ஸ்ரீ லலிதாம்பிகை மருத்துவ கல்லூரி லலிதாம்பிகை கருவுறுதல் மையத்தின் முதலாம் ஆண்டு...
``அகண்டா 2: இவ்வளவு நல்லப்படத்தை நாமும் பார்க்கலாமே என்றார் பிரதமர்" - இயக்குநர் போயபட்டி ஶ்ரீனு
நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில், போயபட்டி ஶ்ரீனு இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி வணிக ரீதியில் வெற்றிபெற்ற படம் ‘அகண்டா’. இந்தத் திரைப்படத்தின் தொடர்ச்சியாக, டிசம்பர் 12-ம் தேதி திரைக்கு வந்தது ‘அகண்டா 2: தாண்டவம்.’
பான்-இந்திய படமாக உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் நடிகை சம்யுக்தா, ஆதி பினிசெட்டி, கபீர் துஹான் சிங், ஹர்ஷாலி மல்ஹோத்ரா, பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சனாதன தர்மம் மற்றும் தேசபக்தி ஆகியவற்றை முக்கிய கருப்பொருள்களாகக் கொண்டுள்ள இந்தப் படம், நேற்றுவரை (14-ம் தேதி) உலகளவில் ரூ.46 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில், நேற்று இரவு ஹைதராபாத்தில் படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் நந்தமூரி பாலகிருஷ்ணா, போயபட்டி ஶ்ரீனு, தமன் உள்ளிட்டப் படக்குழுவினர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது உரையாற்றிய இயக்குநர் போயபட்டி ஶ்ரீனு, ``பிரதமர் மோடியிடம் 'அகண்டா 2' திரைப்படம் குறித்து கூறப்பட்டிருக்கிறது. இவ்வளவு நல்லப்படத்தை நாமும் பார்க்கலாமே... என பிரதமர் ஆவலாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
எனவே, விரைவில் பிரதமர் முன்னிலையில் டெல்லியில் 'அகண்டா 2' படத்திற்கு ஒரு சிறப்புத் திரையிடல் திட்டமிடப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட தேதி எதுவும் முடிவாகவில்லை. விரைவில் இது குறித்த விவரங்களை அறிவிப்போம். இந்தப் படத்தை வரவேற்ற ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் என் நன்றிகள்" எனக் குறிப்பிட்டார்.

















