``அன்று அயோத்தி ராமர் கோவில், இன்று திருப்பரங்குன்றம்; ஸ்டாலின் அரசே'' - பாஜக அன...
TVK : தேதி குறித்த செங்கோட்டையன்; ஆதவ்வின் 'பலே' சர்வே; கடுமையாக எச்சரித்த ஆனந்த்! - பின்னணி என்ன?
தவெகவின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்திருந்தது. கூட்டத்தில் ஆதவ் சில புள்ளி விவரங்களை போட்டு மா.செக்களுக்கு பூஸ்ட் கொடுக்க, இன்னொரு பக்கம் புஸ்ஸி ஆனந்த் மா.செக்களிடம் சில முக்கியமான விஷயங்களை ஹைலைட் செய்து ரெய்டு விட்டு எச்சரித்திருக்கிறார்.

சூப்பர் சீனியரான செங்கோட்டையனும் தன் பங்குக்கு சர்ப்ரைஸ் கூட்டி பேசியிருக்கிறார். நேற்றைய கூட்டம் குறித்து சில மா.செக்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.
கட்சியில் சேர்ந்து தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை வாங்கிய பிறகு முதல் கூட்டம் என்பதால் செங்கோட்டையன் ஏகத்துக்கும் பாசிட்டிவ்வாக பேசியிருக்கிறார். எம்.ஜி.ஆர் சந்தித்த முதல் தேர்தலின் போது சூழல் எப்படியிருந்தது, எம்.ஜி.ஆர் எப்படி தனக்கு சீட் கொடுத்தார், அதில் என்ன மாதிரி களப்பணிகள் ஆற்றி அவர் வென்றார் என ஒரு ஃப்ளாஸ்பேக்கே ஓட்டி காண்பித்திருக்கிறார்.

'எம்.ஜி.ஆருக்கு பிறகு விஜய்யிடம்தான் தன்னெழுச்சியான கூட்டத்தை காண்கிறேன். என்னுடைய அனுபவங்கள் எல்லாவற்றையும் விஜய்யின் வெற்றிக்காக பயன்படுத்துவேன். குறிப்பாக கொங்கு மண்டலத்தை பற்றிய கவலை உங்களுக்கு வேண்டும். அங்கே சிந்தாமல் சிதறாமல் வெற்றியை தேடித் தருவது என்னுடைய பொறுப்பு' என மா.செக்கள் புல்லரிக்கும்படி பேசியிருக்கிறார். பேச்சை முடிக்கையில், 'ஜனவரி 10 க்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றம் நடக்கப் போகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும்!' என பொடி வைத்து முடித்திருக்கிறார்.
அடுத்ததாக மேடையேறிய ஆதவ் அர்ஜூனா பெரிய திரையில் சர்வே முடிவை பவர்பாய்ண்டாக காண்பித்திருக்கிறார். 'ஒவ்வொரு வாரமும் நாம் சர்வே எடுத்துக் கொண்டிருக்கிறோம். நாளுக்கு நாள் நமக்கு ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. லேட்டஸ்டாக நாம் எடுத்த சர்வேப்படி நமக்கு 31% ஆதரவு இருக்கிறது.

திமுகவுக்கே 29% தான் வருகிறது. அதிமுக மூன்றாம் இடத்துக்கு செல்கிறது. 160 தொகுதிகளில் நமக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. களத்தில் இறங்கி வேலை பார்த்து அந்த வாக்குகளை பூத்துக்குள் கொண்டு வந்துவிடுவதில்தான் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்' எனக் கூறி பூத் கமிட்டி சார்ந்து நிர்வாகிகள் செய்யும் சில தவறுகளை குறிப்பிட்டு அறிவுரை வழங்கியிருக்கிறார். ஆதவ்வின் பவர் பாய்ண்ட் பல மா.செக்களுக்கு பூஸ்ட்டை கொடுத்திருக்கிறது. சிலர் அமைச்சர் கனவே காண ஆரம்பித்துவிட்டனர் என கிசுகிசுக்கின்றனர்.
ஆதவ்வின் பவர் பாய்ண்ட்டுக்கு பிறகு மேடையேறிய வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும், 'ட்ரெண்டெல்லாம் நமக்கு சாதகமா இருக்கு. அடுத்த மூணு மாசம் நீங்கெல்லாம் கொஞ்சம் புஷ் பண்ணி ஹார்டு ஒர்க் போட்டா மட்டும் போதும்' என்றிருக்கிறார். ஆனால், விவரமறிந்த கள யதார்த்தம் புரிந்த சில மா.செக்கள், 'பெரும்பாலான மாவட்டங்களுக்கு தலைவர் இன்னும் வரவே இல்லை. கட்சியின் செயல்பாடுகள் வேகமெடுக்கவே இல்லை. பல மாவட்டங்களில் கோஷ்டி பூசல் புகைந்து கொண்டிருக்கிறது. அதை தீர்த்து வைக்கவும் வழி இல்லை. அப்படியிருக்க மேடைக்கு மேடை லாஜிக்கே இல்லாமல் இரண்டு இரண்டு சதவீதமாக அதிகரித்து காட்டி நாமே பெருமிதப்பட்டுக் கொள்வதில் என்ன இருக்கிறது?' என தங்களுக்குள்ளேயே புலம்பியிருக்கின்றனர்.

அடுத்ததாக பேசிய புஸ்ஸி ஆனந்த்தான் மா.செக்களை காய்ச்சி எடுத்திருக்கிறார். 'போஸ்டிங் போடுறதுல ஏன் அவ்வளவு குழப்பம் பண்ணீங்க. தினசரி ஒவ்வொரு மாவட்டத்துல இருந்தும் நாலு க்ரூப் பஞ்சாயத்து பண்ணி வைக்க சொல்லி வராங்க.
தேர்தல் வேலையை பார்க்குறதா இல்ல கட்சிக்குள்ள உங்க கோஷ்டி பூசல பார்க்குறதா? இதுவரைக்கும் நீங்க செஞ்ச சின்னச்சின்ன தப்புகளை பொறுத்துக்கிட்டு நம்ம புள்ளைங்கன்னு அமைதியா இருந்துட்டேன். இனிமேலும் அப்படி இருக்க முடியாது. அதனால இருக்குற பஞ்சாயத்தெல்லாம் முடிச்சிட்டு தேர்தல் வேலையை ஒழுங்கா பாருங்க. அப்புறம் முக்கியமா வெற்றி வாய்ப்பு நமக்கு பிரகாசமா இருக்கு. எம்.எல்.ஏ சீட்டுக்குலாம் யார்க்கிட்டயும் பேரம் பேசிடாதீங்க. காசு வாங்கிடாதீங்க. அப்டி எதுவும் தகவல் வந்துச்சு நடவடிக்கை கடுமையா இருக்கும்' என உரத்தக் குரலில் எச்சரித்திருக்கிறார்.

மேற்கொண்டு கூட்டத்தில் S.I.R குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. 'S.I.R பணிகளில் திமுகதான் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. அவர்கள் 90% செய்தால் நாம் 10% தான் வேலை செய்திருக்கிறோம். வரைவு வாக்காளர் பட்டியல் வந்தவுடன் விடுபட்டவர்களின் பெயரை எடுத்து அவர்களை மீண்டும் பட்டியலில் சேர்ப்பதில் நாம் கவனமாக செயல்பட வேண்டும்' எனவும் கூறப்பட்டிருக்கிறது.









.jpg)









