செய்திகள் :

மகாருத்ர ஹோமம்: 2026 அதிர்ஷ்ட ஆண்டாக யாரெல்லாம் கலந்து கொள்ள வேண்டும் தெரியுமா! ஜோதிட காரணங்கள்!

post image

மகாருத்ர ஹோமம்: வாழ்வில் உண்டான அனைத்துப் பிரச்னைகளும் தீர , தீர்க்க முடியாத நோய்களைத் தீர்க்கவும், கர்மவினைகள் தீர்ந்து உயர் நிலை அடையவும், வாழ்வில் முன்னேற்றம் காண்பதற்கும் இந்த மகாருத்ர ஹோமம் உதவும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மகாருத்ர ஹோமம்

2026-ம் ஆண்டு, எண் ஜோதிடப்படி (2+0+2+6=10=1) ராஜா கிரகமான சூரியனின் ஆதிக்கத்தில் - கிருத்திகை நட்சத்திரத்தில் பிறக்கவுள்ளதால் இந்த ஆண்டு பொதுவாக பலருக்கு நன்மைகள் உண்டாகும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. பல்வேறு வகைகளில் சவால்களை அளித்தாலும் கடந்த ஆண்டைவிடவும் மக்களிடையே பண வரவையும் மகிழ்ச்சியையும் பெருகவைப்பதாக 2026 அமையும். சிம்மம், துலாம், மகரம், கும்பம், மேஷம் ராசியினருக்கு சிறந்த ஆண்டாக அமையும் என்றும் மற்ற 7 ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய ஆண்டு இது என்றும் சொல்லப்படுகிறது.

குறைகள் என்று இருந்தால் அதை சரி செய்ய வழிபாடு என்ற தீர்வும் உண்டு என்பார்கள் பெரியோர்கள். அதையொட்டி வரும் 2026-ம் ஆண்டு எல்லோருக்கும் சிறப்பாக அமைய உங்கள் சக்தி விகடன் சிறந்ததொரு பரிகார வழிபாடாக மகாருத்ர ஹோமம் நடத்தவுள்ளது. கோவை ஆர். எஸ். புரத்தில் உள்ள ஸ்ரீஅண்டவாணர் ஆலயத்திலேயே வெகு அபூர்வமான இந்த மகாருத்ர ஹோமம் வரும் ஜனவரி 2-ம் நாள் மார்கழி திருவாதிரை அபிஷேக நாளில் மகாருத்ர ஹோமம் நடத்த உள்ளோம். இதனால் ஜோதிட ரீதியான உங்கள் எல்லா குறைகளும் தீரும் என்பது நிச்சயம்.

மேலும் தீர்க்க முடியாத நோய்களைத் தீர்க்கவும், கர்மவினைகள் தீர்ந்து உயர் நிலை அடையவும், வாழ்வில் முன்னேற்றம் காண்பதற்கும் இந்த மகாருத்ர ஹோமம் உதவும் என்கின்றன புனித நூல்கள். திருமணத் தடைகள், குடும்பச் சிக்கல்கள், வியாபார மற்றும் தொழில் தேக்கங்கள், அடிக்கடி உண்டாகும் மன - உடல் பிரச்னைகள் யாவையும் நீங்க இந்த மகாருத்ர ஹோமம் உதவும். மந்திரங்களில் சிறந்ததான ஸ்ரீருத்ரத்தை பலமுறை உச்சரித்து செய்யப்படும் இந்த மகாருத்ர ஹோமம், ஹோமங்களில் சிறந்தது என்று கூறப்படுகிறது. சகல வேண்டுதல்களையும் நிறைவேற்றக் கூடியது என்கின்றன புனித நூல்கள்.

மகாருத்ர ஹோமம்

கிருஷ்ண யஜுர் வேதத்தில், ஈஸ்வரனைப் போற்றும் மகத்தான துதிக்கு ஸ்ரீருத்ரம் என்று பெயர். இது சதருத்ரீயம், ருத்ரப்ரஷ்னம், ருத்ரசூக்தம், ருத்ராநுவாகம் என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீருத்ரத்தில் இரண்டு பகுதிகள் நமகம் என்றும், சமகம் என்றும் உள்ளன. இரண்டிலும் 11 பகுதிகள் அனுவாகங்கள் என்று உள்ளன. ஸ்ரீருத்ரம் ஒலிக்கும் இடத்தில் நவகிரகங்கள் சுபானுக்ரகம் செய்யும் என்பது விதி. இந்த ஸ்ரீருத்ரத்தை பாராயணம் செய்தாலும், யாரோ பாராயணம் செய்வதை பக்தியுடன் அமர்ந்து கேட்டாலும் போதும். அது நமக்கு இகவுலக பரவுலக நன்மைகளை எல்லாம் அளிக்க வல்லது என்கிறார்கள் பெரியோர்கள்.

