DMK : அடுத்தடுத்த அறிவிப்புகள், திட்டங்கள்! `தோல்வி பயமா... தேர்தல் நேர எதார்த்த...
Parasakthi Audio Launch: "சுதாகிட்ட இருந்து ஒரு நடிகரும் தப்பிக்க முடியாது" - மணிரத்னம்
சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான 'பராசக்தி' திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது.
சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார்.
ஶ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது.
படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் மணி ரத்னம், "சுதா என்கிட்ட 'ஆயுத எழுத்து', 'யுவா' என ரெண்டு படங்களிலும் வேலை செஞ்சாங்க. அந்தப் படங்கள்ல அவங்க கண்டினியூட்டி இன்சார்ஜ்.
எப்போதும் கையில ஒரு கேமரா இருக்கும். நிறைய ஆர்ட்டிஸ்ட், நிறைய ஹீரோக்கள், நிறைய ஹீரோயின்கள்கூட வேலை பார்த்தாங்க.
ஆனால் ஒரு ஆர்ட்டிஸ்ட் கூட சுதாகிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது. ஷூட்டிங் முடிஞ்சு வெளிய போனால்கூட சுதாவைத் தாண்டித்தான் போக முடியும்.

கண்டினியூட்டி தவறுகளைப் பார்த்துவிட்டுத்தான் விடுவாங்க. அப்போதே சுதாவைப் பார்த்து பயப்படாத ஆர்ட்டிஸ்ட்டே கிடையாது.
அப்போவே அப்படின்னா, இப்போ சொல்லவே வேண்டாம். சிவகார்த்திகேயன் ஸ்கிரிப்ட்ஸ்லாம் ரொம்ப சரியாகத் தேர்ந்தெடுக்கிறார். Wishing you a very very best!" என்றதும் சிவகார்த்திகேயன் எழுந்து நின்று நன்றி தெரிவித்தார்.



















