`10 நிமிடம் தாமதம்' - ஆசிரியர் கொடுத்த `100 முறை சிட்-அப்' தண்டனையால் உயிரிழந்த ...
Varanasi: "மகேஷ் பாபு ராமரின் உருவத்தில் வந்தபோது..." - ராஜமெளலி ஷேரிங்ஸ்
மகேஷ் பாபுவை கதாநாயகனாக வைத்து பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கும் படத்திற்கு 'வாரணாசி' எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. டைட்டில் டீசருக்கே ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் பிரமாண்ட நிகழ்வை நடத்தியிருக்கிறது படக்குழு.

மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணாவின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் நிகழ்வை நடத்தியிருக்கிறார்கள்.
படத்தில் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க கீரவாணி படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் ராஜமெளலி, "என் குழந்தைப் பருவத்திலிருந்து ராமாயணமும் மகாபாரதமும் எனக்கு எப்படியான ஒன்றாக இருந்து வந்திருக்கிறது என்பதைப் பற்றியும், அதை மையப்படுத்தி படமெடுப்பது என் கனவுத் திட்டம் என்பதைப் பற்றியும் பலமுறை பேசியிருக்கிறேன்.
இவ்வளவு சீக்கிரம் ராமாயணத்தின் ஒரு முக்கியமான அத்தியாயத்தை படமாக்குவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.

ஒவ்வொரு காட்சியையும், ஒவ்வொரு வசனத்தையும் எழுதும்போது, நான் மிதப்பதைப் போல உணர்ந்தேன்.
முதல் நாள், மகேஷ் பாபு, கடவுள் ராமரின் உருவத்தில் போட்டோஷூட்டுக்கு வந்தபோது, எனக்கு உடல் சிலிர்த்தது. அந்தப் போட்டோவை என் வால்பேப்பராக வைத்தேன். பிறகு நீக்கிவிட்டேன்.
படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் சவாலாக இருக்கிறது. வழக்கமாக, என் திரைப்படங்களுக்கு முன்பு, பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி கதையை விவரிப்பேன். அது ஒரு பாரம்பரியமாக ஆகிவிட்டது.
ஆனால் உண்மையில், ஒவ்வொரு திரைப்படத்துக்கும் நான் அதைச் செய்வதில்லை. ‘பாகுபலி’க்கு நான் அதை செய்யவில்லை.
இந்தத் திரைப்படத்துக்கு, நாங்கள் செய்ய மாட்டோம். ஆனால், எதிர்பார்ப்புகளை சரியாக அமைக்க ஒரு அறிவிப்பு வீடியோவை வெளியிட விரும்பினோம்.
அடுத்த மார்ச் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டோம். ஆனால் முடியவில்லை. பிறகு மழை வந்தது. இப்போது, இந்த டைட்டில் காணொளியுடன் இறுதியாக வந்திருக்கிறோம்." என்றவர் மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா குறித்து பேசுகையில், "சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா சாரின் மகத்துவம் பற்றி முன்பு எனக்கு அதிகம் தெரியாது. நான் என்.டி.ஆரின் ரசிகனாக இருந்தேன்.

ஆனால் திரைத்துறையில் நுழைந்த பிறகு, கிருஷ்ணா சாரின் பாரம்பரியத்தைப் புரிந்துகொண்டேன். ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த, பல விதிகளை உடைக்க வேண்டும்.
அவர் பல திரைப்படங்களுக்கு அதைச் செய்தார். இன்று, நாங்கள் தெலுங்கு சினிமாவுக்கு ஒரு புதிய வடிவத்தை அறிமுகப்படுத்துகிறோம் என்று பெருமையுடன் கூறுவேன்.
இந்தப் படம் ஐமாக்ஸ் கேமராவில் எடுத்து வருகிறோம். ‘பாகுபலி’ மற்றும் ‘ஆர்.ஆர்.ஆர்’ போன்றவை, உண்மையாகவே அந்த வடிவத்துக்காகப் படமாக்கப்பட்டு, மாஸ்டரிங் செய்யப்பட்டு, வி.எஃப்.எக்ஸ் முடிக்கப்பட்டவை. இந்தத் திரைப்படமும் உண்மையான அர்த்தத்தில் ஐமாக்ஸுக்காக உருவாக்கப்படுகிறது.














