செய்திகள் :

மின்னல் தாக்கி செல்போன் வெடிக்குமா?

post image

சருமப் பராமரிப்பு என்பது இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டியதா?

- கே.ராஜலட்சுமி, புதுச்சேரி

பதில் சொல்கிறார், ஆரணியைச் சேர்ந்த சரும மருத்துவர் ஜெகன் ராமன்.

சருமம் என்பது நாம் வெளியில் பார்க்கும் தோல் மட்டும் கிடையாது. அது நம் உடல் வெப்பத்தை நிர்ணயம் செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் வெயிலில் சென்று வந்தால் சருமம் நிறம் மாறியிருப்பதை கவனித்திருப்போம், அது சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்களை நம் உடலுக்குள் இறக்காமல் இருப்பதற்காக, மெலனோ சைட்ஸ் எனப்படும் நிறமிகளை சருமத்தின் மேற் பகுதிக்குக் கொண்டுவரும் ஒருவித பாதுகாப்பு நடவடிக்கையே. இப்படி சருமத்துக்கு நிறைய பணிகள் உண்டு. எனவே, சருமப் பராமரிப்பு என்பது மிகவும் முக்கியம்.

தினமும் சருமப் பராமரிப்பைப் பின்பற்றுவது அவசியம் என்றாலும், அதை அளவுக்கு அதிகமாகச் செய்வதும் தேவையற்றது. உதாரணத்துக்கு, சிலர், பாதுகாப்பு கருதி, குழந்தைகளை வெளியே விடாமலேயே வைத்திருப்பார்கள். அப்படியெல்லாம் செய்ய வேண்டியதில்லை.

நம் ஒவ்வொருவரின் சருமமும் ஒவ்வொரு தன்மையில் இருக்கும். அதற்கேற்றவாறு தான் சருமப் பராமரிப்பு பொருள்களைப் பயன்படுத்த வேண்டும். சன் ஸ்கிரீன் மற்றும் மாய்ஸ்ச்சரைசர் இரண்டும் மிக முக்கியம். வெயிலில் செல்லும்போது தலையில் தொப்பி அணிவது, உடல் முழுவதும் மூடும்படியான ஆடைகள் அணிவது போன்றவற்றால் வெளிப்புற காரணிகளால் சருமம் பாதிப்படை வதைத் தடுக்கலாம். சருமத்தைச் சுத்தமாக வைத்திருப்பதும் அவசியம்.

அடிக்கடி பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக சருமத்தை அடிக்கடி கிளென்ஸ் செய்ய வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் வைட்டமின் சி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதும் அவசியம். எனவே, சருமப் பராமரிப்பு என்பது எப்போதும் பின்பற்றப்பட வேண்டியதுதான்.

மொட்டைமாடியில் நின்று செல்போன் பேசியபோது மின்னல் தாக்கி, செல்போன் வெடித்து ஓர் இளைஞர் உயிரிழந்ததாக செய்தி படித்தேன். இது எப்படி சாத்தியம... ? மழை பெய்யும்போது செல்போன் பேசக்கூடாதா?

- மல்லிகா அன்பழகன், சென்னை-78

பதில் சொல்கிறார், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த `அஃறிணை இன்னோவேஷன்' நிறுவனர் முனைவர் விக்னேஷ் கிருஷ்ணன்.

மின்சாதன பொருளாகவே இருந்தாலும் செல்போனுக்கு மின்னலை ஈர்க்கும் தன்மை கிடையாது. அதனால் மொட்டைமாடியில் நின்று செல்போன் பேசும்போது, அது வெடிக்கும் என்பதும், அதனால் மனிதர்கள் இறப்பார்கள் என்பதும் தற்போது வரை நிரூபிக்கப்படாதவை. எப்போதும் மின்னல் வரும்போது அது பூமியை நோக்கி இறங்கும். அப்போது வரும் வேகத்தில் மின்கடத்தும் பொருள்கள் ஏதேனும் இருந்தால் அதன்வழியே இறங்கிவிடும். அதனால்தான் பெரிய பெரிய கட்டடங்களில் கூர்மையான முனை போன்ற பகுதியும், மின்னலைத் தாங்கும் அமைப்பும் கொண்டும் கட்டுகின்றனர். மொட்டைமாடியில் நாம் நிற்கும்போது மொட்டைமாடியைவிட அதிக உயரத்தில் நாம் இருப்போம். நம்முடைய உடலும் மின்னலைக் கடத்தும் தன்மையுடையது. அதனால் மின்னல் நம் உடல் வழியே பூமிக்குள் இறங்கும். அதனால்தான் மின்னல் தாக்கி மனிதர்கள் உயிரிழக்கின்றனர்.

