செய்திகள் :

TVK: `அறிவு என்ற வார்த்தையைக் கேட்டாலே அவர்களுக்கு.!" - மறைமுகமாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

post image

தி.மு.க இளைஞா் அணி சாா்பில் ‘தி.மு.க 75- முப்பெரும் அறிவுத் திருவிழா’ நடத்தியது. 8-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆளுமை நிகழ்வரங்குக்கு வந்து உரையாற்றினர். இதற்கிடையில் தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், ``தங்களைக் கொள்கைவாதிகளாக அடிக்கடி காட்டிக்கொள்வதற்காக, எல்லோரையும் ஏமாற்றுவதற்காக, தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழினம்தான் தங்கள் உயிர் என்றும் மண், மொழி, மானம்தான் தங்கள் தலையாய கொள்கை என்று ஒரு சம்பிரதாயச் சங்கை முழங்கத் தொடங்கி உள்ளார், அக்கட்சியின் தலைவர்.

தவெக விஜய்
தவெக விஜய்

அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு, முழுக்க முழுக்க, தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே மறைமுகமாகத் திட்டும் திருவிழாவாக அதை மாற்றியதிலேயே அது அறிவுத் திருவிழாவாக இல்லாமல் அவதூறுத் திருவிழாவாகத்தானே மாறியது?

பெரியார், அண்ணா கொள்கைகளை மறந்துவிட்ட அவர்கள், மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளோடு களம் இறங்கி, யாருக்கும் எதற்கும் வளையாமல் வலம் வரும் தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து, கொள்கையற்றவர்கள் என்று கூறுவதற்கான காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட உளைச்சலும் குமைச்சலுமன்றி வேறென்ன?" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், அறிவுத் திருவிழாவின் நிறைவு விழாவான நேற்று தி.மு.க இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``நாம் அறிவுத் திருவிழா தொடங்கி 4 நாளுக்குப் பிறகுதான் அவர்களுக்கு இப்படி ஒரு திருவிழா நடக்கிறது என்பதே தெரிந்திருக்கிறது.

அவர்களிடமிருந்து 'இந்த திருவிழாவை எப்படி நடத்தலாம்... யாரைக்கேட்டு நடத்தினீர்கள்... எதுக்காக நடத்துனீர்கள்' எனக் கேள்வி வருகிறது. அறிவு இருப்பவன் அறிவுத் திருவிழா நடத்துவான். அதுவும் அறிவுத் திருவிழாவில் அவர்களை விமர்சித்துப் பேசிவிட்டோம் எனக் கோபம்வேறு வருகிறதாம்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

எப்படி போலீசை பார்த்தால் திருடனுக்கு பயம் வருமோ, அப்படி அறிவு என்ற வார்த்தையைக் கேட்டாலே அவர்களுக்கு அலர்ஜியாகிவிடுகிறது. சுகாதார மேம்பாட்டைப் பற்றி பேசும்போது கிருமிகளைப் பற்றி பேசாமல் இருக்க முடியுமா?

அதுபோலதான் அறிவுத் திருவிழாவில் கொள்கைகளைப் பற்றி பேசும்போது, கொள்கையற்றவர்களின் கும்பலால் வரும் ஆபத்தையும் பேசியிருக்கிறார்கள். தி.மு.க என்பதே ஒரு அறிவு இயக்கம். கழகத்தில் பயணிக்கும் ஒவ்வொரு நாளுமே அறிவுத் திருநாள்.

சலூன், டீக்கடை, சைக்கிள் கடை என சாமானிய மக்களையும் அரசியல் பேச வைத்த இயக்கம் இது. இந்தக் கழகத்தின் முன்னோடிகள் தொடங்கி இப்போது இருக்கும் அமைச்சர்கள் வரை பலரும் இன்றும் புத்தகங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

நம் இயக்கத்தின் அலுவலகப் பெயர் கூட அண்ணா அறிவாலயம். இப்படி அறிவுக்கு முக்கியத்துவம் தருவதால்தான் நாம் இந்தியாவுக்கு முன்னோடி மாநிலமாக இருக்கிறோம்" என உரையாற்றினார்.

மும்பை: மாநகராட்சி தேர்தல்; `சுயமாக முடிவெடுக்கலாம்!’ - காங்கிரஸை கைகழுவ தயாராகும் உத்தவ்?

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் ஜனவரி மாதம் மாநகராட்சி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி வார்டுகள் குலுக்கல் முறையில் எது பெண்களுக்கானது என்பத... மேலும் பார்க்க

Mexico: அதிபர் மீது அதிருப்தி; மெக்சிகோவிலும் வெடித்த Gen Z போராட்டம் - ஏன், என்ன நடந்தது?

இந்தோனேசியா, வங்கதேசம், மடகாஸ்கர் மற்றும் நேபாளத்தில் ஆளும் அரசாங்கத்தின் பல்வேறு நிர்வாகக் கோளாறுகளை எதிர்த்து மிகப் பெரிய 'ஜென் Z' போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்கள் அனைத்தும் அந்தந்த நாடுக... மேலும் பார்க்க

Pa.Ranjith:``கம்யூனிஸ்ட்டுகள் ஏன் அம்பேத்கரை வாசிக்கவில்லை?" - பா.ரஞ்சித் முன்வைக்கும் குற்றச்சாட்டு

நீலம் பண்பாட்டு மையம் சார்பில், சென்னை தேனாம்பேட்டையில் அறிஞர் ராஜ் கௌதமன் நினைவு விருது வழங்கும் விழா நடைபெற்றது. 2025-ம் ஆண்டுக்கான அறிஞர் ராஜ் கெளதமன் நினைவு விருது ஆய்வாளர், எழுத்தாளர் வ.கீதா அவர்... மேலும் பார்க்க

தாசில்தாரைக் கடித்த வெறிநாய்கள்; களத்தில் இறங்கிய கலெக்டர்; அலுவலர்களுக்கு நோட்டீஸ்

தாசில்தார் ஒருவரை வெறி நாய் கடித்த சம்பவத்தால் கலெக்டரே களத்தில் இறங்கி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவது சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.மேசியதாஸ்சிவகங்கையில் வசிக்கும் மாவட்ட தேர... மேலும் பார்க்க

கேரளா: `என்னுடைய மகன் மன அழுத்தத்தில் இருந்தான்' - SIR பணிச்சுமையால் BLO அதிகாரி தற்கொலை

பிகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை, நாட்டின் பிற மாநிலங்களிலும் விரிவுபடுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது.அதன்படி, அடுத்த ஆண... மேலும் பார்க்க