``அன்று அயோத்தி ராமர் கோவில், இன்று திருப்பரங்குன்றம்; ஸ்டாலின் அரசே'' - பாஜக அன...
பெரும் பணத்துடன் ஷிண்டே அணிக்கு தாவிய சிவசேனா எம்.எல்.ஏ.க்கள்? - வெளியாகும் வீடியோவின் பின்னணி!
மகாராஷ்டிராவில் கடந்த 2023-ம் ஆண்டு சிவசேனா இரண்டாக உடைந்தது. பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு சென்றதையடுத்து ஏக்நாத் ஷிண்டே அணி உண்மையான சிவசேனா என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவ ரூ.50 கோடி வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் இக்குற்றச்சாட்டை மறுத்து வந்ததனர்.

இந்நிலையில் சிவசேனா எம்.எல்.ஏ மகேந்திர தல்வி கோடிக்கணக்கான பணத்தை கையாள்வது போன்ற ஒரு வீடியோவை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மூத்த தலைவர் அம்பாதாஸ் தன்வே வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ வைரலானது. ஆனால் இது உத்தவ் தாக்கரே கட்சியின் அவதூறு செயல் என்று ஏக்நாத் ஷிண்டே கட்சியினர் தெரிவித்தனர்.
அம்பாதாஸ் தன்வேயிக்கு மிரட்டுவதுதான் தொழில் என்று தல்வி குறிப்பிட்டு இருந்தார். இந்த பிரச்னை சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. இந்த வீடியோ சர்ச்சை அடங்கும் முன்பு மற்றொரு சிவசேனா அமைச்சர் பரத் கோகாவாலாவும் அது போன்று பணத்துடன் இருக்கும் படத்தை உழவர் உழைப்பாளர் கட்சியை சேர்ந்த சித்ரலேகா என்பவர் வெளியிட்டு இருக்கிறார்.
ஆனால் அந்த படத்தை கோகாவாலா நிராகரித்துள்ளார். ஏற்கனவே மற்றொரு சிவசேனா அமைச்சர் சஞ்சய் ஷிர்சாத் பணத்துடன் இருக்கும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இப்போது மேலும் இரு எம்.எல்.ஏ.க்கள் பணத்துடன் இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இந்த வீடியோக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்கு தர்ம சங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.கவில் தங்களது கட்சிக்கு மாநகராட்சி தேர்தலில் கூடுதல் வார்டுகள் ஒதுக்கவேண்டும் என்று கூறி வரும் நிலையில் இந்த வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது.









.jpg)









