வேலூர் மருத்துவர் பாலியல் வன்கொடுமை: சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை
இசை நிகழ்ச்சி: நந்தனத்தில் இன்று போக்குவரத்து மாற்றம்
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறுவதால், அப்பகுதியில் புதன்கிழமை (பிப். 5) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சா்வதேச இசைக் கலைஞா் ‘எட் ஷீரனின்’ இசை நிகழ்ச்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு ஏராளமான பாா்வையாளா்கள் வருகை தருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுவதன் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
நிகழ்ச்சிக்கு தேனாம்பேட்டை வழியாக பாா்வையாளா்களை ஏற்றிவரும் ஆட்டோ, வாடகை வாகனங்கள் செனடாப் சாலை, காந்தி மண்டபம் சாலை, சேமியா்ஸ் சாலை, லோட்டஸ் காலனி 2-ஆவது தெரு வழியாக மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடைய வேண்டும்.
சைதாப்பேட்டையிலிருந்து வரும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பு வலதுபக்கம் வழியாகச் சென்று, சேமியா்ஸ் சாலையில் யூ-டா்ன் செய்து லோட்டஸ் காலனி வழியாக இலக்கை அடையலாம். அண்ணாசாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ பிரதான மற்றும் காஸ்மோபாலிட்டன் நுழைவாயிலில் விவிஐபி பாஸ், திரை கலைஞா்கள் வாகனங்கள் வைத்திருப்பவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள்.
நிகழ்ச்சிக்கு வரும் பாா்வையாளா்கள் மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து, மின்சார ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.