செய்திகள் :

Jana Nayagan: ஒத்திவைக்கப்படும் 'ஜனநாயகன்' ரிலீஸ் - தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை!

post image

விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' பொங்கல் ரிலீஸாக ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தார்கள்.

ஆனால், படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதற்கு தாமதமானதால் படக்குழு நீதிமன்றத்தை நாடியிருந்தது. நேற்று மதியம் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.

Jananayagan
Jananayagan - ஜனநாயகன்

இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, வழக்கில் ஜனவரி 9-ம் தேதி தீர்ப்பளிக்க உள்ளதாக நீதிபதி பி.டி. ஆஷா அறிவித்திருந்தார்.

இதனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படும் எனப் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் அன்பார்ந்த பங்குதாரர்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்தச் செய்தியை மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகவிருந்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீடு, எங்களால் கட்டுப்படுத்த முடியாத தவிர்க்க முடியாத சூழல்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Jana Nayagan Trailer - Vijay
Jana Nayagan Trailer - Vijay

இத்திரைப்படத்தைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்வுகளை நாங்கள் ஆழமாகப் புரிந்துகொள்கிறோம்.

இந்த முடிவு எங்களில் எவருக்கும் எளிதானதல்ல. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

உங்களது அசைக்க முடியாத ஆதரவே 'ஜனநாயகன்' குழுவினருக்கு மிகப்பெரிய பலமாகவும், எல்லாவற்றுக்கும் மேலானதாகவும் இருக்கிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

பராசக்தி விமர்சனம்: மொழிப் போர் பின்னணியில் ஒரு கமெர்ஷியல் சினிமா; வென்றதா இந்த புறநானூற்றுப் படை?

1959-ம் ஆண்டு ரயில்வே பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு முழுக்க முழுக்க இந்தி மொழியிலேயே நாடு முழுவதும் வெளியிடப்படுகிறது. இந்த இந்தித் திணிப்புக்கு எதிராக செழியன் (சிவகார்த்திகேயன்) தலைமையில் இந்தி பேசாத ... மேலும் பார்க்க

ஜன நாயகன்: ``வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய குரல்கொடுப்போம்" - இயக்குநர் மாரிசெல்வராஜ்

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் பரிந்துரை செய்தது. இதை எதிர்... மேலும் பார்க்க

ஜனநாயகன்: ``திரைப்பட வெளியீடுக்கு இடையூறு, ஜனநாயக படுகொலை" - கொதிக்கும் இயக்குநர் விக்ரமன்!

ஜனநாயகன் திரைப்படம் வெளியாவது தொடர்பான சிக்கல் நீடித்து வருகிறது. திடீரென உருவாக்கப்பட்ட சென்சார் பிரச்னையால் படம் வெளியாவது தாமதமாகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஜனநாயகன் திரைப்படத் தயாரிப்பாளரும், கே.... மேலும் பார்க்க

ஜனநாயகன்: `தணிக்கை வாரியம் காலாவதியானது' - இயக்குநர் ராம் கோபால் வர்மா காட்டம்!

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் பரிந்துரை செய்தது. இதை எதிர்... மேலும் பார்க்க

ஜனநாயகன்: ``சில உண்மைகளைச் சொல்ல விரும்புகிறோம்" - தயாரிப்பாளர் KVN கே.நாரயணா வெளியிட்ட வீடியோ

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் நேற்றே வெளியாக வேண்டியது. ஆனால், திடீரென உருவாக்கப்பட்ட சென்சார் பிரச்னையால், யாரும் எதிர்பார்க்காத வகையில் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாக ... மேலும் பார்க்க