Kusthi 2: "அந்த சீனுக்கு மட்டும் 1.2 கோடி செலவு பண்ணியிருக்கோம்!" - நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி

post image

கடந்த 2022-ஆம் ஆண்டு, விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியான 'கட்டா குஸ்தி' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டாம் பாகத்தையும் முடித்து, இப்போது ரிலீஸுக்கும் தயார் செய்துவிட்டனர். ஜூலை 3-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Gatta Kusthi
Gatta Kusthi

இப்படத்திற்காக நம் சினிமா விகடன் சேனலுக்கு விஷ்ணு விஷாலும், ஐஸ்வர்யா லக்ஷ்மியும் பேட்டியளித்திருக்கிறார்கள்.

அந்தப் பேட்டியில், 'கட்டா குஸ்தி' படத்தின் இண்டர்வெல் காட்சிக்கு 1.2 கோடி செலவு செய்ததாக ஐஸ்வர்யா லக்ஷ்மி குறிப்பிட்டிருக்கிறார்.

நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, "'கட்டா குஸ்தி'யின் முதல் பாகத்தின் இண்டர்வெல் பகுதியில எனக்கு மாஸ் காட்சியை வச்சிருப்பாங்க. அந்தக் காட்சியைப் பற்றி சொல்லும்போதுதான் எனக்கு இன்னொரு விஷயமும் நினைவுக்கு வருது.

விஷ்ணு விஷால் சார் நடிச்ச, தயாரிச்ச படங்கள்ல, அதிகம் செலவழித்து எடுத்த சீன் அந்த இண்டர்வெல் காட்சிதான். கிட்டத்தட்ட அந்தக் காட்சிக்கு மட்டும் 1.2 கோடி செலவு பண்ணினோம். அது ஹீரோயினிக்காக எடுக்கப்பட்ட சீன்.

Gatta Kusthi 2
Gatta Kusthi 2

அந்த சீனை நானும் சின்னதாகத்தான் நினைச்சுட்டு இருந்தேன். ஆனால், இயக்குநர் செல்லா அய்யாவு சாரும், விஷ்ணு விஷால் சாரும் அந்த சீனை ரொம்ப பெருசா மாத்திட்டாங்க.

திரையரங்குகளில் அந்த சீனுக்கு பயங்கர க்ளாப்ஸ் கிடைச்சது. அது ஒட்டுமொத்த குழுவினுடைய முயற்சி. நான் வெறும் கதையை மட்டும் கேட்டேன். எனக்குப் பிடிச்சிருந்தது நடிச்சேன். இவங்களாலதான் காட்சிகள் இன்னும் பெரியதாக மாறுச்சு." எனப் பகிர்ந்துக் கொண்டார்.

'அயோத்தி' பட இயக்குநரின் அடுத்த படம்; மதுரையில் தொடங்கிய ஷூட்டிங்; ஹீரோ யார்? பரபர அப்டேட்!

'அயோத்தி' பட இயக்குநரின் அடுத்த அதிரடி ரெடியாகிவிட்டது. கடந்த 2023ம் ஆண்டில் சசிகுமாரின் நடிப்பில் வெளியான படம் 'அயோத்தி'. இந்த மனிதத்தையும், சகோதரத்துவத்தையும் படம் முன்னிறுத்தியது. பல்வேறு விருதுகளை... மேலும் பார்க்க

"விஜய் ஆண்டனி சார் எப்படி ஒத்துக்கிட்டாருனு தெரியல" - 'நூறு சாமி' படம் குறித்து கண்கலங்கும் ஸ்வாசிகா

இயக்குநர் சசி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'நூறு சாமி' படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றன. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷா எனப் பலரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீரா... மேலும் பார்க்க

"அந்த ஃப்ரேமை பார்த்துட்டு விஜய் சார் சொன்ன விஷயம்!" - பகிரும் வெங்கட் பிரபு

முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டுத் தமிழகமெங்கும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் தயாரிப்பாளர் டி. சிவாவும் ஒரு நிகழ்வை நடத்தியிருக்கிறார். இந்த நிகழ்வில் இயக்குந... மேலும் பார்க்க

Con City: "'நான் சொன்ன கட்சிக்கு ஓட்டு போடல; அதான் கரண்ட் ப்யூஸை எடுத்தேன்'னு..." - விடிவி கணேஷ்

அர்ஜுன் தாஸ் நடித்திருக்கும் 'கான் சிட்டி' திரைப்படம் இம்மாதம் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, விடிவி கணேஷ் எனப் பலரும் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இய... மேலும் பார்க்க

'மணிரத்னம், கமல்ஹாசன் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாக சித்தரித்தது தான்.!'- லெனின் பாரதி பேசியதென்ன?

மீரா கதிரவனின் இயக்கத்தில், கஸ்தூரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'ஹபீபி'. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இஸ்லாமியர்களின் வாழ்வியலை மையமாக... மேலும் பார்க்க