செய்திகள் :

"அவர் ஒரு மூத்த அண்ணனைப் போல என்னிடம் பேசினார், என் கனவு.!"- விராட் கோலி குறித்து வைபவ் சூர்யவன்ஷி

post image

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் சுற்றில் தோல்வியடைந்திருந்தாலும் அந்த அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

15 வயதான சூர்யவன்ஷி 16 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 5 அரை சதம் உள்பட 776 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்தார்.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

இதில் 63 பவுண்டரியும், 72 சிக்சரும் அடங்கும். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேட்டி அளித்திருக்கும் சூர்யவன்ஷி விராட் கோலி குறித்து பகிர்ந்திருக்கிறார்.

விராட் கோலி குறித்து பேசிய அவர், "நான் முன்பு ஆர்சிபி அணியின் ரசிகனாக இருந்தேன். சொல்லப்போனால், நான் விராட் கோலியின் தீவிர ரசிகன்.

விராட் அண்ணா என் தோள் மேல் கை போட்டு என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது, நிஜமாகவே என் கனவு நனவானது போல் இருந்தது.

அவர் பேசிய விதம், அவர் ஒரு பெரிய வீரர் என்பது போலவே தெரியவில்லை. ஒரு மூத்த அண்ணனைப் போல என்னிடம் பேசினார். அவர் விஷயங்களை விளக்கிய விதமும், என்னிடம் பேசிய விதமும் அற்புதமாக இருந்தது.

 விராட் கோலி - வைபவ் சூர்யவன்ஷி
விராட் கோலி - வைபவ் சூர்யவன்ஷி

நான் என்ன செய்ய வேண்டும், எதில் என்னுடைய கவனத்தை செலுத்த வேண்டும் என்பதை அவர் எனக்கு எடுத்துரைத்தார்" என்று விராட் கோலி குறித்து சூர்யவன்ஷி நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

IPL: "இரண்டு அணிகளைத் தவிர மற்ற அணிகள் என்னை ஏலம் கேட்கவில்லை, ஏன் என.!"- வைபவ் சூர்யவன்ஷி

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் சுற்றில் தோல்வியடைந்திருந்தாலும் அந்த அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். 15 வயதான சூர்யவன... மேலும் பார்க்க

"நான் யாருடைய நிழலிலும் இருக்க விரும்பவில்லை"- கேப்டன் பொறுப்பு குறித்து ஸ்ரேயஸ் ஐயர்

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இங்கிலாந்து, அயர்லாந்து தொடர்களில் இந்திய அணியை வழிநடத்த இருக்கும் ஸ்ரேயஸ் ஐயர் தனது புதிய பொறுப்பு குறித்து மனம் ... மேலும் பார்க்க

INDvAFG: சதமடித்து மிரட்டிய கில், ராகுல்; சாய், பண்ட் அரைசதம்! - முதல் நாளில் இந்தியா ஆதிக்கம்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், இந்திய அணி பேட்ஸ்மேன்களின் அபார ஆதிக்கத்தால் வலுவான நிலையில் உள்ளது. தொடக்க வீரர் கே.எல். ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் க... மேலும் பார்க்க

இந்திய அணிக்கு தேர்வானார் சூர்யவன்ஷி! - இங்கிலாந்து, அயர்லாந்து தொடரில் இருந்து புதிய கேப்டன்!

இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கிறார் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெறும் இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது. அதில் இளம் வீ... மேலும் பார்க்க

உலகக் கோப்பை வென்ற 3 மாதங்களில் பதவிக்கு ஆபத்து! சூர்யகுமார் யாதவை கழற்றிவிட BCCI முடிவு?

இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு உலகக் கோப்பையை வென்று தந்து வெறும் 3 மாதங்களே ஆன நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவின் பதவி பறிபோகும் அபாயத்தில் உள்ளது. கேப்டன் பதவியிலிருந்து அவர் நீக்கப்படுவது மட்டும... மேலும் பார்க்க

கோலிக்கு அவமரியாதை? `இது குரூரம்!' - இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்காக கொந்தளித்த ஹர்ஷா போக்ளே!

ஐபிஎல் 2026 தொடர் கோலாகலமாக முடிவடைந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷியைச் சுற்றி ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பர... மேலும் பார்க்க