நாயகன் ரீரிலீஸ்: ``அப்பாவுடைய விசில் சத்தம் கேட்க மாட்டேங்குதுன்னு சொன்னேன்" - இ...
பிரதமர் மோடியின் அழகு ரகசியம் கேட்ட இந்திய கிரிக்கெட் வீராங்கனை - அவரின் பதில் என்ன தெரியுமா?
வரலாற்றில் முதல்முறையாக ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, இந்திய வீராங்கனை ஒருவர் பிரதமரிடம் கேட்ட குறும்புத்தனமான கேள்வி, அங்கிருந்த அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பில், வீராங்கனை ஹர்லீன் தியோல், பிரதமர் மோடியிடம், "நீங்கள் மிகவும் பொலிவுடன் ஜொலிக்கிறீர்கள், உங்கள் ஸ்கின்கேர் ரொட்டீன் என்ன?" என்று கேட்டார். இந்தக் கேள்வியைக் கேட்டு பிரதமர் உட்பட அறையில் இருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.
இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, "நான் இதைப் பற்றி பெரிதாக யோசித்ததே இல்லை" என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட சக வீராங்கனை சினே ராணா, "நாட்டு மக்களின் அன்புதான் பிரதமரின் பொலிவுக்குக் காரணம்" என்றார்.
பிரதமர் மோடியும் "நிச்சயமாக, அதுதான் மிகப்பெரிய பலம். இத்தனை வேலைகளுக்கு மத்தியிலும் மக்களின் ஆசீர்வாதங்கள் வந்துகொண்டே இருப்பது, நம் மீது ஒரு நல்ல விளைவை ஏற்படுத்துகிறது" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Every Indian feels immense pride in Team India’s World Cup victory. It was a delight interacting with the women’s cricket team. Do watch! https://t.co/PkkfKFBNbb
— Narendra Modi (@narendramodi) November 6, 2025




















