செய்திகள் :

சவூதி அரேபியா: டேங்கர் லாரி மீது மோதிய பேருந்து; 42 இந்தியர்கள் பலி? - ரேவந்த் ரெட்டி உத்தரவு

post image

இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்களின் புனித நகரமாக கருதப்படும் மக்காவுக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம். இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உம்ரா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இன்று காலை டீசல் டேங்கர் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அந்தப் பேருந்தில் பயணித்த 42 புனித யாத்திரை மேற்கொண்ட பயணிகள் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், உயிரிழந்தவர்கள் இந்தியர்கள் என்றும், தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்திலிருந்து புனித பயணம் மேற்கொண்டவர்கள் எனவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

மக்கா - சவூதி அரேபியா
மக்கா - சவூதி அரேபியா

இது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவராத நிலையில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மத்திய அரசின் வெளியுறவுத் துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டிருப்பதாகவும், விபத்து தொடர்பான தகவல்களை ஒருங்கிணைக்க அறிவுறுத்தியதாகவும் தெலங்கானா அரசு தெரிவித்திருக்கிறது.

மாநில அரசு உறுதிப்படுத்தியது. மேலும், இது தொடர்பாக பேசிய ரேவந்த் ரெட்டி, ``விபத்து தொடர்பான விரிவான விவரங்களை சேகரிக்கவும், தெலங்கானாவைச் சேர்ந்த எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் கண்டறியவும் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநருக்கு அறிவுறுத்தியிருக்கிறோம்.

மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் சவுதி தூதரக அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டிருக்கிறோம். தேவைப்பட்டால் உடனடி நிவாரண நடவடிக்கைகளைத் தொடங்கவும் தயாராக இருக்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ரேவந்த் ரெட்டியின் உத்தரவைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளர் ராமகிருஷ்ண ராவ், டெல்லியில் உள்ள ஒருங்கிணைப்புச் செயலாளர் கவுரவ் உப்பலைத் தொடர்புகொண்டு, விபத்தில் சிக்கிய தெலங்கானாவைச் சேர்ந்த நபர்களின் எண்ணிக்கையை விரைவாகக் கண்டறிந்து உடனடியாகத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார். ஒருங்கிணைப்பு முயற்சிகளை எளிதாக்க, செயலகத்தில் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது.

சவூதி: மெக்கா டு மெதினா; டீசல் டேங்கருடன் மோதிய பஸ்; 42 இந்தியர்கள் பலி - உயிர் பிழைத்த ஒருவர்

சவூதி அரேபியாவுக்கு புனித பயணம் சென்று இருந்தவர்களை ஏற்றிக்கொண்டு மெக்காவில் இருந்து மெதினாவிற்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் முப்ரிஹட் என்ற இடத்தில் சென்றபோது எதிரில் வந்த டீசல் டேங்கர் ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: `லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு' -வத்தலக்குண்டு அருகே சோகம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தக்குண்டு அருகே உள்ள தெப்பத்துப்பட்டியை சேர்ந்தவர் காத்தவராயன் (65). இவருடைய மனைவி ஜோதி, மற்றும் பேரக்குழந்தைகள் ஹர்சன் மற்றும் ஹர்ஷினி ஆகியோரை அழைத்துக்கொண்டு உசிலம்பட்டியில் ... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகர் போலீஸ் ஸ்டேஷனில் வெடிகுண்டு விபத்து; 9 பேர் பலி - என்ன நடந்தது?

ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் போலீஸ் நிலையத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது பிடிபட்ட வெடிகுண்டுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த வெடிகுண்டுகளை போலீஸாரும், தடயவியல் நிபுணர... மேலும் பார்க்க

புனே: இரு லாரிகளிடையே சிக்கி தீப்பிடித்த கார் - 8 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்

புனே - பெங்களூரு இடையே பும்கர் என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் டிரைலர் லாரி ஒன்று வாகனங்கள் மீது மோதிக்கொண்டது. இதனால் ஒன்றின் மீது ஒன்று மோதி 13 வாகனங்கள் இதில் சேதம் அடைந்தன. விபத்தில் சிக்கிய ஒரு ... மேலும் பார்க்க

குன்னூர்: திடீரென கலைந்த தேன்கூடு; அலறியடித்த பண்ணை பணியாளர்கள்!

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் உள்ள வண்டிச்சோலை பகுதியில் வனத்துறையின் நாற்றாங்கால் செயல்பட்டு வருகிறது. பல்வேறு வகையான தாவர நாற்றுகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்து வருகின்றனர். நாற்று உற்பத்தி... மேலும் பார்க்க

திண்டுக்கல்: மதுரை நான்கு வழிச் சாலையில் கவிழ்ந்த இராட்சத லாரி; போக்குவரத்து பாதிப்பு | Photo Album

இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்... மேலும் பார்க்க