செய்திகள் :

'The Carrom Queen' - திரைப்படமாகும் காசிமாவின் கேரம் சாம்பியன் கதை! வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்!

post image

புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் காசிமா (17), அமெரிக்காவில் நடந்த உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கப்பதக்கங்கள் வென்று சாதனைப் படைத்து தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தார்.

சமீபத்தில் நடந்த 7வது கேரம் உலகக் கோப்பை போட்டி 2025-ல் குழுப்போட்டியில் தங்கப் பதக்கமும், தனிநபர் பிரிவில் வெண்கல பதக்கமும், இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்று மீண்டும் சாதனை படைத்தார்.

The Carrom Queen படம்

``மகளுக்கு 1 கோடி பரிசு; தமிழ்நாடு அரசுக்கு நன்றி"- நெகிழும் காசிமாவின் அப்பா

இதுகுறித்து நெகிழ்ச்சியாகப் பேசிய காசிமா, "6 வயது முதல் பயிற்சி எடுத்து வருகிறேன். 7 வயதில் தேசிய அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தேன். எனது அப்பாதான் கோச்சிங் கொடுத்து வருகிறார். தமிழ்நாடு கேரம் சங்க செயலாளர் மரிய இருதயமும் எனக்கு கோச்சிங் கொடுக்கிறார். என் வீட்டின் சுவர், கண்ணாடி என எல்லா இடத்திலும் ‘I’m a world champion one day’ என எழுதி வைத்திருப்பேன்.“ என்றார். தமிழகமே காசிமாவைப் பாராட்டி, கொண்டாடியது.

இப்போது காசிமாவின் கேரம் வெற்றிப் பயணத்தை மையமாகக் கொண்டு திரைப்படம் ஒன்று உருவாகவிருக்கிறது. அப்படத்திற்கு 'தி கேரம் குயின் (The Carrom Queen)' என்று பெயரிடப்பட்டுள்ளது.

The Carrom Queen படம்
The Carrom Queen படம்
The Carrom Queen படம்
The Carrom Queen படம்

ராண்டிய பூமேஷ், காளிவெங்கட், ரிஷி பிரகாஷ், அப்துல்லா உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். முரளி இப்படத்தை இயக்குகிறார். 'Nihan Entertainments' இப்படத்தைத் தயாரிக்கிறது.

BB Tamil 9 Day 66: கம்முவின் பெஸ்டி பாரு ; ஆதிரை - FJ ரொமான்ஸ் 2.O - 66-வது நாளில் நிகழ்ந்தது என்ன ?

கோர்ட் டாஸ்க்கில் அனைத்துமே காதல் சேட்டைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளாகவே வருகின்றன. விதிவிலக்காக சுபிக்ஷாவின் ‘பாட்டு இம்சை’ பற்றிய வழக்கு ஆறுதலான காமெடியாக இருந்தது. தான் செய்த தவறுக்காக வீடு முழுக்க த... மேலும் பார்க்க

எடப்பாடி, கனிமொழி முதல் அன்புமணி வரை; ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்துகள் பகிரும் பிரபலங்கள்!

தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். திரையுலகில் 50 ஆண்டுகளாக தன் ரசிகர்களை அதே உற்சாகத்துடன் வைத்திருக்கும் ரஜினி, தன் வயதையும் கடந்து தொடர்ந்து நடித்தும் வர... மேலும் பார்க்க

HBD Rajini: `ரஜினி பாதுகாக்கும் அந்த கடிதம் டு '16 வயதினிலே' சம்பளம்.!’ - 75 சுவாரஸ்ய தகவல்கள்!

இந்திய திரையுலகில் 50-வது ஆண்டை கொண்டாடுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பவர்ஃபுல்லான கண்கள்.. அறிமுகமான 'அபூர்வ ராகங்கள்' படத்திலிருந்து தனித்துவமான உடல்மொழி, விதவிதமான ஸ்டைல்கள், கவர்ந்திழுக்கும் ... மேலும் பார்க்க

Simran: ``இந்தக் கேள்வி கேட்டதற்கே நன்றி... ரஜினி சாருக்கு வாழ்த்துகள்" - நடிகை சிம்ரன்

சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் நடைபெறும். அதன் அடிப்படையில், 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 11 முதல் 18-ம் தேதி வரை சென்னை பிவிஆர் சினிமாஸிஸ் நடைபெற உள்ளது. ... மேலும் பார்க்க