செய்திகள் :

BB Tamil 9: "ஒருதர மட்டும்னா 'Unfair Red Card’ங்கிற பேச்சு வரும்" - எவிக்‌ஷனில் நீண்ட விவாதம்?

post image

அடுத்த வாரத்துடன் நிறைவு பெறுகிறது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9.

வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை உள்ளிட்ட இருபது பேருடன் நிகழ்ச்சி தொடங்கியது நினைவிருக்கலாம்.

இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார்.

பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறினர்.

கமருதீன்
கமருதீன்

முன்னதாக இந்தச் சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால் நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்ததால் டிவி முகங்களான அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் சென்றனர்.

வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் சென்றவர்களிலும் பிரஜின், அமித் பார்கவ் இருவரும் வெளியில் வந்து விட்டனர்.

இந்நிலையில் இந்த வார எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் இன்று காலை பிக்பாஸ் செட்டில் தொடங்கியது.

நேற்று நடந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் சாண்ட்ராவை பார்வதியும் கமருதீனும் சேர்ந்து தள்ளி விட்டது பெரிய பிரச்னை ஆகி விட்டதால் இன்று இவர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்படலாமென்கிற எதிர்பார்ப்பு இருந்தது.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

அதேபோல ஷூட்டிங் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அந்த விவகாரம் கையில் எடுக்கப்பட்டது.

இருவருமே முதல் நாளில் இருந்து நிகழ்ச்சியில் தொடர்ந்து டாப் 5 பேரில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தச் சம்பவத்தை வைத்து, அதுவும் நிகழ்ச்சி முடிய இன்னும் ஒரு வாரமே இருக்கிற சூழலில் ரெட் கார்டு தருவதா என்கிற ஒரு விவாதம் சேனல் மட்டத்தில் நடந்ததாகச் சொல்கிறார்கள்.

அப்படி ஒருவேளை ரெட் கார்டு என்கிற முடிவுக்குப் போனால் கமருதீனை மட்டும் அனுப்பலாமென நினைத்தார்களாம்.

அவருக்குப் பலமுறை எச்சரிக்கை தரப்பட்டதைச் சுட்டிக்காட்டிய சிலர், எனவே அவரை மட்டும் அனுப்பி விடலாம். பார்வதிக்கு எச்சரிக்கை தந்து தொடர அனுமதிக்கலாம் என வாதிட்டிருக்கின்றனர்.

BB Tamil 9
BB Tamil 9

ஆனால் விஜய் சேதுபதிதான், "நடந்த அந்தச் சம்பவத்தின்போது பார்வதி கமருதீனைத் தூண்டியது பளிச்செனத் தெரிவதால், அவரையும் அனுப்புவதே சரியானதாக இருக்கும். ஒருவரை மட்டும் அனுப்பினால், ’அன்ஃபேர் எவிக்‌ஷன்'னு சொல்றாங்களே, அந்த மாதிரி ’அன்ஃபேர் ரெட் கார்டு’ங்கிற பேச்சு கிளம்ப வழி வகுக்கும்" எனச் சொன்னதாகத் தெரிகிறது.

எனவே நீண்ட விவாதத்திற்குப் பிறகே டபுள் ரெட் கார்டு என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்பது மட்டும் நிஜம்..

`இன்னைக்கு நாங்க வசதியா, ஒற்றுமையா இருக்க காரணம் அவங்கதான்!' - உருகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஸ்டாலின்

``பொம்பளைப் பிள்ளைகள் பிறந்தாலே கள்ளிப் பால் ஊத்திக் கொன்னு போடற காலத்துல உசிலம்பட்டியில பொறந்தவங்க சார் என் அம்மா. ஆனா என் தாத்தா பிரிட்டிஷ்காரங்க காலத்துலயே ஹெட் மாஸ்டரா இருந்ததால அம்மாவும் ப‌டிச்சு... மேலும் பார்க்க

BB 9: `இந்த 3 மாச வாழ்க்கையா அவங்களை மிரட்டிடும்?' - திவ்யா வெற்றி குறித்து நெகிழும் கம்பம் மீனா

நூறு நாட்கள் கடந்து ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன் 9, முடிவடைந்து வைல்டு கார்டு போட்டியாளராகச் சென்ற திவ்யா கணேஷ் டைட்டிலையும் வென்று விட்டார்.திவ்யா கணேஷுடன் 'பாக்கியலட்சுமி' தொடரில் நடித்த கம்பம் ம... மேலும் பார்க்க

Serial Update: டைட்டில் மாறி, வெளிவரும் ரியாலிட்டி ஷோ டு மீண்டும் சீரியலுக்கு திரும்பிய ஹீமா பிந்து!

அதே டெய்லர் அதே வாடகை!ஜீ தமிழ் சேனலில் 'மிஸ்டர் அன்ட் மிசஸ் கில்லாடிஸ்' என்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பானதே நினைவிருக்கிறதா? ஐந்தாறு ஆண்டுகளுக்கு்முன் அடுத்தடுத்து ஒளிபரப்பான இரண்டே இரண்டு சீசன்களுக்குப் ப... மேலும் பார்க்க

BB TAMIL 9 FINALE: டைட்டில் வென்ற திவ்யா; பாருவின் என்டரி - ஃபைனலிஸ்ட்டுகளின் பலமும் பலவீனமும்!

இந்த ஒன்பதாவது சீசனின் டேக்லைன் இப்படியாக இருந்தது. ‘ஒண்ணுமே புரியலையே’... திவ்யாவின் தடாலாடியான வெற்றியும் அதைத்தான் நமக்கு சொல்கிறது. ‘ஒண்ணுமே புரியலையே’!எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்கிற லேபிளில் ... மேலும் பார்க்க

BB Tamil 9: "எல்லா விருது நிகழ்ச்சிகளுக்கும் போவேன்; ஆனா.!"- டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ் எமோஷனல்

கடந்த அக்டோபர் மாதம் ஒளிப்பரப்பாக தொடங்கிய 'பிக் பாஸ்' சீசன் 9 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று (ஜன.18) நடைபெற்றது. இந்த ஆண்டும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சோஷியல் மீடியா க... மேலும் பார்க்க