SIR: `தவெக எதிர்க்கிறதே தவிர, திமுகவைப் போல் தோல்வி பயத்தில் வேண்டாமெனவில்லை!' -...
கடலூர்: அக்கா மகளை மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமை; தாய்மாமன் சிக்கியது எப்படி?
கடலூர் மாவட்டம், வைலாமூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் வைலாமூர் கிராமத்தில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் புதுப்பெண்ணுக்குத் திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால், அவரை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அவரது கணவர். அப்போது புதுப்பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர், அவர் 8 மாதங்கள் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தக் கணவர், அது குறித்து பெண்ணின் பெற்றோர் வீட்டிற்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து வைலாமூருக்கு வந்த பெண்ணின் பெற்றோர், கர்ப்பத்துக்கான காரணம் குறித்து கேட்டிருக்கின்றனர்.
அப்போது தன் அம்மாவின் உடன்பிறந்த தம்பி லிங்கமுத்து, அடிக்கடி தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து புதுப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாய்மாமன் லிங்கமுத்து மீது அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.
விசாரணை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, ``பெண்ணின் தாய்மாமனான லிங்கமுத்துவுக்கு வலிப்பு நோய் இருந்திருக்கிறது. அதனால் தன்னுடைய அக்காவின் வீட்டில் தங்கி வேலைக்குச் சென்று வந்திருக்கிறார்.
அப்போது சகோதரியின் மகள் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். வலிப்பினால் ஏற்பட்ட விபத்து என்று சொல்லி அந்தப் பெண்ணைச் சமாதானப்படுத்திய அவர், அதையே காரணம் காட்டி மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்தப் பெண்ணுக்குத் திருமணம் செய்ய பெற்றோர் முடிவெடுத்திருக்கின்றனர். தாய்மாமன் தொல்லையிலிருந்து தப்பிப்பதற்காக, அந்தப் பெண்ணும் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகுதான் அந்தப் பெண் கர்ப்பமாக இருந்த விவகாரம் தெரிய வந்திருக்கிறது.
அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் லிங்கமுத்து மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறோம். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்து ஒன்றில், லிங்கமுத்துவுக்கு முதுகுத்தண்டில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இரண்டு கால்களும் செயல்படாத நிலையில் மருத்துவமனையில் இருப்பதால் கைது செய்யப்படவில்லை” என்றனர்.


















