நெல்லை: மருத்துவ அறிவுரையை மீறி வீட்டில் மனைவிக்கு பிரசவம் பார்த்த நபர்; வயிற்றி...
T20 World Cup: "இந்தியாவுடன் விளையாடுகிறோம்; ஆனால்" - ஐசிசிக்கு பாகிஸ்தானின் நிபந்தனைகள் என்னென்ன?
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
இந்த டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது போட்டியில் பங்கேற்பதற்காகச் சில நிபந்தனைகளை ஐசிசிக்கு முன் வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று (பிப். 8) நடைபெற்றிருக்கிறது.
இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் ஆகியோர் கலந்துகொண்டிருக்கின்றனர்.
பாகிஸ்தான் வாரியத்தின் நிபந்தனைகள்
இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், இந்தியாவுடனான போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதாக 'Telecom Asia Sport' ஊடகம் தெரிவித்திருக்கிறது. அதன்படி,
* உலகக்கோப்பையில் இருந்து நீக்கிய வங்கதேச அணிக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைக் கொடுக்க வேண்டும்.

* ஐசிசி வருவாயில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பங்கை அதிகரித்து வழங்க வேண்டும்.
* இந்தியா - பாகிஸ்தான் இடையே இருதரப்புப் போட்டிகள் மீண்டும் நடந்தப்படவேண்டும்.
* போட்டியின்போது பரஸ்பரம் இரு நாட்டு அணிகள் கை குலுக்குவதைக் கட்டாயமாக்க வேண்டும்" என்று சில நிபந்தனைகளை ஐசிசிக்கு முன் வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.



















