``அன்று அயோத்தி ராமர் கோவில், இன்று திருப்பரங்குன்றம்; ஸ்டாலின் அரசே'' - பாஜக அன...
Trump Gold Card: ரூ.9 கோடி இருக்கிறதா? நீங்களும் அமெரிக்காவில் குடியேறலாம்!- ட்ரம்ப் புதிய அறிவிப்பு
நேற்று முன்தினம் (டிசம்பர் 10) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 'கோல்டு கார்டு' விசா திட்டத்தை அமல்படுத்தியுள்ளார். இது முன்னரே அறிவித்த திட்டம் தான். ஆனால், நேற்று முன்தினம் முதல் அமலாகியுள்ளது.
'ட்ரம்ப் கோல்டு கார்டு' என்றால் என்ன?
ட்ரம்ப் கோல்டு கார்டு - இதை அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான சட்டரீதியான பாஸ் என்றே கூறலாம். இந்தக் கோல்டு கார்டு மூலம் தனிநபர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தக் கோல்டு கார்டு 1990-களில் இருந்த EB-5 விசா திட்டத்திற்கு மாற்றாகும்.

EB-5 விசா திட்டம் என்றால் என்ன?
EB-5 திட்டம் என்பது 1990-களில் அமெரிக்காவிற்கு முதலீடுகளை ஈர்க்க கொண்டு வரப்பட்ட திட்டம் ஆகும். இந்த முதலீடுகள் மூலம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க நினைத்தது அமெரிக்க அரசு. அதை செய்தும் காட்டியது.
இந்தத் திட்டத்தின் 2.o தற்போதைய 'ட்ரம்ப் கோல்டு கார்டு' திட்டம்.
இந்தக் கார்டிற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
அமெரிக்காவிற்குள் செல்ல தகுதியான மற்றும் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற தகுதியுள்ள தனிநபர்கள் இந்தக் கார்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
வெளிநாட்டை சேர்ந்த ஊழியர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வர நினைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தக் கார்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
ட்ரம்ப் கோல்டு கார்டிற்கு விண்ணப்பித்திருப்பவர்களின் இணையர்கள், அவர்களுடைய 21 வயது நிரம்பாத குழந்தைகளும் இந்தக் கார்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

விலை என்ன?
இந்தக் கார்டிற்கான பிராசஸிங் ஃபீஸாக 15,000 டாலர்களை முதலில் கட்ட வேண்டும். இதை ரீஃபண்ட் பெற முடியாது.
அடுத்ததாக தனிநபர்கள் ஒரு விண்ணப்பத்திற்கு 1 மில்லியன் டாலர்கள் கட்ட வேண்டும். இது இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட ரூ.9 கோடி.
கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒவ்வொரு ஊழியருக்கும் 2 மில்லியன் டாலர்கள் செலுத்த வேண்டும்.
மேலே குறிப்பிட்ட தனிநபர் அல்லது ஊழியர்களின் இணையர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும்.
இது போக, விசாவிற்கான செலவு மற்றும் மருத்துவ பரிசோதனைக்கான செலவுகள் தனியாக இருக்கும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
trumpcard.gov இணையதளத்திற்கு சென்று, தனிநபர், கார்ப்பரேட், பிளாட்டினம் வெயிட்லிஸ்ட் ஆப்ஷன்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.
உங்களது தகவல்களை பதிவிட வேண்டும்.
அடுத்தடுத்த அப்டேட்டுகளை தெரிந்துகொள்ள myUSCIS.gov கணக்கை உருவாக்கிவிட வேண்டும்.
இப்போது பிராசஸிங் ஃபீஸாக 15,000 டாலர்களை முதலில் கட்ட வேண்டும்.
அடுத்ததாக, அமெரிக்காவின் பாதுகாப்பு துறை உங்களைப் பற்றி ஆய்வு செய்யும்.
அது 'ஓகே' ஆனதும், விண்ணப்பித்திற்கேற்ப 1 மில்லியன் டாலர், 2 மில்லியன் டாலர்கள் கட்டினால், நீங்கள் செய்ய வேண்டிய பிராசஸ் முடிந்தது.

சிக்கலும்...
இந்தக் கோல்டு கார்டு பெற்ற பின் சிக்கல் வரவும் வாய்ப்புள்ளது. கோல்டு கார்டு பெற்றவர்கள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக செயல்பட்டாலோ, அங்கே குற்ற சம்பவங்களில் ஈடுபட்டாலோ, கோல்டு கார்டு திரும்ப பெறப்படும்.
ஒரு கண்டிஷன்
இந்தக் கார்டை பெறும் நபர் அவருக்கு வரும் எந்தவொரு வருமானமாக இருந்தாலும் (உலகளாவிய வருமானம் உட்பட), அதற்கு அமெரிக்க வருமான வரியையே பின்பற்ற வேண்டும்.









.jpg)