மனித உடலில் பாயும் மின்னல், அதிக வோல்டேஜ் உடன் இறங்கும். அப்போது ஏற்கெனவே கையில் இருக்கும் செல்போன் போன்ற மின்சாதன பொருளில், அந்த அதிக வோல்டேஜால் வெடிக்கும். இதனால்தான் மழை பெய்யும்போது உயரமான இடங்களில் இருக்க வேண்டாம் என கூறப்படுகிறது. இடி என்பது வெறும் சத்தம் தான், மின்னல்தான் பூமியில் இறங்குவது. அதனால் இதனை `மின்னல்தாங்கி' என்றே கூற வேண்டும். அப்படித்தான் ஆரம்பத்தில் கூறினார்கள். பேச்சு வழக்கில் அது `இடிதாங்கி' என மாறிவிட்டது.

அறிவைத் தேடுங்கள், செல்வத்தை அல்ல : காலம் கடந்து நிற்கும் சாக்ரடீஸ் பொன் மொழிகள்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சந்நியாசம் 2.0 : DINK தம்பதிகளின் வாழ்க்கைமுறை – இது பொருளாதாரப் புரட்சியா?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

`ஓய்வுக்காலத்தில் மருத்துவம், பாதுகாப்பு, வாழ்க்கைத் தரம்' - எந்த நாடு பெஸ்ட்? ஆய்வு சொல்லும் தகவல்

இன்றைய காலகட்டத்தில், ஓய்வூதியம் என்பது பணியிலிருந்து விடைபெற்று ஒதுங்குவது மட்டுமல்ல; அது வாழ்க்கையின் புதிய தொடக்கமாக மாறிவிட்டது.சமீபத்தில் உலகளாவிய ஓய்வூதிய குறியீடு (Global Retirement Index) வெளி... மேலும் பார்க்க

`மன அழுத்தத்திற்கு குட்பை!' ஜென் Z இளைஞர்களை ஈர்க்கும் ஜப்பானிய `வாபி ஷாபி' தத்துவம் - அது என்ன?

சமூக வலைதளங்களில் எப்போதும் பாசிட்டிவான விஷயங்களை அல்லது வாழ்க்கையை மட்டுமே காட்ட வேண்டும் என்ற அழுத்தத்திற்கு மத்தியில், ஒரு புதிய தத்துவம் இளைய தலைமுறையினரிடையே வேகமாகப் பரவி வருகிறது. அதுதான் ஜப்பா... மேலும் பார்க்க

நெல்லையில் களைகட்டும் கிறிஸ்துமஸ் விற்பனை: மின்னொளியில் ஒளிரும் ஸ்டார்கள், குடில்கள், மரங்கள்.!

நெல்லையில் களைகட்டும் கிறிஸ்துமஸ் விற்பனைநெல்லையில் களைகட்டும் கிறிஸ்துமஸ் விற்பனை |மின்னொளியில் ஒளிரும் ஸ்டார்கள், குடில்கள், மரங்கள்.! மேலும் பார்க்க

அந்த நினைவுகள் ஏன் நினைவில் இருப்பதில்லை? - ஆய்வுகள் கூறும் சுவாரஸ்ய தகவல்கள்

நம்மில் பலருக்கும் நமது குழந்தை பருவகாலங்கள் எப்படி இருந்தன என்பது துளியும் நினைவில் இருப்பதில்லை. சில காட்சிகள் மட்டுமே நினைவில் இருக்கும் அல்லவா? இதன் உலகம் என்று பல விஷயங்களை அவ்வபோதுதான் பார்த்திர... மேலும் பார்க்க