TAPS: `இது ஓய்வூதியத் திட்டமல்ல, சிறு சேமிப்புத் திட்டம்'- ஒரு தரப்பு அரசு ஊழியர...
Jana Nayagan Trailer: "மக்கள் அவனைக் கொண்டாடிட்டு இருக்காங்க" - வெளியான ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர்!
விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்; படம் ஜனவரி 9-ம் தேதி ரிலீஸிக்குத் தயாராகி வருகிறது.
அ.வினோத் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் நான்கு பாடல்கள் இதுவரை வெளியாகி இருக்கிறது.

கூடிய விரைவில் படத்தின் மொத்த மியூசிக் ஆல்பமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. நாளை அந்த இசை வெளியீட்டு விழா ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவிருக்கிறது.
இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ், இந்த டிரெய்லரை எடிட் செய்திருக்கிறார். இப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் தளபதி வெற்றிக் கொண்டான் என இந்த டிரெய்லரின் மூலம் அறிவித்திருக்கிறார்கள்.

'மக்களுக்கு நல்லது பண்ண, அரசியலுக்கு வாங்கடானு சொன்ன, கொள்ளையடிக்க வர்றீங்க', 'மக்கள் அவனைக் கொண்டாடிட்டு இருக்காங்க. இப்போ கொன்னா கடவுள் ஆக்கிடுவாங்க', 'திரும்பி போகிற ஐடியாவே இல்ல!' என்பது போன்ற வசனங்கள் ஹைலைட்டாக இந்த டிரெய்லரில் அமைத்திருக்கிறார்கள்



