மகாருத்ர ஹோமம்

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

ருத்ர மந்திரத்தின் நடுமையத்தில் இடம் பெரும் 'நமசிவாய' எனும் பஞ்சாட்சர உயர் மந்திரமே ஸ்ரீருத்ரத்தின் முழுப் பலனையும் அளித்துவிடும். பஞ்சாட்சரம் ஒலிக்க நடைபெறும் மகாருத்ர ஹோமத்தில் சிவனே ஏதோ ஒருவடிவில் பிரசன்னமாவார் என்பது நம்பிக்கை. எனவே இங்கு நடக்கும் மகாருத்ர ஹோமத்தில் நீங்களும் சங்கல்பித்துக் கொண்டால் இந்த 2026-ம் ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்ட மற்றும் வெற்றி அளிக்கும் ஆண்டாக அமையும் என நம்பலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மகாருத்ர ஹோமம்

வாசகர்களின் கவனத்துக்கு!

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.500/-மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், இந்த வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும்.

அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது, பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். குறிப்பிட்ட நாளில் வாசகர்கள், சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் இந்த வழிபாட்டு வைபவங்களை வீடியோ வடிவிலும் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும்.

நியாயமான வேண்டுதல்களை நிறைவேற்றும் தனுர்வியதிபாத வழிபாடு; எங்கு ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?

எவரொருவர் வியதிபாத தினத்தன்று இந்த ஆலயத்திற்கு வந்து மனமுருகி வழிபடுகிறாரோ அவருடைய தோஷத்தினைத் தாமே ஏற்றுக்கொண்டு விடுவதாக இத்தலத்து ஈசனே உறுதிமொழி கொடுத்துள்ளார். 2025 டிசம்பர் 26 அன்று இந்த புண்ணிய ... மேலும் பார்க்க

தென்காசிக்கு வந்த அச்சன்கோவில் ஐயப்பன் திருவாபரணப் பெட்டி; 35 ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பர்யம்!

கேரள மாநிலம் அச்சன்கோவிலில் உள்ள ஐயப்பனுக்கு மண்டல பூஜை அன்று திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். அச்சன்கோவில் மண்டல மகோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.35 ஆண்டுகளாகத்... மேலும் பார்க்க

மகாருத்ர ஹோமம்: ஆயுளில் ஒருமுறையாவது செய்ய வேண்டியது ஏன்? 8 பரிகாரங்கள் சொல்கிறது சாஸ்திரம்!

மகாருத்ர ஹோமம்: மகாருத்ர ஹோமத்தை நடத்தினாலோ, அதில் கலந்து கொண்டு சங்கல்பித்தாலோ எல்லா காரியங்களும் தடையின்றி நடைபெறும். தரித்திரத்தில் இருப்பவர் கோடீஸ்வரனாக மாறுவர் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.முன்பதி... மேலும் பார்க்க

விருதுநகர்: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரம்; சோதனை ஓட்டம் வெற்றி!

196 அடி உயரம் உடைய ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்திற்கு ஈடு இணை மண்ணுலகத்தில் ஏதுமில்லை என்றும், விண்ணுலகத்தில் உள்ள மேருமலைக்கு ஒப்பானது என்றும் கம்பர் பாடியுள்ளார்.இத்தகைய பெருமையும் சிறப... மேலும் பார்க்க

நினைத்த காரியங்கள் வெற்றி பெற வரமளிப்பாள் காரப்பாக்கம் கங்கை அம்மன் திருவிளக்கு பூஜை; அனுமதி இலவசம்!

2025 டிசம்பர் 19-ம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை ஓ.எம்.ஆர் காரப்பாக்கம் கங்கை அம்மன் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் விளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அது... மேலும் பார்க்க

மகாருத்ர ஹோமம்: 2026 உங்களுக்கு அதிர்ஷ்ட ஆண்டாக அமையும்! ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெருகும் அதிசயம்

மகாருத்ர ஹோமம்: 2026 உங்களுக்கு அதிர்ஷ்ட ஆண்டாக அமையும்! ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெருகும் அதிசயம்! 2026 ஜனவரி 2-ம் தேதி மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீஅண்டவாணர் திருக்கோயில... மேலும் பார்க்க