செய்திகள் :

Ek Din: "சாய் பல்லவிதான் இந்த நாட்டின் சிறந்த நடிகை!" - ஆமீர் கான் புகழாரம்

post image

ஆமீர் கானின் மகன் ஜூனைத் கான் நடிகராக அறிமுகமாகும் 'ஏக் தின்' (Ek Din) படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது.

Ek Din Movie
Ek Din Movie

இத்திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிகழ்வில் சாய் பல்லவிதான் சிறந்த நடிகை என ஆமீர் கான் பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் கூறுகையில், "இந்தத் திரைப்படத்தின் ('ஏக் தின்') தயாரிப்பாளர் என்ற முறையில், இதில் பணியாற்றிய ஒவ்வொருவரும் காட்டிய தீவிரமான உழைப்பு மற்றும் நேர்மையைக் கண்டு நான் மிகவும் நன்றியோடு உணர்கிறேன்.

பாடகர் அரிஜித் சிங் இங்கே இல்லாதது குறையாக உள்ளது. அவர் பாடலை மிகவும் அற்புதமாகப் பாடியுள்ளார்.

இசையமைப்பாளர் ராம் சம்பத்தும் மிகவும் சிறப்பான இசையை வழங்கியிருக்கிறார். சாய் பல்லவி இதில் மிக அற்புதமான பணியைச் செய்துள்ளார்.

ஆமீர் கான்
ஆமீர் கான்

அவர் செய்திருப்பதைப் பார்த்தால் நீங்கள் நிச்சயம் வியந்து போவீர்கள். என் மனதிலிருந்து உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இன்று நம் நாட்டில் இருக்கும் மிகச்சிறந்த நடிகை சாய் பல்லவிதான்.

என்னுடைய மகன் ஜூனைத் கானும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால் அவன் எனது மகன் என்பதால் என்னால் அதிகம் சொல்ல முடியாது.

இந்தப் படத்தின் ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் நன்றி. இந்தப் படத்தை மிகவும் நேர்மையுடன் உருவாக்கியிருக்கிறார்கள். இனி மக்கள் பார்த்துத் தீர்ப்பளிக்க வேண்டும்" எனப் பேசியிருக்கிறார்.

பாலிவுட்டில் இதுதான் சாய் பல்லவியின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது!

Akshay Kumar: ஆன்லைன் கேமில் அக்‌ஷய் குமாரின் 13 வயது மகளிடம் நிர்வாணப் படம் கேட்ட நபர் கைது

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகள் ஆன்லைனில் துன்புறுத்தலைச் சந்தித்தாகத் தெரிவித்து இருந்தார். மும்பையில் நடந்த சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

"இன்றும் கோயிலுக்குள் எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது!" - 'பஞ்சாயத்' சீரிஸ் நடிகர் ஆதங்கம்

அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியான 'பஞ்சாயத்' வெப் சீரிஸில் நடித்துப் பிரபலமானவர் வினோத் சூர்யவன்ஷி. வினோத் சூர்யவன்ஷி - பஞ்சாயத் வெப் சீரிஸ்சமீபத்திய பேட்டி ஒன்றில், நிஜ வாழ்க்கையில் இன்றைய தேதிய... மேலும் பார்க்க

Bollywood: ``சுஷாந்த் மரணத்திற்கு பாலிவுட் மாஃபியாதான் காரணம்" - உடைத்துப் பேசும் நடிகை தனுஸ்ரீ!

பாலிவுட் திரையுலகில் நிலவும் அசாத்தியமான சூழல்கள் மற்றும் "பாலிவுட் மாஃபியா" (Bollywood Mafia) குறித்தும், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் நடிகை ஜியா கான் ஆகியோரின் மரணங்களுக்குப் பின்னால் இருக்... மேலும் பார்க்க

மனைவி குறித்து பேசிய ரித்தேஷ் தேஷ்முக்; தேம்பி அழுத ஜெனிலியா - வைரலாகும் வீடியோ!

சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் 'ராஜா சிவாஜி'. ரித்தேஷ் தேஷ்முக் இப்படத்தை இயக்கியிருக்கிறார். 'ராஜா சிவாஜி' படத்தில் அபிஷேக் பச்சன் நடித்திருக்கிறார்... மேலும் பார்க்க

Hansika: 'காஸ்டிங் கௌச்' குறித்த கேள்விக்கு நடிகை ஹன்சிகாவின் பதில் - விவாதிக்கும் நெட்டிசன்கள்!

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவரின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்த செய்தியைத் தொடர்ந்து மீண்டும் தலைப்புச் செய்திக... மேலும் பார்க்க

"சினிமா வேண்டாம் என்று ரூ.4500 சம்பளத்தில் வேலை செய்கிறார்" - மகன் குறித்து நடிகர் அக்‌ஷய் குமார்

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் நடிகை டிவிங்கிள் கண்ணா தம்பதியின் மகன் ஆரவ் தனது 15 வயதில் லண்டன் சென்று பேஷன் டிசைனிங் கற்றுக்கொண்டு வந்தார். லண்டனில் படிக்கச் சென்றபோது தனக்கு தேவையான சாப்பாட... மேலும் பார்க்க