DD: `எனக்கும், என் குடும்பத்துக்கும் கிங் இவர்தான்' - திவ்யதர்ஷினி நெகிழ்ச்சி
திண்டுக்கல்: `லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு' -வத்தலக்குண்டு அருகே சோகம்
திண்டுக்கல் மாவட்டம் வத்தக்குண்டு அருகே உள்ள தெப்பத்துப்பட்டியை சேர்ந்தவர் காத்தவராயன் (65). இவருடைய மனைவி ஜோதி, மற்றும் பேரக்குழந்தைகள் ஹர்சன் மற்றும் ஹர்ஷினி ஆகியோரை அழைத்துக்கொண்டு உசிலம்பட்டியில் மளிகை பொருட்கள் வாங்கிக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்தனர்.
ஒரே வண்டியில், 4 பேர் சென்றுகொண்டிருந்த நிலையில், வத்தலகுண்டு சாலை காந்திபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த செம்மண் லாரி, இவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில், நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் காத்தவராயன் மற்றும் அவருடைய ஒன்பது வயது பேத்தி ஹர்ஷினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்கு போராடிய ஜோதி மற்றும் பேரன் ஹர்ஷன் ஆகியோரை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனே வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஜோதி பரிதாபகரமாக உயிரிழந்தார்.
சிறுவன் ஹர்ஷன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த விருவீடு போலீசார் மூன்று பேர் உடலையும் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்
சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.




















