கேரளா: உள்ளாட்சித் தேர்தலில் சீட் தர பா.ஜ.க மறுப்பு; உயிரை மாய்த்த ஆர்.எஸ்.எஸ் ச...
TVK: ``காவல்துறையால் தடுத்து நிறுத்தப்படும் தவெக தொண்டர்கள்?'' - குற்றஞ்சாட்டும் மா.செக்கள்!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து தவெக சார்பில் சிவானந்தம் சாலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு செல்ல தவெக தொண்டர்களை அனுமதிக்க மறுப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.

SIR க்கு கண்டனம் தெரிவித்து தவெக தலைவர் விஜய் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
சென்னை சிவானந்தம் சாலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வரும் தொண்டர்களை காவல்துறை தடுத்து நிறுத்துவதாக மாவட்டச் செயலாளர்கள் புகார் கூறுகின்றனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த மாவட்டச் செயலாளர்கள் அப்புனு, தாமு, சரவணன், திலீப் ஆகியோர் பேசுகையில்,
'பாஜகவுக்கு ஆதரவாக திமுக செயல்படுகிறது. திமுக SIR யை எதிர்ப்பதாக சொல்கிறது.
நாங்களும் SIR யை எதிர்த்துதானே போராடுகிறோம். பிறகு ஏன் இவ்வளவு இடைஞ்சல்கள்?

நிகழ்ச்சியை நடத்துகிற மா.செக்களை உள்ளே விடவே அத்தனை கட்டுப்பாடுகளையும் இடைஞ்சல்களையும் கொடுக்கிறார்கள்.பீச் ரோட்டில் வாகனங்களை நிறுத்த விட்டு 3 கி.மீ சுற்றி நடக்கவிடுகிறார்கள்.
அப்படியே நடந்து வந்தாலும் சிவானந்தம் சாலைக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள். தவெக தொண்டர்களென தெரிந்தாலே தடுத்து நிறுத்துகிறார்கள்.
நேற்று இரவு வரை கமிஷனர் அலுவலகத்தில் பேசுகையில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருகிறோம் என உறுதியளித்தனர். இப்போது ஏன் இப்படி தடுக்கிறார்கள்?' என்றனர்.
மாவட்டச் செயலாளர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடவே, பின்னர் தொண்டர்கள் சிவானந்தம் சாலைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

















