BB Tamil Day 67: பாருவுக்கு சார்பாக அமித்; அடங்காத பாரு - கம்மு ஜோடி; 68வது நாளி...
விருதுநகர்: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரம்; சோதனை ஓட்டம் வெற்றி!
196 அடி உயரம் உடைய ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்திற்கு ஈடு இணை மண்ணுலகத்தில் ஏதுமில்லை என்றும், விண்ணுலகத்தில் உள்ள மேருமலைக்கு ஒப்பானது என்றும் கம்பர் பாடியுள்ளார்.
இத்தகைய பெருமையும் சிறப்பையும் உடைய ஆண்டாள் கோயில் கோபுரம் ஜொலிக்கும் வகையில், சுமார் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காண்பவர் கண்களைக் கவரும் வகையில் பல வண்ண விளக்குகள் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

பல வண்ணங்களில் ஜொலித்த கோபுரம்:
இந்நிலையில், ராஜகோபுரத்தில் வண்ண விளக்குகளை மிளிர வைத்து சோதனை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோபுரம் பல வண்ண நிறங்களில் ஜொலித்தது. இரவு நேரத்தில் பல வண்ணங்களில் ஜொலித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரம் காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் எனப் பல்வேறு வண்ணங்களில் மாறி, மாறி ஒளிர்ந்த கோபுரம், வானளாவிய அழகுடன் காட்சியளித்தது.

சிறப்பு அம்சங்கள்:
இனி இரவு நேரங்களில் இந்தக் கோபுரம் வண்ண விளக்குகளுடன் ஒளிர்வதால், ஸ்ரீவில்லிபுத்தூர் நகரம் மேலும் சுற்றுலாத் தலமாக பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளதால், விரைவில் இந்த வசதி முழுமையாகச் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



















