செய்திகள் :

GV Prakash: "கோடிக்கணக்கில் பணம் தந்தாலும் மதுபான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்" - ஜி.வி. பிரகாஷ்

post image

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கும் 'கர' திரைப்படம் வருகிற ஏப்ரல் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதுமட்டுமல்ல, ஜி.வி. நடித்திருக்கும் திரைப்படம், இசையமைக்கும் படங்கள் என அடுத்தடுத்து அதிரடி லைன் அப்களும் அவர் கைவசம் இருக்கின்றன. அதில் நான் நடிக்க மாட்டேன்.

GV Prakash
GV Prakash

கடந்த ஏப்ரல் 24-ம் தேதி, சென்னை வண்டர்லாவில் புதிதாக, ஸ்கை வீல் எனப்படும் ஒரு ராட்டினத்தைத் தொடங்கி வைத்தார் ஜி.வி. பிரகாஷ்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டாலும், குறிப்பிட்ட சில விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்" எனப் பேசியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர், "மதுபானங்கள், சூதாட்டம் அல்லது குளிர்பானங்கள் போன்ற மக்களின் உடல்நலத்திற்கும், வாழ்க்கைக்கும் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு பொருளையும் நான் விளம்பரப்படுத்த விரும்பவில்லை.

இதற்கு முன் நிறைய குளிர்பானங்களுக்கு விளம்பரம் செய்யக் கூப்பிட்டிருக்கிறார்கள்.

ஜி.வி பிரகாஷ்
ஜி.வி பிரகாஷ்

ஆனால், அவர்கள் எவ்வளவு பெரிய தொகையைச் சம்பளமாக வழங்க முன்வந்தாலும், அதில் நான் நடிக்க மாட்டேன். இதுபோல நிறைய முறை நான் நிராகரித்திருக்கிறேன்.

இந்த பொழுதுபோக்கு பூங்கா, குடும்பத்திற்கானது என்பதனால் இங்கு வந்திருக்கிறேன். பொறியாளர்களும் உடன் இருக்கிறார்கள் என்பதனால்தான் இங்கு வந்திருக்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

Youth: "உன்னால் முடியும், தொடர்ந்து முயற்சி செய்" - ரிஷப் ஷெட்டியைச் சந்தித்த கென் கருணாஸ்

கென் கருணாஸ் இயக்கி, நடித்திருந்த 'யூத்' திரைப்படம் மக்களிடையே வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், சின்னத் தமிழா என இளம் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தனர்... மேலும் பார்க்க

நடிகர்கள் சங்கம் தொடர்ந்து இதே போக்கை கடைபிடிக்குமானால்.. - எச்சரிக்கும் தயாரிப்பாளர் சங்கம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சங்கத் தலைவர் தமிழ்க்குமரன் மற்றும் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, எஸ்.ஏ.சந்திரசேகர... மேலும் பார்க்க

Hansika Motwani: "அவற்றுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை" - ஹன்சிகா ஓபன் டாக்

நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் தொழிலதிபர் சோஹைல் கதுரியா கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்துகொண்டனர். பிறகு, இந்தத் தம்பதி கடந்த மார்ச் மாதம் விவாகரத்து பெற்றனர். கருத்து வேறுபாடுகள் காரணமா... மேலும் பார்க்க

''அஜித், ஷாலினிக்கு தெரியாமல் எடுத்த ஒரு காட்சியை படத்தில் வைத்திருக்கிறேன்; கண்டுபிடிங்க" - சரண்

சரண் இயக்கத்தில் அஜித்குமார், ஷாலினி, ரகுவரன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’அமர்க்களம்’. நேற்று (ஏப்ரல் 24) அஜித்குமார், ஷாலினி திருமண நாளை முன்னிட்டு 4K தொழில... மேலும் பார்க்க

நடிகர் அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன்?- வெளிப்படையாக சொன்ன அமர்க்களம் இயக்குநர்

சரண் இயக்கத்தில் அஜித்குமார், ஷாலினி, ரகுவரன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’அமர்க்களம்’. நேற்று (ஏப்ரல் 24) அஜித்குமார், ஷாலினி திருமண நாளை முன்னிட்டு 4K தொழில... மேலும் பார்க்க