ரஜினிகாந்த்: நடிப்பு கற்றுக்கொடுத்த ஆசிரியர் மறைவு; நேரில் சென்ற சூப்பர் ஸ்டார் ...
சவூதி பேருந்து விபத்து: ஒரே குடும்பத்தில் 18 பேர் உயிரிழப்பு; நெஞ்சை உலுக்கும் சோகம்!
இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்களின் புனித நகரமாக கருதப்படும் மக்காவுக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம்.
இந்த நிலையில், சவூதி அரேபியாவுக்கு புனித பயணம் சென்று இருந்தவர்களை ஏற்றிக்கொண்டு மெக்காவில் இருந்து மதீனாவுக்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் முப்ரிஹட் என்ற இடத்தில் சென்றபோது எதிரில் வந்த டீசல் டேங்கர் லாரியுடன் மோதிக்கொண்டது.
இந்தச் சம்பவம் அதிகாலை 1 மணி அளவில் நடந்ததால் அதிகமான பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். எனவே விபத்து நடந்தவுடன் அவர்களால் தப்பிக்க முடியவில்லை. அதற்குள் பஸ் முற்றிலும் தீப்பிடித்துக்கொண்டது. டீசல் டேங்கருடன் மோதியதால் டீசல் வெளியேறி தீப்பித்துக்கொண்டது. இந்த விபத்தில் 42 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 11 பெண்கள் மற்றும் 10 குழந்தைகளும் அடங்கும். பஸ் முற்றிலும் எரிந்துவிட்டது.

சவூதி: மெக்கா டு மெதினா; டீசல் டேங்கருடன் மோதிய பஸ்; 42 இந்தியர்கள் பலி - உயிர் பிழைத்த ஒருவர்
உயிரிழந்த அனைவரும் இந்தியாவில் இருந்து சென்றவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து சென்றவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
தெலங்கானா அரசு சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு தெலங்கானாவில் இருந்து சென்றவர்கள் குறித்து கேட்டு விசாரித்து வருகிறது. மேலும் இறந்தவர்கள் உடலை இந்தியாவிற்கு கொண்டுவர தேவையான உதவிகளை செய்யும்படியும் கேட்டுக்கொண்டது.
இந்த பெரும் விபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்திருப்பதாகக் கிடைத்திருக்கும் தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும், இளம் வயதினர், முதியவர்கள் என 9 பேரும், அவர்களின் 9 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. நசீருதீன் (70), அவரது மனைவி அக்தர் பேகம் (62), மகன் சலாவுதீன் (42), மகள்கள் அமினா (44), ரிஸ்வானா (38), ஷபானா (40), மற்றும் அவர்களது குழந்தைகள் ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து உயிரிழந்தவர்களின் உறவினரான அசிப் என்பவர், "என் சகோதரனின் மொத்த குடும்பமும் ஒரே அடியாகப் போய்விட்டது. குழந்தைகள், பெரியவர்கள், இளம் வயதினர் என 3 தலைமுறையும் போய்விட்டது" என்று கதறி அழுதிருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

















