``நிதிஷ் கட்சி 25 இடங்களுக்கு மேல் வென்றுவிட்டால் நான் அரசியலை விட்டே போகிறேன்" ...
Globetrotter: ''இம்முறை காவல்துறை..." - ரசிகர்களுக்கு இயக்குநர் ராஜமெளலி அட்வைஸ்
ராஜமௌலியின் 'க்ளோப்டிராட்டர்' படத்தின் நிகழ்வு வருகிற நவம்பர் 15-ம் தேதி ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.
மகேஷ் பாபு, ப்ரித்விராஜ், ப்ரியங்கா சோப்ரா உட்பட பலரும் இந்த பிரமாண்ட படைப்பில் நடித்து வருகிறார்கள்.

மாலை 7 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த நிகழ்வு குறித்தும், அந்த நிகழ்வுக்கு ரசிகர்கள் பாதுகாப்பாக வருவதற்கான வழிமுறைகள் குறித்தும் இயக்குநர் ராஜமௌலி காணொளியில் பேசி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தக் காணொளியில் ராஜமௌலி, "நீங்கள் அனைவரும் நமது 'க்ளோப் டிராட்டர்' பட நிகழ்வுக்காக ஆவலுடன் காத்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நானும் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.
நமது நிகழ்ச்சியை வெற்றிகரமாக்க, உங்கள் ஆதரவு மிகவும் முக்கியம். காவல் துறை நமது நிகழ்ச்சியின் பிரபலத்தையும் நமது பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு மிகக் கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது.
அவை அனைத்தையும் நாம் பின்பற்ற வேண்டும். நிகழ்ச்சிக்கு எப்படி வர வேண்டும், எங்கு வர வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் உள்ளன.
Very excited to see you all at the #Globetrotter event on November 15.
— rajamouli ss (@ssrajamouli) November 13, 2025
The RFC main gate will be closed on the event day. Follow the instructions on your entry pass. Cooperate with police and security to ensure a hassle-free, safe, and happy experience for everyone. pic.twitter.com/bG3Hw5XmD8
அதை டவுன்லோட் செய்தால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிகழ்ச்சிக்குச் செல்லும் வழியில் தெளிவான சைன் போர்டுகள் உள்ளன. அதனை பின்பற்றி நிகழ்வுக்கு வாருங்கள்.
சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில்கொண்டு, இம்முறை காவல்துறை மிகக் கடுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி உள்ளது. ஆணையர் தனிப்பட்ட முறையில் என்னிடம் 'ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலோ, கட்டுப்பாடு இழந்தாலோ நிகழ்ச்சி ரத்து செய்யப்படும்' எனக் கூறியிருக்கிறார்.
இவை அனைத்தையும் அவர் நமது பாதுகாப்பிற்காகத்தான் செய்கிறார்கள். எனவே, அவருக்கு முழு ஆதரவு அளித்து, நமது நிகழ்ச்சியை சிறப்பாக்குவோம்." எனக் கூறியிருக்கிறார்.

















